ஒரு
விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த
ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ஒன்றும்
தெரியாது. முதலில் ஒரு சிறு புற்தரையைக் கண்டு அதிசயித்தது நின்றது
அப்போது ஒரு பெண் முயல் அதனிடம் வந்தது.
தன்னிடம் வந்த
பெண் முயலை ஆச்சரியத்துடன் ஆய்வுகூட முயல் பார்த்தது. தனக்கு வெளி உலகம்
பற்றித் தெரியாது என்று தன் கதையைச் சொன்னது. அதற்கு அந்தப் பெண் முயல்
உலகம் மிகவும் இனிமையானது என்று சொல்லி முயலை ஒரு தோட்டத்திற்கு கூட்டிச்
சென்று அங்கு உள்ள கரட்களை எப்படித் தோண்டி வெளியில் எடுப்பது என்பதைக்
காட்டிக் கொடுத்தது. இரண்டும் நிறையக் கரட்களை உண்டு மகிழ்ந்தன. இந்தக்
கரட் மட்டும்தானா உலகம் என்று ஆய்வுகூட ஆண் முயல் கேட்டது. பின்னர் அந்தப்
பெண் முயல் ஒரு மலையும் ஒரு தடாகமும் உள்ள இடத்திற்கு ஆய்வு கூட முயலை
அழைத்துச் சென்று உலகம் மிகவும் அழகானது என்றது. ஆய்வுகூட முயலும் இயற்கை
அழகுகளைப் பார்த்து இரசித்தது. பின்னர் இவ்வளவு தான உலகம் என்று ஆய்வு ஆண்
கூட முயல் கேட்டது. பின்னர் வேறு இரு முயல்கள் ஒன்றுடன் ஒன்று காதல்
புரிவதைக் காட்டியது பெண் முயல். பின்னர் ஆய்வுகூடமுயலும் பெண் முயலும்
காதல் புரிந்தன. இப்போது இந்த உலகம் உண்மையில் மகிழ்ச்சி நிறைந்ததுதான்
என்றது ஆய்வுகூட ஆண் முயல். அப்போ என்னுடன் இனி வாழ்நாள் பூராவும்
இருப்பாயா என்று கேட்டது பெண் முயல். அதற்கு ஆண் முயல் இல்லை நான் மீண்டும்
ஆய்வு கூடம் போகப்போகிறேன் என்றது. பெண் முயல் ஆச்சரியப்பட்டு ஏன் என்றது.
அதற்கு அந்த ஆய்வுகூட ஆண் முயல் என்னால் சிகரட் இல்லாமல் இருக்க
முடியவில்லை என்றது.
Six stages of married life:
1: Tri-weekly
2: Try weekly
3: Try weakly
4. Try oysters
5: Try anything
6: Try to remember
ஒரு
வகுப்பில் ஒரு ஆசிரியை கடைசிப்பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார். தான்
சொல்லும் கூற்றுகளை யார் சொன்னார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்கள்
உடனே வீடு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொல்லி முத்லாவதாக "இது
இங்கிலாந்தின் உன்னதமான தருணம்" என்ற கூற்றை யார் சொன்னார்கள் எனக்
கேட்டார்.
ஒரு மாணவி எழுந்து வின்ஸ்டன் சேர்ச்சில் எனப்பதிலளித்தாள்.
சரியான பதில் நீ உடன் வீடு செல்லலாம் என்றார் ஆசிரியை.
அடுத்து "நாடு
உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று
கேட்டுப்பார்." என்ற கூற்றை யார் சொன்னார் என வினவினார் ஆசிரியை.
ஒரு மாணவி எழுந்து
ஜோன் எஃப் கெனடி என்றாள் அவளைப் பாராட்டி வீட்டுக்கு அனுப்பினார் ஆசிரியை.
தனக்குத் தெரிந்த பதிலை இரு மாணவிகள் தன்னை முந்திக் கொண்டு
சொல்லிவிட்டார்கள் என ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் "இரண்டு தேவடியாளும்
வாயைப் பொத்திக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்றான்.
அது யார் சொன்னது என ஆத்திரத்துடன் கேட்டார் ஆசிரியை.
இன்னொரு மாணவி
எழுந்து பில் கிளிண்டன் என்றாள்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியை முழு வகுப்பையும் வீடு செல்லச்
சொன்னார்.
Friday, 13 March 2015
Monday, 9 March 2015
உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாக்கிஸ்த்தானின் பொறாமை இந்தியாவின் மேல்
பாக்கிஸ்த்தானில் ஒரு நகைச்சுவைக் கதை: ஓர் இந்தியனும், ஓர் அமெரிக்கனும் ஓர் யூதனும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது இந்தியன் ஜன கணமன அதி நாயக.... என்று பாடி இந்து தான் பாக்கிஸ்ட்தானின் தேசிய கீதம் என்றான். அமெரிக்கன் ஒரு பாவித்த Sanitary Napkinஐ எடுத்துக் காட்டி இதுதான் பாக்கிஸ்த்தானின் தேசியக் கொடி என்றான். பின்னர் யூதன் ஒரு உலக வரைபடத்தை எடுத்து மேசையில் விரித்தான். அதில் பாக்கிஸ்த்தான் என ஒரு நாடு இருக்கவில்லை. இதை அறிந்த பாக்கிஸ்த்தானியர்கள் இஸ்லாமபாத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்து டேவிட் கமரூனின் உருவப்பொம்மையை கொழுத்தினர். ஏன் டேவி காம்ரூனின் உருவப் பொம்மை எனக் கேட்டதிற்கு பாக்கிஸ்த்தானியர்களின் உலக அரசியல் அறிவு அப்படிப்பட்டது எனப் பதில் வழங்கப்பட்டது.
சீன அதிபர் ஸி ஜின்பிங், ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே,அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோரின் இந்தியப் பயணம் பாக்கிஸ்த்தானில் பலரையும் பொறாமைப்படுத்தியதுடன் கலவரப்படுத்தியும் உள்ளது. இதைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் தனிமைப்படுத்தப் படுகிறதா என்ற கேள்வி பாக்கிஸ்த்தானில் பரவலாக எழுந்துள்ளது. 2014- ஜனவரியில் ஸி ஜின்பிங்கின் பயணத்தின் போது இந்தியாவும் சீனாவும் பன்னிரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டத்திட்டதுடன் சீனா இந்தியாவில் இருபது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்வதாகவும் உடனடிக்கை செய்யப்பட்டது.
