Monday 15 June 2009

விடுதலைப் புலிகளுக்கு வீழ்ச்சியைக் கொடுத்த இந்திய விசுவாசம்


விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பீடத்திலிருந்து கடந்த மூன்று வருடங்களாக வெளிவந்த அறிக்கைகள் பல இந்தியாவின் கொள்கை தமக்கு சார்பாக மாறவேண்டும் என்பதாக இருந்தது. சரணடையச் சென்ற வேளையில் படுகொலை செய்யப் பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் பலதடவை இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தாம் என்று சொல்லியுள்ளார். இந்தியப் படைகளும் ஆயுதங்களும் பயிற்ச்சிகளும் தமது எதிரியுடன் நின்ற இறுதிக்கட்டப் போரில் கூட இந்தியாவைத் தாக்கி ஒரு அறிக்கை கூட விடுதலை புலிகளால் வெளியிடப் படவில்லை.
.
1988-1990 இல் சீனாவிற்கு சில விட்டுக்கொடுப்பை விடுதலைப் புலிகள் செய்திருந்தால் சீனாவிடமிருந்து நவீன ஆயுதங்கள் உட்பட பல உதவிகளை புலிகள் பெற்றிருக்கலாம். அந்த இக்கட்டான கட்டத்திலும் விடுதலை புலிகளின் தலைமை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க மறுத்தது.
.
1999 இல் விடுதலைப் புலிகள் பலமிக்கவர்களாக இருந்தபோது அமெரிக்கா திருக்கோணாமலையும் ஜப்பான் காங்கேசந்துறையையும் தமக்குத் தரும்படியும் கேட்டனவாம். பதிலாக தனிநாடு அமைப்பதற்கான உதவிகளை அவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கத் தயாராக இருந்தனவாம். இதையும் விடுதலைப் புலிகளின் தலைமை மறுத்தது. அதிலிருந்து மேற்குலகம் விடுதலைப் புலிகள் தொடர்பான தமது நிலைப் பாட்டை மாற்றிக் கொண்டன. இறுதியில் இதே விடுதலைப் புலிகளின் இறுதிக்காலத்தில் நண்பர்கள் யாருமற்ற நிலையை உருவாககியது.

1 comment:

Anonymous said...

இந்தியாவின் துரோகம்,
சிங்கள் நம்பிக்கை
இந்தியாவுக்குச் சீனாவிடமிருந்து
கிடைக்கப் போகும் செருப்படி
சிங்களம் சிரிக்குமே தவிர
இந்தியாவை ஆதரிக்காது.
மவுண மோகனும், அவரது முதலாளி அம்மையாரும் உயிருடன் இருந்து பார்த்து நொந்து போவார்கள்.
மக்கள் காரித்துப்புவார்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...