Saturday 2 May 2009

கலைஞர் ஐயா, ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றிவிட்டது.



கலைஞர் ஐயா, ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு உங்களை ஏமாற்றிவிட்டது.

இலங்கையில் தமிழர்கள் படும் துன்பத்தை கண்டு தமிழக முதல்வர் கலைஞர் ஐயா குடும்பத்தினருக்கும் தெரியாமல் உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார். இந்த விடுதலைத் தீ நாடுமுழுவதும் பரவுவதைத் தடுக்க ஆரியர்கள் சதி செய்து உங்களுக்கு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று பொய் சொல்லி ஏமாற்றி விட்டனர். ஆனால் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு முதலில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப் பாடாது என்று சொல்லி முழு உலகையும் ஏமாற்றி விட்டனர். இப்போது சகல பயங்கர ஆயுதங்களையும் பாவித்து தமிழர்களைக் கொன்று குவிக்கின்றனர்.
கலைஞர் ஐயா இந்த ஏமாற்றுக்கார காங்கிரசு கட்சியின் தோழமை உங்களுக்கு வேண்டாம். ஈழத் தமிழினக் கொலைக்கு துணை போகும் அப்பாதகர் உறவு கல்லக்குடி கொண்டானுக்கு உகந்ததல்ல. உதறுங்கள் காங்கிரசை. பதவி உங்களுக்கு துச்சம் இது உங்களுக்கு பிடித்த வாசகம். அத் திருவாசகத்தை பின்பற்றுங்கள்.
ராஜபக்சேயின் நண்பன் மணிசங்கர ஐயர் அருகில் நீங்கள் இருப்பது பன்றிக்கு பக்கத்தில் சிங்கம் இருப்பது போலல்லவா? தமிழர் இரத்தம் தோய்ந்த கைச்சின்னம் களங்கமற்ற சூரியனுக்கு அருகிலா? அசிங்கம் அசிங்கம் கலைஞர் ஐயா.
கைவிடுங்கள் கைச்சின்னத்துடன் உங்கள் உறவை. அப்போதுதான் தமிழின உணர்வாளர் ஆதரவு உங்களுக்கு உண்டு.
தமிழினத்துக்கு நீங்கள் தலவரா? இல்லைத் துரோகியா? முடிவு செய்யுங்கள் ஐயா.

இலண்டனில் மேதின ஊர்வலத்தில்

இருந்து விரட்டப் பட்ட சிங்களக் கட்சி.
இலண்டனில் உள்ள பல்லினத்தவரும் கலந்து கொண்ட மேதின ஊர்வலத்தில் கலந்து கொள்ளச் சென்ற சிங்களப் பேரினவதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனையை ஊர்வல ஏற்பாட்டாளர்கள் விரட்டினர். இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆபிரிக்க சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் தமிழினக் கொலை செய்யும் இலங்கை இராணுவத்திற்கு பேராதரவு தெரிவிக்கும் இவர்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்திய கால் மாக்ஸின் கொடிக்குக்கீழ் ஊர்வலம் போகும் தகுதி இல்லை என்று கூறினர். அது மட்டுமல்ல தமிழ்ப் புலிகளுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்றும் ஊர்வலத்தில் குரல் கொடுத்தனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...