வயித்தெரிச்சலைக் கிளறும் இந்தியா!
ஜப்பானித் தலைமை அமைச்சரின் இந்தியப் பணம் வெறும் பொருளாதார மட்டத்தில் இருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அரசியல் மட்டத்திற்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டத்திற்கும் உயர்த்தியது. பராக் ஒபாமா இந்தியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதை அமெரிக்கா ஆதரிக்கின்றது என்பதை மீண்டும் எடுத்துரைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பாக்கிஸ்த்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் இருந்து மும்பாய் சென்று தாக்குதல் நடாத்திய பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது பாக்கிஸ்த்தானில் ஆத்திரத்தைக் கிளறியது. இஸ்லாமாபாத் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கின்றது என்ற புது டில்லியின் நிலைப்பாட்டை வாஷிங்க்டன் ஆதரிப்பது பாக்கிஸ்த்தானியர்களைக் கடும் விசனத்துக்கு உள்ளாக்குகின்றது.
உள் நாட்டுப் பிரச்சனையைப் பார்க்கவே நேரமில்லை
பாக்கிஸ்த்தான் தலைமை அமைச்சர் ஷெரிப் நவாஸிற்கு உள் நாட்டில் அவரைப் பதியில் இருந்து தூக்கி எறியப் பெரும் கிளர்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இம்ரான் கானையும் அவரது பாக்கிஸ்த்தானின் நீதிக்கான கட்சியினரையும் சமாளிக்கவே நேரம் போதாது. ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றச் சென்ற நரேந்திர மோடி அங்குள்ள இந்தியர்களுடன் பெரிய சந்திப்பை ஏற்பாடு செய்தார். ஆனால் நவாஸ் அவசர அவசரமாக நாடு திரும்பினார். தாமதித்தால் அவர் பதவிக்கே ஆப்பு வைக்கப்படும் என்ற அச்சம். நவாஸ் ஐநா பாதுகாப்புச்சபையில் உரையாற்றும் போது பலர் அவையில் இருந்து வெளியேறிவிட்டனர். வெளியில் வந்த் நவாஸை "போ நாவாஸ் போ" என்னும் பாக்கிஸ்த்தானிய ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலே வரவேற்றது. பாக்கிஸ்த்தானியர்கள் தம் அழுக்குத் துணிகளை நியூரோர்க்கிலா கழுவுவது எனக் கேள்வி எழுப்பினார் பாக்கிஸ்த்தான் ருடேயின் ஆசிரியர். அந்த ஆர்ப்பாட்டம் இம்ரான் கானின் பாக்கிஸ்த்தானிற்கான நீதிக் கட்சியின் அசிங்கமான தந்திரோபாயம் என்றார் ஆசிரியர் அரிஃப் நிஜாமி. அவரது ஆத்திரம் நரேந்திர மோடி அமெரிக்காவில் தன்னைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியதில் உள்ள பொறாமையின் வெளிப்பாடு போல் தெரிந்தது. பாக்கிஸ்த்தானிடம் உலகிற்கு வழங்க இந்தியாவைப் போல் ஏதும் இல்லை எனப் பாக்கிஸ்த்தானியர்கள் பலர் அஞ்சுகின்றார்கள்.
பாக்கிஸ்த்தானில் ஈரான் சவுதி போட்டி
ஈரானை மன்னர் ஷா ஆண்ட காலத்தில் பாக்கிஸ்த்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. இந்தியாவில் இருந்து பிரிந்த போது பாக்கிஸ்த்தானை முதலில் அங்கீகரித்த நாடு ஈரான் என்பதுடன் பாக்கிஸ்த்தானுக்கு முதலில் பயணம் செய்த முதல் வெளிநாட்டுத் தலைவர் அப்போதைய ஈரான் மன்னர் ஷா ஆகும். 1977-ம் ஆண்டு சுல்பிகார் அலி பூட்டோ தனது அணுக்குண்டு உற்பத்தித் திட்டத்திற்கு ஈரான் நிதி உதவி செய்யக் கோரிய போது ஷா மறுத்து விட்டார். இதன் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஷாவின் ஆட்சி கவிழ்ந்து அயத்துல்லா கொமெய்னி தலைமையில் புதிய அரசு உருவான போது அதை முதலில் அங்கீகரித்த நாடு பாக்கிஸ்த்தான் ஆகும். பாக்கிஸ்த்தானிடமிருந்து அணுக் குண்டு உற்பத்தித் தொழில் நுட்பத்தைப் பெற ஈரான் பாக்கிஸ்த்தானுடனான நட்புறவில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியது. பாக்கிஸ்த்தானிய விஞ்ஞானி ஏ கியூ கான் ஈரானின் அணுக்குண்டு ஆராய்ச்சிக்கு உதவி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. பாக்கிஸ்த்தானில் ஈரான் அக்கறைக் காட்டியதைத் தொடர்ந்து அதற்குப் போட்டியாக சவுதி அரேபியாவும் பாக்கிஸ்த்தானுடன் நட்பை வளர்க்க முயன்றது. இதன் விளைவாக 1987-ம் ஆண்டில் இருந்து பக்கிஸ்த்தானில் சுனி, சியா முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் உருவானது. 80 விழுக்காடு சுனி முஸ்லிம்கள் இருக்கின்றனர். இருந்தும் பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்.பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. எண்பது விழுக்காடு சுனி முஸ்லிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் பாக்கிஸ்த்தானை உருவாக்கிய அலி ஜின்னா, காயித் அஜாம் ஆகியவர்களில் இருந்து சுல்பிகார் அலி பூட்டோ அவரது மருமகன் வரையும் பல பாக்கிஸ்தானிய ஆட்சியாளர்கள் படைத்துறை உயர் தளபதிகள் அனைவரும் சியா முஸ்லிம்களே. அணுக்குண்டு வல்லரசாக முயலும் சியா ஈரானிற்கும் பிராந்திய வல்லரசாக முயலும் சுனி சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டியால் பாக்கிஸ்த்தானில் பலர் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களுக்கு அல் கெய்தா ஒரு புறமும் சவுதி அரேபியா மறுபுறமும் நின்று சுனி முசுலிம்களுக்கு உதவின. ஈரான் என்றாவது ஒரு நாள் அணுக்குண்டை உற்பத்தி செய்யலாம் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. தான் அணுக்குண்டை உற்பத்தி செய்வதிலும் பார்க்க சுனி முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாக்கிஸ்த்தானிடம் இருந்து அணுக்குண்டை வாங்குவது சவுதி அரேபியாவிண் மாற்றுக் கொள்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. சவுதியின் கைக்கு அணுக்குண்டு போவதைத் தடுக்க இஸ்ரேல் இந்தியாவுடன் இணைந்து பாக்கிஸ்த்தானின் அணுக்குண்டுகளை அழிக்க முயலலாம். பாக்கிஸ்த்தானிடம் இருக்கும் அணுக்குண்டுகளை சுற்றி வட்டமிடுபவர்களால் பாக்கிஸ்த்தானிற்கு ஆபத்தே. பாக்கிஸ்த்தானில் சவுதி அரேபியாவும் ஈரானும் புகுந்து அங்கு ஒற்றுமையாக இருந்த சியா, சுனி முஸ்லிம்களிடையே மோதல்களை உருவாக்கி விட்டார்கள்.
