பத்மநாதனை கைது செய்ததாக இலங்கை பாதுகாப்பு இணையத்தளம் நேற்று அறிவித்தது. அவர் எங்கு எப்படி கைதானார் என்று தெரிவிக்கவில்லை.
சிறிலங்கா காடியன் இணையத் தளம் அவர் பாங்கொக்கில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.
அவர் வெளிநாடொன்றில் கைது செய்யப் பட்டதாக டெய்லி நியூஸ் தெரிவித்தது.
டெய்லி மிறற் அவர் கைது செய்யப்பட்டதாக மட்டும் முதலில் அறிவித்தது. பின்னர் வெளிநாட்டில் உள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிரான ஒரு ஊடகவியலாளரை ஆதாரம் காட்டி பத்மநாதன் மலேசியாவில் விடுதலைப் புலிகளின் உள்ளக காட்டிக் கொடுப்பின் பேரில் 'கைது' செய்யப் பட்டதாக கூறியது.
அல்ஜசிரா பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப் பட்டதாக தெரிவித்தது.
இந்நிலையில் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்ததாக இலங்கை அரசின் தகவலை அறிந்த தாய்லாந்து அரசு அது தொடர்பாக விசாரித்து அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தது. நள்ளிரவு தாய்லாந்து அதிகாரிகள் விழித் தெழுந்து இதைச் செய்யுமளவிற்கு அவர் அங்கு முக்கியத்துவமானவரா?
பத்மநாதன் கைது தொடர்பாக செய்தி வெளியிட்ட சகல வெளிநாட்டு செய்தி ஊடகங்களும் கொழும்புச் செய்திகளையே ஆதாரம் காட்டின. அவர் கைது செய்த நாட்டிலிருந்து செய்தி வெளிவிடவில்லை.
பத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின்படி:
நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.
பிற்பகல் அளவில் குறிப்பிட்ட அந்த 'ரியூன்' விடுதிக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், அவர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.
பின்னர் - பிற்பகல் 2:00 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்லிடப்பேசி அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரியவநு்துள்ளது.
பத்மநாதனின் ஊடக உதவியாளரின் தகவலின் படி கைது செய்யப்பட்ட நபர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தொலைபேசியில் உரையாடும் போது தான் சட்டவல்லுனர் ருத்திரகுமாருடன் நீண்டநாட்களாக கதைக்கவில்லை என்று கூறியது தனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். பத்மநாதனின் கைது தொடர்பாக தமிழ்நெற்றும் ஐபிசி வானொலியும் மௌனமாகவே இருக்கின்றன. தமிழ்நெற்றின் மௌனம் எப்போதும் பாரிய மர்மத்தின் அறிகுறி!
சென்ற வாரம் மேற்கு நாடுகளில் வெளிவரும் பரபரப்பு பத்திரிகை பத்மனாதனின் தற்போதைய படம் என்று சொல்லி ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அப்படம் அவரே தமக்கு வழங்கியதாகவும் அப் பத்திரிகை தெரிவித்தது.
இப்படத்தை பத்மநாதனின் சனல்-4 தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் உள்ள உருவத்துடன் ஒப்பிட முடியவில்லை. திடீரென்று தனது படமென்று சொல்லி ஒரு படத்தை வெளியிடக் காரணமென்ன? இன்னொருவரை மாட்டிவிட்டாரா?
இலங்கை அரசின் நாடகமா?
