சக்கரம் சுழல்வ தெப்படி?
திண்ணை மெழுகுவ தெப்படி?
அச்சாணியிட்டு.
.
இந்தக் கவிதை எங்கேயோ படித்த ஞாபகம்.
இக் கவிதை வடிவத்திற்கு என்ன பெயர்?
யாருக்காவது தெரிந்தால் அறியத் தரவும்.
இதைப் போன்று சில கவிதைகளை நான் எழுத எடுத்த முயற்சியால் உருவான வரிகளைக்கீழே தந்துள்ளேன்:
.
காதலன் கை துடிப்பதேன்?
விளக்கின்மேல் கை வீசுவதேன்?
அணைப்பதற்கு.
.
கலைஞன் திமிர் பெருகுவ தெப்படி?
கன்னி நெஞ்சம் பொருமுவ தெப்படி?
இணையின்றி
.
கலவியில் இணைவதெங்கே?
கல்வியில் உயர்வதெங்கே?
பள்ளியறையில்.
.
மாமியார் தேடும் மருமகள் யார்
மறைந்துபோன ஒரு மகள் யார்
அடக்கமானவள்
6 comments:
இப்படி ஒரு கவி வடிவம் இருப்பதே இப்போதுதான் எனக்கு தெரியும் ...
நன்றிங்க
நானும் கொஞ்சம் ரை பண்ணலாம் எண்டு இருக்கன்.
இந்த வடிவத்தில் நிறைய பாடல்கள் (சினிமா) கேட்டு இருக்கிறோம்
கலவியில் இணைவதெங்கே?
கல்வியில் உயர்வதெங்கே?
பள்ளியறையில்.
.//
நல்லா இருக்கு!!
பசுவின் பால் கறப்பது எப்படி?
பாண்டவர்கள் பிறந்தது எப்படி?
குந்தி இருந்து
பாம்பு ஓடுவது ஏன்?
பாலங்கினறு இடிவது ஏன்
அடிப்பார் அற்று
குளத்து மீன் பெருகுவது எப்படி
குமரி மார்பு சிறுப்பது எப்படி
பிடிப்பார் அற்று
enaku perusa therijadu nan kelwipadda waraijil iwaikalai vidukadaik kavikal endru sonnadah arikiren unmai poi therijadu enadu paddi ipadi adikadi solli ennai sotu oodija japagam irukuradu. nantri
Post a Comment