தேவையான நேரங்களில் கைவிட்ட சீனா
இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்த்தானை சீனா பாவித்தாலும் தேவையான கட்டங்களில் சீனா பாக்கிஸ்த்தானிற்கு தேவையான உதவிகளைச் செய்ததில்லை. பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது இந்தியாவைத் திசை திருப்ப சீனப் படைகளை இந்திய எல்லைகளை நோக்கி நகர்த்தும் படி அமெரிக்கா விடுத்த வேண்டுகோளைச் சீனா நிராகரித்து விட்டது. ஆனால் இந்தியாவின் அணுக்குண்டு உற்பத்தி வேகத்திற்கு ஈடு கொடுக்கக் கூடியவகையில் பாக்கிஸ்த்தானிய அணுக்குண்டு உற்பத்தி செய்ய சீனா பாக்கிஸ்த்தானிற்குப் பதப்படுத்தப்பட்ட யுரேனியம் வழங்கி இருந்தது. பாக்கிஸ்த்தானில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் தனது நாட்டின் சின் ஜியாங் மாகாணத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு உதவி செய்வது சீனாவிற்கு கடும் அதிருப்தியைக் கொடுத்தது. 1999-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் நடந்த கார்கில் போரில் பாக்கிஸ்த்தானிற்குப் படைக்கலன்கள் வழங்க மட்டுமல்ல இராசதந்திர உதவிகளைக் கூட சீனா மறுத்துவிட்டது. கார்கிலில் இருந்து பாக்கிஸ்த்தானியப் படைகள் வெளியேற வேண்டும் என்பதில் சீனா அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. 2008-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானிய லக்சர் இ தொய்பா அமைப்பினர் மும்பாய் நகரில் செய்த தாக்குதலைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானின் ஜ்மத் உத் தவா அமைப்பிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனது இரத்து அதிகாரத்தைக் கொண்டு தடை செய்ய சீனா மறுத்து விட்டது.
அமெரிக்க பாக்கிஸ்த்தானிய நட்பு: பூக்காத பூ
அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு மூன்று கட்டங்களைக் கொண்டது. முதலாவது கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் பாக்கிஸ்த்தானை இணையாமல் தடுக்க அமெரிக்க மேற்கொண்ட் முயற்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது சோவியத் அல்லது சீன அல்லது இரண்டும் இணைந்த படை எடுப்பு ஒன்றினால் பாக்கிஸ்த்தான் பொதுவுடமை நாடாகாமல் தடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. மூன்றாவது ஆப்கானிஸ்த்தானையும் இஸ்லாமியத் தீவிரவாதத்தையும் அடிப்படையகாகக் கொண்டது. அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான தற்போதைய உறவிற்கும் பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான உறவு 1954-ம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டது. இந்தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமாகியதைச் சமாளிக்க பாக்கிஸ்த்தான் அமெரிக்காவுடன் அப்போது இணைந்து கொண்டது. பின்னர் 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு நிறையப் படைக்கலன்களைக் கொடுத்து உதவியது. 1989-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவு நெருக்கமடைந்தது. அமெரிக்கா பல பில்லியன் கணக்கில் செலவழித்து பாக்கிஸ்த்தான் உளவுத் துறையுடன் இணைந்து ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்துள்ள சோவியத் படைகளுக்கு எதிராக மதவாதப் போராளிகளை பயிற்றுவித்தது. அரபு ஆப்கானிஸ்த்தானியர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட போராளி அமைப்பில் பின் லாடனும் ஒருவராவர். பின் லாடனுக்கு அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ பயிற்ச்சி வழங்கியதாக நம்ப்பப்படுகின்றது. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் சவுதி அரேபிய செல்வந்தரும் பொறியியலாளருமான பில் லாடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போராளியாக இருந்த ஜவாகிரி, பாக்கிஸ்த்தானியக் கல்விமானுமாகிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கெய்தா அமைப்பை 1988-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி உருவாக்கினர்கள். இவர்கள் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இவர்களின் அமெரிக்க எதிர்ப்பின் உச்சக் கட்டமாக 2001 செப்டெம்பர் 11-ம் திகதி நிகழ்ந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது. 1998-ம் ஆண்டு பாக்கிஸ்த்தான் அணுக்குண்டுப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வந்த எல்லா உதவிகளும் நிறுத்தப்பட்டன. 2001-ம் ஆண்டு அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்கிஸ்த்தானையும் இணைக்க மீண்டும் பாக்கிஸ்த்தானுக்கான அமெரிக்க உதவி வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்திரோபாயம் ஒன்றை வகுத்தார். அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு 7.5 பில்லியன் டொலர்கள் உதவியை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது. பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. இது பாக்கிஸ்த்தானின் நம்பகத்தன்மையின்மையை மேலும் உறுதி செய்தது. ஆப்கானிஸ்த்தானில் அமைதி திரும்பினால் பாக்கிஸ்த்தானை அமெரிக்காவிற்கு அதிகம் தேவைப்படாது என்பதை பாக்கிஸ்த்தான் அறியும்.
