Friday, 15 May 2009

பலத்த பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கும் இலங்கை


அண்மைக் காலங்களில் இலங்கை இராணுவம் பலத்த இழப்புக்ளைச் சந்தித்து வருகிறது. சென்ற வாரம் அநுராதபுரத்தில் உள்ள மருத்துவ மனைகள் காயப்பட்ட பெருந்தொகையான இராணுவத்தினரால் நிரப்பப்பட்டன. இப்போது அநுராதபுர மருத்துவ மனைகளில் இட நெருக்கடியால் காயப்படும் இராணுவத்தினர் கொழும்பிற்கு எடுத்துச் செல்லப் படுகின்றனர். கடந்த மூன்று தினங்களாக நோயாளர் காவு வண்டிகள் பல கொழும்பு வீதிளில் பெருமளவில் ஓடித்திரிந்தன. இவை பல இராணுவத்தினர் இறப்பதையும் காயப் படுவதையும் எடுத்துக் காட்டுகின்றன. இனி வரும் காலங்களில் இறந்த இராணுவத்தினர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதிலும் காயப் பட்ட இராணுவத்தினரை பராமரிப்பதிலும் இலங்கை அரசிற்கு பெருந் தொகைப் பணம் தேவைப்படும்.
.
.
சர்வ தேச நாணய நிதியத்தின் கடன் கிடைப்பது சிரமம்.
ஹிலாரி கிளிண்டன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி இல்ங்கைக்குக் கொடுப்பது பற்றி கருத்தில் எடுத்துக்கொள்ள உரிய நேரம் இதுவல்ல என்று தெரிவித்துள்ளார். சர்வ தேச நாணய நிதியத்தின் கடன் இலங்கைக்கு கொடுப்பதை பிரித்தானியாவும் எதிர்த்தே ஆகவேண்டும். அல்லது அது உள்ளூரில் அதற்கு நெருக்கடியைக் கொடுக்கும்.
.
.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகை நிறுத்தப் படுமா?
ஐரோப்பிய ஒன்றியம் GSP+ என்ப்படும் வரிச் சலுகையை சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கைக்கு வழங்கியிருந்தது. :
This means a saving of 12.5pc for textiles and garments and 15pc for all other goods. In 2003 the UK absorbed around 13pc of Srilanka's exports, but the good news for UK companies is that the components of much of this trade originates in Britain.
இந்த வரிச்சலுகையை விலக்கக் கோரி ஐரோப்பியா வாழ் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. Marks & Spencer இந்த வரிச்சலுகை தொடர்ந்து வழங்கப் படவேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதிகளை நன்கு அறிந்த சுவீடன் அடுத்த தலமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் நிலையில் இவ்வரிச் சலுகை அந்தரத்தில் தொங்குகிறது!!!

உலக நாடெங்கும் நடக்கும் தமிழர்கள் போராட்டம் இலங்கைக்கு எதிரான அபிப்பிராயத்தை உலக மக்கள் மனதில் ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையின் உல்லாசப் பிரயாணத் துறை மேலும் பாதிக்கப் படலாம். தமிழ்நாட்டுத் தேர்தலில் ஆளும் கட்சிகள் வாங்கிய அடி இந்தியா இனிப் பணத்தை இலங்கைக்கு வாரி இறக்கத் தயங்கலாம். ஆக மொத்தத்தில் இலங்கைக்கு பெரும் பொருளாதார நெருக்கடி காத்திருக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...