பலருக்கும் பலவிதமாகத் தோற்றமளிப்பவரும் பலராலும் பலவிதமாக விமர்சிக்கப் படுபவருமான பிரபாகரன் மாறி வரும் சூழலைப் பாவித்து பிரபா மீண்டெழுவார் என்று பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார்.
.
பிரபாகரனை முதலில் பேட்டி யெடுத்தவரும் பிரபாகரனின் மேல் காதல் வசப்பட்டவருமெனக் கூறப்பட்டவருமான அனிதா பிரதாப் அவர்கள் பிரபாகரனைப் பற்றி தனது கருத்தைக் கூறியுள்ளார்.
.
அவர் கூறிய கருத்துக்கள்:
பிரபாகரன் பயந்த நிலையிலோ பரிதவிக்கும் நிலையிலோ இல்லை.
.
இராணுவ பின்னடைவுகள் அவரது தன் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது.
.
அரச பயங்கர வாதத்தை எதிர்த்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாத விடுதலை இயக்கங்கள் ஏதுவுமில்லை.
.
பலநாடுகள் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் பேரழிவிற்கு காரணமாயிருந்தன.
.
பத்திரிகையாளர்களையும் அரச சார்பற்ற நற்பணி மன்றங்களையும் இலங்கை மட்டுமே போர் முனையில் செயற்படுவதை தடை செய்துள்ளது.
.
கண்ணும் இதயமுமற்றவர்களே பிரபாகரனின் ஆதரவாளர்களான தமிழர்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் என்பார்கள்.
.
விடுதலைப் புலிகள் போர்க் காலத்தில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாகவும் போர் இல்லாத காலத்தில் கட்டுப்பாடு நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
..
54 வயதிலும் பிரபாகரன் தோல்விகளைக் கண்டு துவள மாட்டார் இன்னும் 20 வருடங்கள் தொடர்ந்து போராடுவார்.
.
ஹிலரி கிளிண்டனது பயங்கரவாதம் தொடர்பன புது அணுகு முறைக்கும் இந்தியத் தேர்தல் முடிவிற்கும் அவர் காத்திருக்கிறார்.
1 comment:
ஈழத் தமிழர்களுக்காக ஒன்றிணைவோம்
http://www.facebook.com/group.php?gid=74525049402
Post a Comment