2013-ம் ஆண்டு பாக்கிஸ்த்தானில் வெளிநாட்டு முதலீடு 1.4 பில்லியன் டொலர்கள் மட்டுமே, இந்தியாவில் இது 28 பில்லியன் டொலர்களாக இருந்தது. மற்ற வளர்முக நாடுகளில் இது மொத்தம் 759 பில்லியன் டொலர்களாகும். பாக்கிஸ்த்தானில் உள்ள தீவிரவாதப் பிரச்சனை, ஊழல் மிக்க நிர்வாகம் போன்றவை வெளிநாட்டு முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானுடாகப் பறப்புக்கள் செய்வதையே பல விமானச் சேவைகள் தவிர்க்கின்றன. பன்னாட்டு விமான நிலையங்களில் இஸ்லாமாபாத் விமான நிலையம் மிக மோசமானஓன்றாகக் கருதப்படுகின்றது. பாக்கிஸ்த்தானில் பெரிய பன்னாட்டு மாநாடுகளோ அல்லது விளையாட்டுப் போட்டிகளோ பெரிதாக நடப்பதில்லை.
அடுத்த 50 ஆண்டுகளில் சீனாவிலும் பார்க்க இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பொருளாதார வளர்ச்சி சீனாவை இந்தியாவின் பகையாளி என்ற நிலையிலும் பார்க்க பங்காளி என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். இந்த நிலை பாக்கிஸ்த்தானை மேலும் தனிமைப்படுத்தும். இந்தியா தனது பொருளாதாரத்தையும் படைவலுவையும் மேம்படுத்தி சீனா, அமெரிக்கா, இரசியா ஆகிய நாடுகளுடனான தனது உறவை கவனமாகவும் சிறப்பாகவும் கையாளும் போது பாக்கிஸ்த்தான் தனிமைப்படுத்தப்படலாம்.

Thursday, 5 March 2015
நகைச்சுவை: பெண்களும் கணனிகளும்
பெண்களை
பலர் பல விதமாக வகைப்படுத்தினர். சாமுத்திரிகா இலட்சணம், அத்தினி,
சங்கினி, பத்தினி, சித்தினி அது இது என்று சொல்வார்கள். அது அந்தக் காலம்
இது கணனிக் காலம். கணனிப்படி பெண்களை இப்படித்தான் வகைப்படுத்தலாம், இதில்
எந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடிக்கும்?
Hard Disk girsl : நிரந்த உறவை விரும்பும் பெண்கள்
RAM girls: உறவைத் தொடர்பு முடிந்தவுடன் மறக்கும் பெண்கள்.
Screen Saver girls: சைட் அடிக்க மட்டும்
Software girls: விசயம் நிறைய இருக்கு ஆனால் புரிந்து கொள்ள முடியாது.
Monitor girls: உங்களைக் கண்காணித்த படியே இருக்கும் பெண்கள்.
Window girls: அடிக்கடி மாறுவதாகச் சொல்வார்கள். ஆனால் அதே பழைய பிரச்சனைதான்
Speaker girls: வளா வளா என்று எந்த நேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண்கள்
Application girls: ஒரு காரியத்திற்கு மட்டும் பயன்படும் பெண்கள்.
Virus girls: உங்கள் மனதைக் கிறங்கடித்து உங்களை நிர்மூலமாக்கும் பெண்கள்.
Anti Virus girls: எந்த நேரமும் பல்லி சொல்ற மாதிரி ஏதாவது சொல்லி மிரட்டும் பெண்கள்
Search Engine girls: உங்கள் பணப்பையைக் காலி செய்யும் பெண்கள்.
Website girls: ஊர் வம்பெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு சொல்லாமல் பிகு பண்ணும் பெண்கள்.
Browser girls: உங்களைப் பற்றி அறிய அதிகம் துருதுருவிக் கேள்விகள் கேட்கும் பெண்கள்.
Internet girls: தேடிப் பிடிப்பது சிரமமான பெண்கள்
Keyboard girls: தொட்டல் சிணுங்கிகள்
Microsoft girls: சிறிய மென்மையான பெண்கள். ஆனால் பெரிய பிரச்சனை
Apple girls: தாங்கள் தனித்துவமானவரகள் என்று பீத்திக் கொள்ளும் பெண்கள்.
Server girls: உங்களைத் தாய் போல் கவனிக்கும் பெண்கள்.
Multimedia girls: வாய், கண், கை போன்றவற்றால் ஒரேயடியாக உரையாடும் பெண்கள்

Tuesday, 3 March 2015
புதிய திசையில் செல்லும் இந்திய இஸ்ரேலியக் கள்ள உறவு
கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பு உருவாக்குவதற்கான மாநாடு 1955-ம் ஆண்டு பாண்டூங் நகரில் நடந்த போது இஸ்லாமிய நாடுகளைச் சமாதானப்படுத்த ஜவகர்லால் நேரு இஸ்ரேலை அழைக்கவில்லை. பலஸ்த்தீனம் தொடர்பான இஸ்ரேலில் பல நடவடிக்கைகளை கண்டித்து வந்த இந்தியா தற்போது இஸ்ரேல் தொடர்பாகத் தனது கொள்கையை மாற்றியுள்ளது. இரசியாவிற்கு அடுத்த படியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய படைத்துறைப் பங்காளியாக இஸ்ரேல் மாறியிருக்கும் அளவிற்கும் இஸ்ரேலிடம் இருந்து உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா விளங்கும் அளவிற்கும் இந்தியாவிற்கு இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு மாற்றம் அடைந்துள்ளது.
