Thursday, 6 August 2009
பார்ப்பன அன்பர்கள் எனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்களா?
முதலில் இந்தப் பக்கத்திற்கு சென்று (எச்சரிக்கை: படங்கள் மிகவும் மோசமானவை உங்கள் மனதைப் வெகுவாகப் பாதிக்கலாம்) இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்களைப் பாருங்கள்:
http://picasaweb.google.com/tamilnational/TamilGenocidePartIV?feat=embedwebsite#
இலங்கையில் இந்தனை கொடூரங்களும் நடந்தேறிவிட்டன. இதை எதிர்த்து சிங்களவர்கள் பலர் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் குரல்கள் முடக்கப்பட்டுவிட்டன. ஒரு சிங்கள இராணுவ அதிகாரியே இராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் மோசமான வன்முறையை பற்றி தனது அதிருப்தியைத் தெரிவித்தாராம்.
இப்போது எனது கேள்வி இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக எத்தனை பார்ப்பன அமைப்புக்கள் குரல் கொடுத்தன. இலங்கைத் தமிழ் பாராளமன்ற உறுப்பினர் ஒருவர் சங்கராச்சாரியார் உட்பட பல இந்து மதத் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றும் படி வேண்டினார். இதற்கு இவர்கள் செய்தது என்ன? இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணிய சுவாமி, மணிசங்கர ஐயர் போன்றோர் மட்டும் பார்ப்பனர் அல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் தமிழ்நாட்டில் வாழும் பார்பனர்கள் தமிழர் பக்கமா அல்லது சிங்களவர் பக்கமா அல்லது "தர்மத்தின்" பக்கமா என்று அறியத்துடிக்கிறோம். தயவு செய்து யாராவது பதில் தாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
21 comments:
உண்மையில் நடந்தவை அப்படங்களிலும் மோசமானவை....
உங்க பிராப்த பலனடா அபிஷ்ட்டு....அபிஷ்ட்டு...
ராஜீவ்காந்தியைக் கொன்றவர்கள் நீங்கள்தான் என்று சொல்லுவார்கள்..
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹா...என்று சொல்வார்கள் முமூர்திகளுமான அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்...
ஈழத்து மக்களுக்கு நடந்தவை இதிலும் மிக மோசமானவை, இவ்வளவு மோசமான நிலைக்கும் காரணம் இந்தியா. (ஓட்டு மொத்த இந்தியர்களையும் நான் சொல்லவரவில்லை) http://www.tamilkathir.com/news/13052009_mullivaikkal_murder.aspx இந்த LINK இல் உள்ள படத்தை பார்க்கவும்.
ஆறுதலளிக்கும் பதில் எதுவுமில்லை...
Om Bhur Buvaha Suvaha
Thath Savithur Varenyam
Bhargo Devasya Dheemahi
Dhiyo Yonaha Prachodayath
Meaning
We contemplate the glory of Light illuminating the three worlds: gross, subtle, and causal.I am that vivifying power, love, radiant illumination, and divine grace of universal intelligence.We pray for the divine light to illumine our minds.
வினாச காலே விபரீத புத்தி...
நான் எமது கடமைகளைச் செய்வோம்...மாற்றான் கருத்துக்கள் நமக்கு எதற்கு...
நண்பரே,
இலங்கைத் தமிழர்கள் நலமாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எல்லாத் தமிழர்களும் மட்டுமில்லை. எல்லா இந்தியர்களும் நினைப்பார்கள்.(அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள்). இது ஜாதி,மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த விஷயத்தை ஜாதி அடிப்படையில் அணுகுபவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள்.
http://kgjawarlal.wordpress.com
Jawarlal சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாத் தமிழர்களும் எல்லா இந்தியர்களும் இலங்கைத் தமிழர் நலமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களாம். தமிழர்களைக் கொல்ல பணம் பயிற்ச்சி ஆயுதம் மட்டுமல்ல பத்தாயிரம் படையினரையும் அனுப்பியது யார்?
