ஆரியப் பேய்கள் ஈழத் தமிழர்களுக்கு அள்ளி வைக்கும் பணியை இன்று நேற்று ஆரம்பிக்க வில்லை. இலங்கை 1948 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களை ஒடுக்கும் பணியை சிங்களவர் ஆரம்பித்தனர். பிரித்தானியா தமது பிரித்தாளும் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கை மக்களைப் பல தேசிய இனங்களாக சட்டரீதியாக இனம் கண்டு பிரித்து வைத்திருந்தது. சிங்களவர் இந்தியத் தமிழர் இலங்கைத் தமிழர், முசுலிம்கள் இந்திய முசுலிம்கள், பறங்கியர், எனப் பல வகைப் படும். தமிழர்களில் கொழும்புச் செட்டி என்று கூட ஒரு தேசிய இனம் இருந்தது.
.
தமிழர்கள் அரசியல் கட்சி அடிப்படையில் இரு பெரும் கட்சிகளாகப் பிரிந்து நின்றனர். இந்தியத் தமிழர்கள் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கீழும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கீழும் செயற்பட்டனர். இவற்றின் தலைவர்களாக முறையே செ. தொண்டமானும் ஜி. ஜி. பொன்னம்பலமும் இருந்தனர். சிங்கள ஆதிக்கம் தமிழர்கள் மீது அதிகரித்து வருவதை உணர்ந்த பொன்னம்பலம் அவர்கள் தமிழர்களை ஒரு பலம் வாயந்த நிலைக்கு கொண்டுவரும் முகமாக தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் இலங்கைத் தமிழ் காங்கிரசையும் ஒன்றாக இணைக்கும் திட்டத்தை தொண்டமானிடம் முன்வைத்தார். இந்த ஆலோசனை தொண்டமானுக்குப் பிடித்திருந்தாலும் அவர் இதைப்பற்றி அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தமிழர்கள் ஒரு பலமான சக்தியாக இலங்கையில் உருவாகுவதை விரும்பாமல் நீ பெரும்பான்மை சமூகமான சிங்கள சமூகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று பணித்தார். தொண்டமானும் அதையே ஏற்றுக் கொண்டு தான் பெரும்பான்மை இனத்துடன் ஒத்துழைக்கப் போவதாக பொன்னம்பலத்திடம் தெரிவித்தார். இதனால் இலங்கைத்தமிழர்கள் மூன்றாந்தர நிலைக்குத் தள்ளப்படுவதால் பொன்னம் பலம் மிக ஆத்திரம் அடைந்தார். இப்போது சிங்களவர் விழித்துக் கொண்டனர். இரு தமிழ் பிரிவுகள் பின்னர் ஒன்றிணைந்து பெரும் சக்தியாக உருவெடுப்பதைத் தடுக்க இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்க்க வேண்டும் என இலங்கைத் தமிழ் காங்கிரசில் இருந்து எஸ் ஜே வி செல்வநாயகம் தலைமையில் ஒரு பிரிவு பொன்னம்பலத்திற்கு எதிராக எழுந்தது. அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை போனது. இலங்கைத் தமிழர்கள் இரு பிரிவாகினர். இத்தனைக்கும் காரணம் அந்த ஆரியப் பேய்கள்!!!!!
.
வரலாறு இப்படியிருக்க இன்றும் உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகளும் சோ போன்ற பார்ப்பன நாய்களும் யாழ்ப்பாணத்தான் தான் இந்தியத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தான் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் சகலரும் தெரிந்து கொள்ள வேண்யது:
- இலங்கைத் தமிழர்கள் கையில் அதிகாரம் என்றும் இருந்ததில்லை. அதிகாரம் கையில் இல்லாதவர்களால் இன்னொரு இனத்தின் வாக்குரிமையைப் பறித்திருக்க முடியாது.
- அதிகாரம் கையில் வைத்திருந்த சிங்களவரே இதைச் செய்தனர்.
- இந்தியத் தமிர்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டதை எதிர்த்ததால் இலங்கைத் தமிழர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.
- இந்தியத் தமிழர்கள் தமது வாக்குரிமை பறிக்கப் பட்டதை இந்தியப் பிரதமர் நேருவிடம் முறையிட்டபோது இரு இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று சொல்லித் தட்டிக் கழித்துவிட்டார்.
1 comment:
All these year I thought that it is the Tamils of Jaffna origin strip the voting rights of Tamils who live in upcountry side of Srilanka. Thannks for the excellent article.
Post a Comment