முறுகலடையும் அமெரிக்க இஸ்ரேலிய உறவு
முன்னாள் சோவியத் தலைமை அமைச்சர் அலெக்ஸி கொஸியின் முன்னாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜோன்ஸனிடம் உலகில் எண்பது மில்லியன் அரபுக்களும் மூன்று மில்லியன் இஸ்ரேலியர்களும் இருக்கையில் நீங்கள் ஏன் அரபுக்களை விட்டு இஸ்ரேலியர்களை ஆதரிக்கின்றீர்கள் எனக் கேட்ட போது இஸ்ரேலியர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என லிண்டன் ஜோன்ஸன் பதிலளித்தார். தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை. கடந்த அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக இஸ்ரேல் செயற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருக்கும் முறுகல் அறுபது ஆண்டுகளாகத் தொடரும் அமெரிக்க இஸ்ரேலிய உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக இஸ்ரேல் கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பல நகரங்களில் யூதர்களிற்கு எதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றது. இதனால் இஸ்ரேல் புதிய நட்புக்களைத் தேடுகின்றது. அந்தத் தேடலில் இஸ்ரேலின் கண்ணில் முதல் தென்படுவது இந்துத்துவா ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியா.
இந்திரா காந்தியும் இஸ்ரேலும் அரபுநாடுகளும்
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு தொடர்பாக நேருவின் கொள்கைகளையே இந்திரா காந்தி கடைப்பிடிப்பது போல வெளியில் காட்டிக் கொண்டார். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான பல தீர்மானங்களை முன் மொழியும் நாடாக இந்தியா இருந்தது. காங்கிரசுக் கட்சியின் ஆட்சியின் போது அரபு நாடுகளுடனும் இஸ்ரேலுடனும் இந்தியாவின் உறவு அந்தரங்கத்தில் வேறு அம்பலத்தில் வேறாகவே இருந்தது. எகிப்த்தின் அப்துல் கமால் நாசர் சூயஸ் கால்வாயை எகிப்திய அரச உடமையாக்கியபோது அதைப் பகிரங்கமாக ஆதரித்த் ஜவகர்லால் நேரு அந்தரங்கத்தில் நாசரை மிதமாக நடந்து கொள்ளும்படி வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவை எதிர்த்த நேரு பொதுநலவாய நாடுகளில் இருந்து இந்தியா வெளியேறும் என்று கூட பிரித்தானியாவை மிரட்டியிருந்தார். 1962-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தானியப் போரின் போது எகிப்து நடு நிலை வகித்தது. மற்ற பல அரபு நாடுகள் பாக்கிஸ்த்தானிற்கு ஆதரவாகச் செயற்பட்டன. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரின் போது பலஸ்த்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை இந்திரா காந்தி கடுமையாகக் கண்டித்தார். 1967-ம் ஆண்டுப் போரின் பின்னர் ஒக்டோபர் மாதம் எகிப்த்திற்கும் பயணம் மேற்கொண்ட இந்திரா காந்தி அப்போது எகிப்த்தும் சிரியாவும் இணைந்து அமைத்திருந்த ஐக்கிய அரபுக் குடியரசுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அதில் பலஸ்த்தீனம் அங்கீகரிக்கக்ப்பட்டது. அரபு நாடு அல்லாத ஒரு நாடு பலஸ்த்தீனத்தை முதலில் அங்கீகரித்தது என்றால் அது இந்தியாவே. ஆனால் ஜெருசலத்தில் ஒஸ்ரேலிய கிருத்தவர்களால்அல் அக்சாபள்ளிவாசல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் 1969-ம் ஆண்டு கூட்டிய ரபத் மாநாட்டிற்கு பாக்கிஸ்த்தான் ஆட்சேபித்ததால் இந்தியா அழைக்கப்படவில்லை. இருந்தும் பலஸ்த்தீன விடுதலை அமைப்பின் உறுப்பினர்களை அதே ஆண்டு இந்தியா டில்லியில் வரவேற்று அவர்கள் டில்லியில் ஒரு தகவல் நிலையத்தை அமைக்க அனுமதியும் உதவியும் வழங்கியது. 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது எகிப்த்தும் சிரியாவும் நடுநிலை வகிக்க சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராகச் செயற்பட்டன. ஆனால் இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டது. இப்போரின் போது இஸ்ரேல் இரகசியமாக இந்தியாவிற்கு படைக்கலங்களையும் வழங்கியது. ஆனாலும் இந்தியா பலஸ்த்தீனம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. 1970 களின் பின்னர் இந்தியாவின் எரிபொருள் தேவையில் பெரும் பகுதியை ஈரானில் இருந்து செய்த ஏற்றுமதியால் நிறைவு செய்யப்பட்டது. அத்துடன் பெருமளவு இந்தியர்கள் அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களும் பெற்றனர். 1974-ம் ஆண்டு ஜசீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் நிலையைப் பெறுவதற்கு இந்தியா முன்னின்று உழைத்தது. பலஸ்த்தீனத்துடன் முதல் இராசதந்திர உறவுகளையும் இந்தியா ஏற்படுத்திக் கொண்டது. 1982-ம் ஆண்டு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட படை நடவடிக்கையையும் இந்திரா காந்தி இந்தியப் பாராளமன்றத்தில் கண்டித்து உரையாற்றி இருந்தார். 1980இலும் 1982இலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத் இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இந்தியாவை பாலஸ்த்தீனியர்களின் நிரந்தர நண்பன் என்றார் அரபாத். இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி இஸ்ரேலியத் தலைமை அமைச்சரை 1985 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. துனிசியாவில் இருந்த பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பணியகத்தை இஸ்ரேல் தாக்கி அழித்தமையை இந்தியா கண்டித்ததுடன் அது தொடர்பாக ஆராய புது டில்லியில் கூட்டுச்சேரா நாடுகளின் கூட்டத்தையும் கூட்டியது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்படுவதை இந்தியா விரும்பவில்லை.
இஸ்ரேலின் மொசாட்டும் இந்தியாவின் றோவும்
1968-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்திய உளவுத் துறையான றோ ஆரம்பிக்கப்பட்ட போது அது இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டுடன் இரகசியமாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. பாக்கிஸ்த்தான் தொடர்பான பல தகவல்களை மொசாட் இந்தியாவுடன் இன்றுவரை பகிர்ந்து கொண்டிருக்கின்றது. பாக்கிஸ்த்தானின் அணுக் குண்டு ஆய்வு தொடர்பான தகவல்களை மொசாட்டெ இந்தியாவிற்கு வழங்க்யது. இஸ்ரேலிய உதவியுடன் பாக்கிஸ்த்தானிய அணுக்குண்டு நிலைகள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்ட ராஜீவ் காந்தி அரபுநாடுகளின் எதிர்ப்பு மோசமாக இருக்கும் எனக் கருதி அத்திட்டத்தைக் கைவிட்டார். பல இஸ்ரேலிய உளவாளிகள் கஷ்மீருக்கு உல்லாசப் பயணிகளாகப் போய் பல தகவல்களைத் திரட்டினர். அவர்களில் இருவரை பாக்கிஸ்த்தானிய உளவுத் துறை கொன்றது. இந்திய இஸ்ரேலிய உளவுத் துறையினரில் ஒத்துழைப்பால் கலவரமடைந்த பாக்கிஸ்த்தான் தானும் மொசாட்டுடன் உறவுகளை இரகசியமாக ஏற்படுத்தியது. அரபுநாடுகளின் படைத்துறை இரகசியங்களை இதன் மூலம் இஸ்ரேல் பாக்கிஸ்த்தானிடம் இருந்து பெற்றுக் கொண்டது.
