Sunday, 3 May 2009
சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மா
“மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும்” என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா இலங்கையில் நடக்கும் இனக்கொலை தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்புப் படி 8500 இற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஐநா சொல்கிறது இது ஒரு மதிப்பீடு என்று. இம் மதிப்பீடு மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்டது. மருத்துவ மனைக்கு போகாத இறப்புக்களையும் சேர்த்தால் நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தும் இலட்சக் கணக்கானோர் அவயங்களை இழந்தும் உள்ளனர். இப்பத்தாயிரம் இறப்புக்களும் இலட்சக் கணக்கான அவயங்களை இழந்தோரையும் ஒருவர் மனதைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. அவர்தான் சோனியா காந்தி அம்மையார்.
சோனியா காந்தி அம்மையார் இலங்கை அவலங்கள் தொடர்பாக மெளனமாக இருப்பதற்குக் காரணம் அவரது கணவர் கொலையில் இலங்கைத் தமிழர் சம்பத்தப் பட்டிருப்பது தான் என்று அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் சொல்கிறார்கள். அவரது அரசு இலங்கை அரசிற்கு சகல உதவிகளையும் வழங்குகிறது.
.
சோனியா அம்மையாரின் கணவரின் மரணம் தொடர்பாக
ஒரு அன்பர் அனுப்பிய இ-மடல் இப்படி இருந்தது:
ஜாலியன் வாலபாக் படுகொலையின் போது அங்கு தண்ணீர் பரிமாறி கொண்டிருந்த சில இளைஞர்களில் ஒருவன்தான் உதம் சிங். குருதி தோய்ந்த மண்ணை தன் சட்டை பையில் சேகரித்து வைத்து கொண்டு தாக்குதல் செய்ய சொன்னவனை ( Michael O'Dwyer) பழி வாங்க துடிகிறான். ஆகையால் இரண்டு மாதங்களாக அவனை தேடி அலைகிறான். உதம் சிங்குக்கு தெரிய வருகிறது Michael O'Dwyer மாற்றல் ஆகி இங்கிலாந்துகே சென்று விட்டான் என்று.உதம் சிங், அவனை தேடி இங்கிலாந்துக்கு பயணம் செய்கிறான். இங்கிலாந்து சென்று சர்வர் வேலை செய்து கொண்டே Michael O'Dwyer ஐ தேடுகிறார்.... 21 ஆண்டுகள் தேடி கடைசியாக 13-Mar-1940 ஆண்டு கண்டு பிடித்து Michael O'Dwyer ஐ கொல்கிறான். மேலும் அந்த விழாவில் இருக்கும் 3 உயர் அதிகாரிகளை நோக்கியும் சுடுகிறார் அவர்கள் மூன்று பெரும் படுகாயமடைந்து (Lord Zetland, Luis Dane and Lord Lamington) பிழைத்து கொள்கிறார்கள் உதம் சிங்கை தீவிரவாதி என்று இங்கிலாந்து அவருக்கு மரண தண்டனை அளித்து 31-July-1940 இல் தூக்கில் இடுகிறார்கள். உதம் சிங் சொல்கிறார் என் நாட்டில் வந்து 400 மக்களை கொன்றதற்கு நான் அவனை கொன்றது மிக சரியே என்று சொல்லி தூக்கு கயிற்றை முத்தமிடுகிறார்.பிறகு 1974 இல் இந்திரா காந்தி பிரதமாராக இருக்கும் போது உதம் சிங்கின் எச்சங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டு அஸ்தி கங்கையில் கரைக்கப் படுகிறது. அவருடைய உடல் பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல்வர் அனைவரும் அஞ்சலி செலுத்தி அவரை தியாகி என்று புகழ்ந்துரைகிறார்கள்.
.
சரி இப்பொழுது விடயத்திற்கு வருவோம். 400பேரை நம் மண்ணில் கொன்றதற்காக உதம் சிங் இங்கிலாந்து சென்று Michael O'Dwyer கொன்றதனால் தியாகி என்கிறோம் நாம்..... ராஜிவ்காந்தியின் உத்தரவின் பேரில் இந்திய அமைதிப் படை ஈழத்திற்கு சென்று 8000 பொது மக்களை மற்றும் 5000 பெண்களை கற்பழித்து கொன்றதற்கு சுபா இந்தியாவில் ஒருவனை கொன்றால் அது தவறா?
இப்போது சொல்லுங்கள் சோனியா காந்தி அம்மையார் ஒரு செத்துப் போன ஆன்மாதானே!!!
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
அம்மா இறந்ததற்காக விமான ஓட்டி நாட்டின் மன்னராக்கப் பட்டு, நாட்டைக் கெடுத்து மூக்கறு பட்டார்.
அவர் கொல்லப்பட்டதற்காக வெளி நாட்டுப் பெண், உணவு விடுதியிலே பணி செய்து பழக்கப்பட்டவ்ர் எந்த விதத் தகுதியும் இல்லாமல் நாட்டின் ராணியாக்கப் பட்டார்.
இப்போது அனுபவமே இல்லாத கத்துக்குட்டி மகன் முடி சூடப் பட வேண்டுமாம்.
நடப்பது மக்களாட்சி என்றால் யார் நம்புவார்கள்?
Post a Comment