
முன்னாலே சென்றவரின்
பின்னாலே செல்வோமென்று
சொன்னாலே விளங்குது
பின்னாலே தள்ளுவது
புதினங்கள் புதிர்களாகின்றன
வின்னுகள் மண்ணாகின்றன
நெற்றின் மௌனம் பேசுவதென்ன
நெருடலா இல்லை வருடலா?
விகடனின் கபடமா?
நக்கீரனுக்கும் மூன்றாம் கண்ணா?
உயிர் காக்கப் பொய் சொல்லலாம்
உணர்வழிக்கப் பொய் சொல்லலாமா?
உணர்வின்றி உயிர் எதற்கு?
புலத்தின் பலத்தில்தான்
இனத்தின் விடிவுண்டா?
புலத்தையும் பிரித்தாண்டால்
பலத்தையும் அழிக்கலாம்.
பேயகமொன்றை
தாயகமென நம்பி
சேயகம் இங்கு
நோயகமானது
எதிரிகளின் பின்னாலே
சென்றவர்கள் தொடர்கின்றனர்
பின்னாலே எம்மினத்தைத்
தள்ளி விடுகின்றனர்
.ஆண்ட பரம்பரை
மீள ஆள நினைக்கிறதா?
அடி வாங்கிய பரம்பரை
மீண்டும் அடி வாங்குகிறதா?
.
இவ்வளவு நடந்த பின்னும்
இப்படியான பின்னும்எம்
முதுகில் இன்னும்
இடந் தேடுகின்றனர்.
முன்னாலே வாழ்ந்த தமிழர்கு
ஒரு நீண்ட வரலாறுண்டு
தமிழன் வரலாறு
துரோகத்தின் வரலாறு
காக்கை வன்னியனில்தொடங்கவுமில்லை
நேற்றோடு முடியவுமில்லை
No comments:
Post a Comment