பஜகாவும் இஸ்ரேலும்
இஸ்ரேல் உருவாகுவதை மகாத்மா காந்தியும் நேருவும் எதிர்த்த போது இந்தியாவின் இந்துத்துவ அமைப்புக்கள் அதை ஆதரித்தன. 1977-ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிக்கு வந்த ஜனதாக் கட்சியின் அரசு அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரும் 1967 அரபு இஸ்ரேல் போரின் கதாநாயகனுமான மோஷே தயானை இரகசியமாக இந்தியாவிற்கு அழைத்தது. இருந்தும் பலஸ்த்தீனர்களுக்கு என ஒரு நாடு உருவானால் அது இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்ற மோஷே தயானின் நிலைப்பாட்டை அப்போதிய இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இஸ்ரேல் பலஸ்த்தீனர்களில் நிலங்களிச் செய்த யூதக் குடியேற்றங்களை மொரார்ஜி தேசாயின் அரசில் வெள்நாட்டலுவலகள் அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேய் கடுமையாகக் கண்டித்தார். 1978-ம் ஆண்டு எகிப்திய அதிபர் இஸ்ரேலுடன் செய்த காம்ப் டேவிட் உடன்படிக்கையையும் ஜனதாக் கட்சி அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால் பஜகாவை அதிகம் இஸ்ரேலிடம் செல்ல வைத்தது இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பே. உலகின் மிக மோசமான தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலிய அரசுத் தலைவர்களும் பிரமுகர்களும் ஆபத்தின்றியும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமலும் தமது உள்நாட்டுப் பயணங்களையும் போக்குவரத்துக்களையும் செய்கின்றனர். இந்தத் திறனை இஸ்ரேலிடம் இருந்து பெற்றுக் கொள்ள இஸ்ரேலுக்கு முதலில் பயணம் மேற்கொண்ட இந்திய அமைச்சர் எல் கே அத்வானியாகும். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி 2000-ம் இஸ்ரேல் சென்றார். அவர் பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுவாகும்.
இந்தியாவைத் திருத்திய முனை
அரபு நாடுகள் தொடர்பாக இந்தியாவின் கொளகையைத் திருத்திய ஒரு நிகழ்வாக Organaisation of Islamic Conference (OIC)என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஓர் அறிக்கை அமைந்தது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து OIC அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என OIC குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது கொள்கையை இந்தியா மீள் பரிசீலனை செய்தது.
கார்கில் போரில் இஸ்ரேல் - திருப்பு முனை
இந்திய இஸ்ரேலிய உறவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் நடந்த கார்கில் போராகும். 1999-ம் ஆண்டு மூன்று மாதங்கள் நடந்த இந்தப் போரின் போது இந்தியாவிற்கு அவசரமாகவும் அவசியமாகவும் சில படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் தேவைப்பட்டது. அதை வழங்க இரசியா தாமதம் காட்டிய போது இந்தியாவின் அவசியத் தேவைகளை இஸ்ரேலே அவசரமாக நிறைவேற்றியது. இந்திய எல்லைக்குள் இரகசியமாக நுழைந்த பாக்கிஸ்த்தானியப் படையினர் கார்கில் நகரில் மிகவும் பாதுகாப்பான ஒரு பாறைத் தொடரில் நிலை கொண்டனர். அவர்களின் நிலையையும் நகர்வுகளையும் அவதானிக்க இஸ்ரேல் இந்தியாவிற்கு இரகசியமாகப் பேருதவி புரிந்தது. பாக்கிஸ்த்தானியப் படையினரின் நிலைகள் தொடர்பான செய்மதிப் படங்களை இந்தியாவிற்கு இஸ்ரேல் வழங்கியதுடன் தனது ஆளில்லா வேவு விமானங்களை கார்கிலுக்கு அனுப்பி பல தகவல்களையும் திரட்டியது. இடம் விட்டு இடம் இலகுவாக நகர்த்தக் கூடிய ரடார்களும் இஸ்ரேலால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கார்கில் போரின் போது இஸ்ரேலியப் போர் விமானிகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதன் பின்னர் இஸ்ரேலிடமிருந்து இந்தியா படைக்கலன்களை வாங்கத் தொடங்கியது. 2000-ம் ஆண்டு இந்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டார். அத்துடன் பல துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு முரணாகச் செயற்படுவதை தவிர்த்துக் கொள்வதாகவும் கார்கில் போருக்கான இஸ்ரேலிய உதவியின் போது இந்தியா ஒத்துக் கொண்டது.
மோடியும் இஸ்ரேலும்
இஸ்ரேலுனடான உறவை இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பகிரங்கமாக மேம்படுத்தி வருகின்றார். அவரது உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் அவர்களது பிதாமகர் எல் கே அதவானியைப் போலவே இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார். இஸ்ரேல் இந்தியாவில் படைக்கலன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோளையும் அவர் விடுத்தார். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் போதே இஸ்ரேலுக்குப் பயணம் செய்திருந்தார். மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு இஸ்ரேலியத் தொழில்நுட்பங்கள் அவசியமானவையாகும். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் மோடி இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன் யாகூவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி உரையாடினார். இஸ்ரேலுடனான உறவு மேம்படுத்தப்படும் என மோடி உறுதியளித்தார். நெத்தன்யாஹூ இந்தியாவுடன் இணைந்து இணையவெளிப் பாதுகாப்பு முறைமைகளை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இரு தரப்பு வர்த்தகங்களையும் மேம்படுத்தின
இந்தியா இஸ்ரேல் உறவு பாக்கிஸ்த்தானிய அரபு உறவை மேலும் வலுவடையச் செய்யும். இது ஒரு பெரும் போட்டியாக மாறலாம்.

