Friday 27 February 2009

இந்தியா மீண்டும் இலங்கைக்கு பணத்தை வாரி இறைக்குமா?

இந்தியா மீண்டும் பணத்தை வாரி இறைக்க வேண்டிய சூழ்நிலை இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ளது. தனது அந்நியச் செலவாணியில் பாதியை ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசத்தை சமன் செய்யும் பணியில் விழுங்கிவிட்ட நிலையிலும் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பட முடியாத் நிலையிலும், இனக் கொலை யுத்தத்தை தொடர இலங்கை சீனாவை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாயின் அதன் முக்கிய நிபந்த்தனைகளான நாணய பெறுமதிக் குறைப்பும் பதீட்டுப் பற்றாக் குறை குறைப்பும் செய்யப்பட வேண்டும். இது யுத்த முனைப்புக்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா இலங்கை சீனாவின் பக்கம் சார்வதையோ அல்லது தமிழின அழிப்பு யுத்தம் தொய்வு நிலையை அடைவதையோ விரும்பாது. இதன் காரணமாக இந்தியா பாரிய தொகையை இலங்கைக்கு மீண்டும் குறைந்த வட்டிக் கடனாகக் கொடுத்து பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்களை வாங்கிக் குவித்து இனக்கொலை யுத்தத்தை தொடர வழி செய்யவேண்டும்.

1 comment:

Thamizhan said...

உலக நாடுகள் பலவும் சொல்லிக் கேட்காமல் இனப் படுகொலையைத் தொடரும் இலங்கைக்குப் பொருளாதார உதவி செய்யும் நாடுகட்கு எதிராகத் தமிழர்கள் செய்திகள் அனுப்ப வேண்டும்.
முக்கியமாக ஜப்பானியப் பொருட்களை ஒதுக்குவோம் என்று ஜ்ப்பானை அடக்க வேண்டும்.
உலகில் 9 கோடி தமிழர்கள் உள்ளனர் என்பதை நினைவூட்ட வேண்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...