//ஆறுதலளிக்கும் பதில் எதுவுமில்லை...//
இவர்களுக்கு எதைச் சொன்னாலும் திருப்தியோ ஆறுதலோ ஏற்படப் போவதில்லை.
அதனால் மௌனமாக இருப்பது உத்தமம் என்று இருக்கிறார்கள் போலும்.
நிச்சயமாக எல்லோரும் தமிழ் மக்கள் நீதிக்காக நிம்மதிக்காக பிரார்த்தனை செய்திருப்பார்கள். யாகங்கள் செய்திருப்பார்கள். இறைவனிடம் இறைஞ்சி அழுதிருப்பார்கள்.
இதையெல்லாம் சொல்லித் ஆவதொன்றும் இல்லை.
பெரிய பெரிய தலைகளின் சபதம் சாபம் போல் இவர்களின் பிரார்த்தனைகளையும் விமர்சனமும் வேடிக்கையும் செய்து உடப்பில் போட்டிருப்பார்கள்.
Does Hindu Ram and Cho know that Prabhakaran's oringinal freedom thoughts were born when he saw his "Kurukkal" of their temple was burnt to death alive by Sinhalese mobs?
Does Hindu Ram and Cho know that Hindu Priests don't have the same rights as buddhist monks even in public transport in Sri Lanka where the front seats need to be vacated when a buddhist monk comes on..
They may.. but they are cheap enough to get bribed by the SL ambassodor to glorify Sri lanka and send their own reporters to watch and genocide in the final days...
///Jawarlal சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாத் தமிழர்களும் எல்லா இந்தியர்களும் இலங்கைத் தமிழர் நலமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்களாம். தமிழர்களைக் கொல்ல பணம் பயிற்ச்சி ஆயுதம் மட்டுமல்ல பத்தாயிரம் படையினரையும் அனுப்பியது யார்?///
தமிழர்களைக் கொல்ல பணம் பயிற்ச்சி ஆயுதம் மட்டுமல்ல பத்தாயிரம் படையினரையும் அனுப்பியது யார்?
சோனியா என்ற கிருதுவச்சி, மற்றும் அவருடைய அடி பொடிகள் ,
இது எதையும் தட்டி கேட்காமல் தன்னுடைய ஆட்சி மற்றும் குடும்பமே பெரிது என நினைத்த கருணாநிதி என்ற மேளக்கார ஜாதி மற்றும் அவருடைய அடி பொடிகள்.
இதில் எங்கிருந்து பார்பான் வந்தான் ?
இதில் எங்கிருந்து ஜாதி வந்தது ?
இப்படியே எல்லாவற்றிலும் ஜாதி பார்த்தால் இந்தியா எப்படி முன்னேறும் ?
எல்லோரையும் மனிதர்களாக பாருங்கள் .
மனிதர்களுள் பல வகை , அவ்வளவுதான்.
நன்றி.
Yes...A pappan from 'Art of Living' tried his own...
புத்த பிக்குகளே "வலியை ஏற்றுக்கொள்"என்பது இது தானா?
செய்தி நன்றி:- தட்ஸ் தமிழ்
புத்த நாடுகள் அனைத்தும் சேர்ந்து இலங்கையை காப்பாற்ற வேண்டும் - ராஜபக்சே
கொழும்பு: உலகில் உள்ள அனைத்து புத்த நாடுகளும் இணைந்து, இலங்கைக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் சதியைத் தகர்த்து, இலங்கையைக் காக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் [^] ராஜபக்சே.
இலங்கையை முழுமையான புத்த நாடாகவும், சிங்கள தேசமாகவும் மாற்றும் சதித் திட்டத்தின் முதல் படியாக இது பார்க்கப்படுகிறது.