Saturday, 28 February 2015
அமெரிக்காவின் THAAD ஏவுகணை எதிப்பு முறைமைக்கு அஞ்சும் சீனா
அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளில் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தது THAAD எனச் சுருக்கமாக அழைக்கபடும் Terminal High Altitude Area Defense ஆகும். THAAD ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது Ballistic Missiles களுக்கு எதிரான பாதுகாப்பு முறைமையாகும். உலகில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் Ballistic Missiles வைத்திருக்கின்றன. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எதிரிகள் ஏவும் Ballistic Missileகளை இடைமறித்து அழிக்கவல்லன.
Ballistic Missileஇல் பல வகைகள் உண்டு அவை அவை இலக்கை நோக்கிப் பாயக் கூடிய தூரத்தை வைத்து வகைப்படுத்தப்படும் பாயும்.
| Missile Type | Range in KM |
| Tactical ballistic missile | 300 |
| Short-range ballistic missile | 1000 |
| Theatre ballistic missile | 3500 |
| Medium-range ballistic missile | 3000 |
| Intermediate-range ballistic missile | 5000 |
| Intercontinental ballistic missile | 5500 |
இவற்றைத் தவிர Submarine-launched ballistic missile, Air-launched ballistic missileஆகியவையும் உண்டு. அமெரிக்காவின் புதிய தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை எல்லாவகையான்ன ஏவுகணைகளையும் இடை மறித்து அழிக்க வல்லது. அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் தாட் இடைமறித்து அழிக்கும். அத்துடன் இது மற்ற ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளுடனும் Aegisஎனச் சுருக்கமாக அழைக்கப்படும் Aegis Combat System என்னும் கடல் சார் பாதுகாப்பு முறைமையுடனும் இணைந்து செயற்பட வல்லது. அத்துடன் செய்மதிகளுடனும் தொடர்பாடல்கள் செய்ய வல்லது. இதுவரை செய்யப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 100 விழுக்காடு நம்பகத்தன்மை வாய்ந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையாக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை திகழ்கின்றது. எதிரியின் Ballistic Missileகளுக்கு எதிராக தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை ஒரு தடவையில் 72 எதிர் ஏவுகணைகளை வீசும். அத்துடன் இது மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தைக் கொண்டுள்ளது. இந்த மூன்று கட்டப் பாதுகாப்பு வலயத்தால் அதிக உயரத்திலும் தாழ்வாகவும் வரும் Ballistic Missileகளை அழிக்க முடியும். இதனால் இது நூறு விழுக்காடு நம்பகத்தன்மை உடையதாகக் காணப்படுகின்றது.
ஏவுகணை எதிர்ப்பு முறைமை என்பது முன்று தனித்துவ முறைமைகளின் இணைப்பாகும். இது முழுக்க முழுக்க ஒரு தானியங்கி முறைமையாகும். இனம் காண் நிலையம் (Radar Unit), கட்டுப்பாட்டகம் (Control Centre ), ஏவுகணை வீசிகள் ( Missile Launchers) ஆகிய மூன்று முறைகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் உள்ளன. இனம் காண் நிலையம் வரும் எதிரிகளின் ஏவுகணைகளை ரடார் மூலம் இனம்காணும். அது பற்றிய தகவலகளை அது உடனடியாகக் கட்டுப்பாடகத்திற்கு அனுப்பும். கட்டுபாட்டகம் ஏவுகணை வீசிகளுக்கு உத்தரவுகளை வழங்கும். அந்த உத்தரவின் அடிப்படையில் எதிரி ஏவுகணைகள் மீது இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் வீசப்படும்.
ஒரு சிறந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்க அமெரிக்கா நூறு பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளது. பல் வேறு வகையான ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு நான்கு பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
Kinetic Enerty என்னும் வலுமூலம் இயங்க்கி இலக்கை அடித்து அழிக்கக்கூடிய திறனுடையவை {hit-to-kill (kinetic energy) lethality} தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையாகும்.
மேற்கு பசுபிக் கடலில் உள்ள அமெரிக்காவிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்றான குவாம் தீவில் முதலில் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை நிறுத்தப்பட்டது. வடகொரியா தொடர்ந்து பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களையும் சிறப்பாகச் செயற்படக் கூடிய Ballistic Missile களையும் தொடர்ந்து உருவாக்கி வருவதால் தென் கொரியாவைப் பாதுகாக்க அங்கு தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை நிறுத்துவதற்கு அமெரிக்கா பரிசீலித்து வருகின்றது. ஆனால் சீனா இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது. சீனா உருவாக்கிவரும் ஒலியிலும் பார்க்கப் பலவேகத்தில் பாயக்கூடிய ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமை செல்லாக் காசாக்கிவிடலாம் என சீனா அஞ்சுகின்றது. தென் கொரியாவைத் தொடர்ந்து ஜப்பானும் தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மீது அக்கறை காட்டலாம்.
சீனா முதலில் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை உருவாக்கியபோது அவற்றில் இருந்து தப்ப வழியில்லை என உணரப்பட்டது. ஆனால் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் இலகுவில் இனம் காணக் கூடிய அளவிற்கு அவற்றின் வெப்ப நிலை மிகவும் உயர்வானதாகும். தாட் ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் சீனாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை அழிக்கக் கூடிய வகையில் மேம்படுத்தல்கள் செய்யப் பட்டன. அதனால் அவற்றை THAAD - ER (Extended Range) அதாவது பாய்ச்சல்தூரம் நீடிக்கப்பட்ட தாட். சீனாவின் ஒலியிலும் பல மடங்கு வேகத்தில் பாயக்கூடிய்ய ஏவுகணைகளும் அமெரிக்காவின் தாட்டும் ஒரு நேரடிக் கள மோதலில் ஈடுபட்டால்தான் அவற்றின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படும்.
