செ. பத்மநாதன் இலகுவாக கடத்திச் செல்லப் பட்டமையும் அதற்கு எதிராக எவராலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல போனதும் சிங்களத்தின் பயங்கரவாதம் எல்லை தாண்டி செயற்பட முடியும் என்பதையும் எல்லை மீறி நிற்பதையும் உணர்த்தி நிற்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று சிங்களம் கொக்கரித்து நிற்கிறது.
சிங்களப் பயங்கரவாதத்திற்கான ஆதரவு டெல்லியிலிருந்து மட்டுமல்ல கோபாலபுரத்திலிருந்தும் கிடைக்கிறதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டாம் ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளவேண்டியதுதான் என்று கோபால புரத்திலிருந்து அறிக்கை வெளிவந்தது மட்டுமல்ல இலங்கையில் இப்போது சுமூக நிலை திரும்பிவிட்டது என்று கூட கோபாலபுரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்திமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டியது ஒன்றுதான் மிச்சமிருக்கிறது.
தமிழ் மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை கண்டும் காணமல் இருப்பவர்கள் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சிங்களம் நடவடிக்கை எடுத்தால் தடுப்பார்களா?
சிங்களம் இப்போது இருக்கும் திமிர் பிடித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்காது. ஈழத்தமிழ்த் தேசிய போராட்டம் மீண்டும் உக்கிரம் கொண்டு எழுவதற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் மற்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள்.
இந்த ஆதரவுப் பலத்தை சிதறடிக்க சிங்களம் எதுவும் செய்யும். அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களுக்கு சிங்களத்தால் ஆபத்து உண்டு.
5 comments:
//தமிழ்நாட்டில் இந்திமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டியது ஒன்றுதான் மிச்சமிருக்கிறது//.
மீண்டும் இந்தி திணி்ப்புக்கு தயாராகும் கபில் சிபல்
டெல்லி: நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
உயர்கல்வி வாரியக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர்,
அனைத்து மாநிலங்களிலும் அனைத்துப் பள்ளிகளிலும் பிராந்திய மொழியுடன் தேசிய மொழியான இந்தியும் கற்பிக்கப்பட வேண்டும். பல மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் புலமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள்.
ஆனால் பிற மாநில மொழிகளையும் கற்றுக் கொள்வதன் மூலம்தான் அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று வெற்றிகரமாகப் பணியாற்ற முடியும்.
முக்கியமாக தேசிய மொழியான இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வட மாநிலங்களுக்கு வரும் பிற மாநில மாணவர்களால் சரளமாக இந்தி பேச முடிவதில்லை. ஆனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள். எனவே நமது நாட்டுக்குள் முக்கியத் தொடர்பு மொழியாக இருக்கும் இந்தியை அனைத்து மாணவர்களும் அறிந்திருப்பது அவசியம்.
இந்தியை அனைவருக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க இதுதான் சரியான தருணம் என்றார்.
இந்தி பேசும் மாநிலங்களில் என்னமோ வேலைவாய்ப்பு கொட்டிக் கிடப்பது மாதிரி பேசியிருக்கிறார் கபில் சிபல். அங்கு வேலைகள் இருந்தால் ஏன் பெங்களூர், சென்னை, ஹைதராபாத்துக்கு வட இந்தியர்கள் வேலை தேடி படையெடுக்கிறார்கள் என்று கபில் யோசித்துப் பார்ப்பது நல்லது.
http://thatstamil.oneindia.in/news/2009/08/25/india-kapil-sibal-wants-hindi-to-be-taught.html
ஒரு குடும்பத்திற்கு இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டுவருவதால் நலன் உண்டென்றால் கொண்டுவர வேண்டியது தானே!!!!மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று அண்ணா சொன்னார் என்று சொல்லித் தப்பிக்கலாம்...
Anything possible...
Limitless betrayal....
தமிழன் இளிச்சவாயனாக இருக்கும் வரை எதுவும் நடக்கலாம்.
நிறுத்தப் படாத போரை நிறுத்தப் பட்டது என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெறவில்லையா?
Post a Comment