இலண்டனில் இன்று பிரபல மரதன் ஓட்டப் போட்டி நடந்தது. இந்த மரதன் ஓட்டப் பாதையில் தமிழர்கள் 20 நாட்களாக தொடர்ந்து பாராளமன்ற முன்றலில் நடாத்தும் சரித்திரம் படைக்கும் ஆர்ப்பாட்டமும் நடக்கின்றது. இதனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு பாரிய கவன ஈர்ப்பு கிடைக்கும் என்று தமிழர் தரப்பு மகிழ்ந்தது. இதை அறிந்து கொண்ட ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் அடிவருடிகள் பல வதந்திகளைக் கட்டிவிட்டனர்.
ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் முயற்ச்சி தோல்வி
ஆரிய-சிங்கள கூட்டமைப்பின் அடிவருடிகள் தமிழர்கள் இலண்டன் மரதனைக் குழப்பப் போகிறார்கள் என்று பரப்பி விட்ட வதந்தியால் மரதன் ஓட்டப்பாதை மாற்றும் திட்டம் அமைப்பாளர்களால் பரிசீலிக்கப் பட்ட வேளை தமிழர்தரப்பு தம்மால் மரதன் ஒட்டத்திற்கு எவ்வித இடையுறும் இருக்காது என்று உறுதி வழங்கியதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி மரதன் ஓட்டப் போட்டி நடந்தது. தமிழர் போராட்டத்திற்கு நல்லபெயரும் ஆதரவும் கிடைத்தது.
மரதனில் ஈழக் கொடி
மரதன் ஓட்டத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் ஈழக் கொடியான சிவப்பு மஞ்சள் கொடியுடன் பங்கு பற்றினார்.அவரின் உடையில் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் எழுதப் பட்டிருந்தன.
நேற்றைய பத்திரிகையில் வந்த செய்திக் குறிப்பு:
The organisers of tomorrow's London Marathon have made plans for a last-minute change of route in the final stages of the race in case any disruption is caused by Sri Lankan Tamils protesting outside the Houses of Parliament.
ஆனால் இன்று யாவும் சுமூகமாக நடந்தேறியது.
No comments:
Post a Comment