பெளத்தம் என்ற மத உணர்வைத் தூண்டி விட்டு, உலகில் உள்ள பெளத்த மத நாடுகளின் ஆதரவைத் திரட்டி, அதன் மூலம் மேற்கத்திய நாடுகளையும், இலங்கையை விமர்சிக்கும் நாடுகளையும் சமாளிக்க ராஜபக்சே திட்டமிடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜபக்சே பேசுகையில், மேற்குலக நாடுகளின் நகர்வுகளை முறியடித்து இலங்கையை காப்பாற்ற உலகில் உள்ள பௌத்த நாடுகள் முனவர வேண்டும். இந்த நாடுகளை இலங்கையின் பக்கம் திருப்புவதில் பௌத்த துறவிகள் முக்கியப் பணிகளை ஆற்ற முடியும்.
பண்டைய காலத்தில் இருந்து பௌத்த துறவிகள் இலங்கையின் வரலாற்றில் பல முக்கியப் பணிகளை ஆற்றியுள்ளனர். அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பணிகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இதன் மூலம் ஏற்கனவே சிங்கள இனவெறியுடன் நடந்து வரும் புத்த பிக்குகள் தமிழர்களுக்கு எதிராக மேலும் தீவிரமாக நடப்பார்களோ என்ற அச்சம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தம்பி வேல் கம்பு
முதலில் கால் நூற்றாண்டு தண்டனையை சிறையில் அனுபவித்த குழந்தையும் பிரிந்த ,இரண்டு முதுகலையை சிறையில் முடித்த நளினியை விடுதலை செய்ய
ஏதேனும் முயற்சி
எடு
எடுத்தோம் கவுத்தோம்னு எழுதாத.
நானும் பாப்பான் தான்.
என்னை மாதி உண்மையான அனுதாபிகளையும் உன் மட்டமான தலைப்பு சொரியுது.
உன்னை விட நான் நல்லாவே இந்த கொடுமையை எதிர்திருக்கேன்.
நாலு குடிகேடிங்க எல்லா ஜாதிளையும் தான் இருப்பான்.
முதல்ல அதை புரிஞ்சிக்கோ.
இதுல நீ சிங்களன போய் சப்போர்ட்டு பண்ணற?
http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_7710.html
மிகவும் மனதை பாதிக்க கூடிய விசயங்கள்... கண்டிப்பக இலங்கை தமிழருக்கு ஒரு வழி பிறக்கும்.
இந்தியா எப்பவுமே இலங்கை ஆதரவாக செயல்படுகிறது. ஒரு மாற்றம் வேண்டும்.
ஒரு சிலரை வைத்து ஜாதியை குறை கூறுவது மிகவும் தவறு.
Arivaith tholaitha Karthigeyan thodarthum arivai thedaddum.....
He has no idea of what is happening Srilanka and who is behind it..
அன்பு நண்பரே...
நடந்த ஒரு சமூக அழிபிற்கு ஜாதிய சாயம் பூசுகிறீர்களே.. எந்த வகையில் இது ந்யாயம். இந்த நாட்டில் மொத்தம் 100 சாதிக்கு மேல உள்ள நிலையில், எந்தெந்த சாதி அமைப்பினர் ஆதரவு அளிகின்றனர் என்று நீங்கள் கேட்டீர்களா?
உங்களை போன்ற பெரியோர்கள் சொல்லும் BJP என்ற பார்பன கட்சி, LTTE மீதான தடை விலக்குவது பற்றியும் ஈழ தமிழர் நலன் பற்றியும் வாக்குறுதி கொடுத்த ஒரே தேசிய கட்சியாகும்.
இனிமேலாவது ஒரு தேசிய பிரச்சனையை சாதிய பிரச்சனையாக அணுகாமல் இதயத்தோடு பேச முற்படுங்கள்... உங்கள் மனதில் மனிதம் மலர வாழ்த்துக்கள்
the ruling power in india is brahmins. thats what val said. leave our prolbem. ppl who asked to be human, what happend to kaveri krisha and mullai periyar. what happend to fisher man? comeon. think as a tamil. feel the real hell waiting for the TN tmails.
Post a Comment