உன் கண்கள் செய்தன வலிந்த தாக்குதல்கள்
உதட்டோரப் புன்னகை
ஏவுகணைகளாகின
ஏன் இந்தப் போர் முனைப்பு
ஏன் இந்த விழி வியூகம்
நாணமெனும் முன்னரங்க
காவலரண்
முன்னகர்வால் தூளாகியது
ஆண்மை ஏற்றது அறைகூவலை
என் பொறுமைக் கோட்டை தகர்ந்தது
காம வறுமைக் கோட்டைத் தாண்டியது
தொடங்கியது ஒரு போர் இங்கு
உன் மெல்லிய உடலெங்கும்
வெட்கத்தை தேடியழிக்கும்
படையாகியன என் விரல்கள்
அதிரடித் தாக்குதலின் முனைப்பிது
உதடும் நாவும் இணைந்து
செய்யும் ஈரூடகத் தாக்குதல்
மூக்கு முனையில் பெரும்
நேரடி மோதல் ஆரம்பம்
மார்பு வழியாக ஒரு மரபுப் போர்
பல் சுவை தரும் பன்முனைத் தாக்குதல்
புதிய பரிமாணத்தில்
ஒர் ஆக்கிரமிப்பு
போரியல்
உத்திகளின் உச்சம்
இடைச் சம வெளியெங்கும்
வருடல்களால் வன்முறைச் சமர்
இறுக அணைக்க ஒரு உத்தரவு
கட்டளைப் பீடத்தில் இருந்து வந்தது
கால் ஆல் படை சுற்றி வளைக்கின்றன
கைகள் செய்யும் முற்றுகைகள்
சாய்ந்த தலைமயகம் நிமிர்ந்தது
சைகைகளில் செய்திப் பரிமாற்றம்
கட்டுமானங்கள் கைவசமாகின
ஊடறுப்புத் தாக்குதல் உத்திகள்
கரந்தடியால் நிறைவேறின
இறுதித் தாக்குதல்கள் தொடங்கின
இருதிடல் இடை ஒரு பதுங்கு குழி
என் முகம் செய்யும் தாக்குதல் வழி
வழங்கற் பாதை வழிதிறக்கிறது
ஆழ ஊடுருவும் அணி களமிறங்கிறது
5 comments:
சேதாரம் எவ்வளவுங்க
ஆளணி இழப்பில்லை...உருவாகலாம்..
காதல் போர்க்களம் அல்ல..
காமப் போர்க்களம்
வேல் தர்மா.. சங்க இலக்கியங்கள் நவீன காதல் போரினை நவரச வடிவில் எழுதியுள்ளீர்கள். அருமை.
superb ...
Post a Comment