
துயிலெழுந்து சுப்ரபாதம்போல்
நினைப்பது உன் பாதம்.
சந்தியா வந்தனம் போல்
மும்முறை தரிசிப்பது உன் முகம்.
காயத்திரி மந்திரம் போல்
ஆயிரத்தெட்டுத் தடவை
உச்சாடனம் செய்வது
உன் இனிய பெயர்.
உன் நினைவே
என் கணபதி ஹோமம்
உன் உரசல்தான்
இலட்சுமி பூசை
என்று கிடைக்கும்
உன் கடாட்சம்
No comments:
Post a Comment