
இலங்கைக் கடற்படையிடமிருந்து இரண்டு டோராப் படகுகள் உட்பட பல படகுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கைப்பற்றி இருந்தனர். அந்தப் படகுகள் இப்போது எங்கே? அவற்றை மீளக் கைப்பற்றியதாகவோ அல்லது அவற்றை தாமோ அல்லது புலிகளோ அழித்ததாகவோ இது வரை எந்தத் தகவலும் இலங்கை அரச தரப்பிலிருந்து வரவில்லை. இப்படகுகள் எங்கு சென்றன? எப்போது சென்றன? மூன்று வாரங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் பகுதியில் இருந்து ஒரு படகு தப்பி ஓடியது. அதைக் கைப்பற்று முகமாக இலங்கைக் கடற்படையினர் துரத்திச் சென்றபோது அது கடற்படையினர் அண்மையில் சென்றவுடன் வெடித்துச் சிதறியது. துரத்திச் சென்ற படகும் வெடித்து இலங்கைக் கடற்படையினர் கொல்லப் பட்டனர். இது புலிகள் முன்பு செய்யாத ஒஐ உத்தி. இதன் நோக்கம் கடற்படையினரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு வேறு படகுகள் தப்பிச் செல்லவா? அதில் தப்பிச் சென்றவர்கள் யார்?
No comments:
Post a Comment