கைது செய்ததாகச் சொல்லப் படும் ஒட்டலின் உள்ளக கணகாணிப்பு ஒளிப்பதிவுகளில் அந்த இடத்திலிருந்து எவரும் விருப்பத்திற்கு மாறாக அப்புறப் படுத்தப் பட்டதாக பதியப்படவில்லை. இலங்கை அரசே ஒருவரை அமர்த்தி இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற சந்தேகம் சம்பவம் நடந்த இடத்தில் பத்மநாதனைச் சந்திக்கச் சென்ற வர்மன் என்ற ஊடக வியலாளர் ஜிடிவிக்கு அளித்த பேட்டியிலிருந்து தெரிய வருகிறது. ஆரிய-சிங்களக் கூட்டமைப்புடன் நல்ல உறவுகளைப் பேணி வரும் மலேசியாவிற்கு பத்மனாதன் செல்வாரா? பத்மனாதனின் நடவடிக்கைகள் சிங்கப்பூர் சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்டவர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து முகத்தை மூடியபடியே ஏன் கொண்டு செல்லவேண்டும். இப்போது ஒரு கேள்வி எழலாம்! ஏன் இலங்கை இந்த நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்? புலிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கும் இலங்கை அரசு சர்வதேசிய ரீதியில் புலிகள் நாடுகடந்த அரசாங்கம் ஒன்று அமைக்க முயல்வது. சிங்கள மக்கள மத்தியில் புலிகளை அழிக்க முடியாது என்ற எண்ணத்தை மீண்டும் வளர்த்துவிடும். சரத் பொன்சேகாவின் அதிருப்தியும் அதனால் அவர் வெளிநாடு செல்லவ்இருக்கிறார் என்ற செய்தியும் ராஜபக்சே குடும்பத்திற்கு தேர்தல் ரீதியாகச் சாதகமானதல்ல. பொன்சேகவிற்க்கு அப்பாலும் தம்மால் தமிழ்த்தேசியத்திற்கு எதிராக வெற்றி பெறமுடியும் என்று காட்ட முடியும். பத்மநாதனை நீதிமன்றில் நிறுத்தும் வரை அல்லது பகிரங்கப் படுத்தும் வரை இச் சந்தேகம் இருக்கும்!!!!
07/08/2009 GMT 10:45 வரை இன்ரர்போல்(Interpol - சர்வதேசக் காவற்துறை அமைப்பு) இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.
8 comments:
Thai Government spokesman Panitan Wattanayagorn today said that K.P, had been arrested in the Malaysian capital Kuala Lumpur and not Thailand. "The National Intelligence Agency has confirmed with the government that K.P. was arrested in Kuala Lumpur on Wednesday night and he was transferred to Sri Lanka via Bangkok airport,"
இறந்தவர்கள் இறக்கவில்லை..
கைதானவர்கள் கைதாகவில்லை...
குழப்பம்....
While every one is giving the news, you are giving what is behind the news....
இந்தியாவின் உதவியின்றி மலேசியாவில் இதைச் சாதித்திருக்க முடியாது....
கே,பி.யை இன்டர்போல் கைது செய்திருப்பதாக இலங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் கூறியதுஆனால் இனடர்போல் ஒருவரை கைது செய்தால் எந்த நாட்டில் கைது செய்கிறார்களோ அந்த நாட்டில் வைத்து விசாரிப்பார்கள்..
கைது செய்ய பட்டதாக இலங்கை அறிவித்துள்ளது . அப்படியென்றால் அதை கண்டித்து தலைவரை விடுவிக்க கோரியும் மக்கள் போராட்ட்டம் நடத்த பட வேண்டும் . அதை விட்டு விட்டு கைது செய்ய வில்லை . இது நாடகம் என மக்களை திசை திருப்ப கூடாது . இதே போல தான் தேசிய தலைவர் மரணமடைந்தார் என்ற செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்க வேண்டும் . அதையும் நாம் தான் தடுத்தோம் நாளை இவைகள் எல்லாம் உண்மை என்று தெரியும் போது நாம் தோற்கடிக்க பட்டோம் என்பதை உணருவோம்
பத்மநாதனை "என்கவுண்டர்" பாணியில் போட்டுத் தள்ளிவிடுவார்கள். அதைத் தடுக்க இப்படியான சந்தேகங்கள் எழுப்பப்பட வேண்டும்...
அப்போதுதான் அவரை மனித உரிமை அமைப்புகளையாவது சந்திக்க அனுப்புவார்கள்...
தமிழன் ஒருவரை ஒருவர் நம்ப முடியாத படி, எது உண்மை எது பொய் என்று குழம்பும் படிச் செய்து சிங்களவன் கொன்று கொண்டிருக்கிறான்.
மக்களையும்,அரசியல் கைதிகளையும் உலகச் சட்டத்தின் படி நடத்தப் போராட்டங்களும்,சிங்கள அரசை,இலங்கைப் பொருள்களை உலகம் ஒதுக்கவும் போராட வேண்டும்.
இதன் பின்னால் முகம் மூடி அலையும் இந்தியா வல்லரசு அல்ல,
மானங்கெட்ட மூன்றாந்தர அரசு.
Post a Comment