சீனாவைச் சுற்றிவர உள்ள பல நாடுகளில் தாட் ஏவுகணை முறைமை நிறுவப்பட்டால் சீனாவின் ஏவுகணைகள் பயனற்றவை ஆகிவிடும் என சீனா அஞ்சுகின்றது.
Friday, 27 February 2015
நகைச்சுவைக் கதை: முதலமைச்சரின் மூன்று பெட்டிகள்
![]() |
| picture from vinavu.com |
முதலமைச்சராகப் பதவி ஏற்ற அம்மு ஆர்ஜீஎம் ஐ முற்றாக மறந்து விட்டு அவரின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானவரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்தினார். அவர் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். கட்சியில் பிரச்சனை. நாட்டில் பிரச்சனை. மத்திய அரசு ஆட்சியைக் கலைக்கலாம் என்ற அச்சம். அப்போது தான அம்முவிற்கு ஆர்ஜீஎம்இன் நினைவு வந்தது. அவர் கொடுத்த பெட்டிகளும் நினைவிற்கு வந்தன. முதலாவது பெட்டியைத் திறந்து பார்த்தார். உன் பிரச்சனைகள் எல்லாவற்றிற்ககும் காரணம் எதிர்க் கட்சியே என்று பரப்புரை செய் என்று ஒரு சிறு துண்டில் எழுதப்பட்டு இருந்தது. அம்முவும் அப்படியே செய்தார். பிரச்சனைகள் ஒருவாறு சமாளிக்கப்பட்டு அம்மு அடுத்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆட்சி தொடர்ந்தது. ஊழல்களும் நிறைந்தன. அம்மு பெரும் பணக்காரியானார். மீண்டும் பிரச்சனைகள். பிரச்சனைகளுக்கு மேல் பெரும் பிரச்சனைகள். அம்மு இரண்டாம் பெட்டியைத் திறந்து பார்த்தார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் மத்திய அரசு என்று பரப்புரை செய் என்று இருந்தது. அம்முவின் ஆட்சி கலைக்கப்பட்டது. இனிப் பெட்டிகளையே திறப்பதில்லை என்று முடிவு செய்தார் அம்மு. எதிர்க் கட்சியில் இருந்த அம்முவிற்குப் பெரும் யோகம் அடித்தது. ஆளும் கட்சியை தொலைக்கிறேன் பேர்வழி என்று பல தமிழ் உணர்வாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்த அம்முவை தேர்தலில் வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்ந்தனர். அம்முவின் உற்ற தோழிக்கும் அம்முவிற்குமிடையில் அம்முவின் குருவினர் சண்டையை மூட்டி விட்டனர். தமிழின உணர்வாளர்கள் ஒருபக்கம் நெருக்கல் கொடுத்தனர். அவர்கள் சொற்படி நடந்தால் தனது ஆட்சியை தமிழர்களின் விரோதியான மத்திய அரசு தனது ஆட்சியைக் கலைத்துவிடும் என்ற பயம் ஒரு புறம். சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு புறம். அம்முவின் நோய்கள் இன்னும் புறம் சிறைத்தண்டனை வேறு....எப்போது எத்தனை ஆண்டு சிறைவாசம் என்ற் அச்சம் எல்லாவற்றிற்கும் மேலாக.............................. அம்முவிற்குப் பெரும் துயர். சரி கடைசியாக அந்த மூன்றாவது பெட்டியைத் திறந்து பார்ப்போம் என்று போய் அந்த மூன்றாவது பெட்டியையும் திறந்து பார்த்தார். அதில் கிடந்த வாசகம்: "மூன்று பெட்டிகளைத் தயார் செய்".
Monday, 23 February 2015
சீனாவை ஜப்பான் அடக்குமா?
ஜப்பான் தனது அமைதிவாதக் (pacifism) கொள்கையைக் கைவிட்டு ஒரு போர் புரியக் கூடிய நாடாக மாறுவதற்காக தனது அரசமைப்பு யாப்பைத் திருத்துமா என்ற கேள்வி ஐ. எஸ் எனப்படும் இசுலாமிய அரசு அமைப்பினர் இரு ஜப்பானியர்களைக் கொலை புரிந்த பின்னர் மீளத் தலையெடுத்துள்ளது. 2015-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12-ம் திகதி ஜப்பானியப் பாராளமன்றத்தில் ஓர் உணர்ச்சி பூர்வமான உரையை ஆற்றிய ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே ஜப்பானிய மக்களே நம்பிக்கை கொள்ளுங்கள் எனச் சொன்னதுடன் எமது அரசியலமைப்பு யாப்பைத் திருத்துவதற்கான விவாதத்தை ஆழமாகச் செய்ய வேண்டிய நேரம் இதுவல்லவா என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் பாராளமன்றம் எதிர்காலத்தைக் கருத்திக் கொண்டு மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அபே பாராளமன்றத்தில் எடுத்துரைத்தார்.
வெறுவாய மெல்பவனுக்கு ஐ, எஸ் அமைப்புக் கொடுத்த அவல்
ஈராக்கில் இசுலாமியத் தீவிரவாதிகள் இரு ஜப்பானியர்களைக் கொன்றதுடன் ஜப்பானை ஒரு போர் செய்யக் கூடிய நாடாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. சீனப் பாதுகப்புத் துறை நிபுணர் ஷி யொங்மிங் பணயக் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரத்தை வைத்து தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே தனது போர் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றப் பார்க்கின்றார் எனக் குற்றம் சாட்டியுள்ளார். வலதுசாரி அரசியல்வாதியான ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே பதவிக்கு வந்த நாளில் இருந்தே ஜப்பானை ஒரு போர்புரியக் கூடிய நாடாக மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஜப்பானிய அரசமைப்பு யாப்பின் ஒன்பதாவது பிரிவை மாற்ற வேண்டும் எனக் கடும் பரப்புரை செய்து வருகின்றார். இந்தத் திருத்தத்தைச் செய்வதற்கு ஜப்பானியப் பாராளமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றின் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும் என்பதுடன் ஜப்பானிய மக்களிடையேயான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சாதாரண பெரும்பான்மையுடனான ஆதரவையும் பெற வேண்டும். உலக அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஜப்பான தனது நட்பு நாடுகளின் இணைந்து போர் புரியக் கூடிய வகையில் அதன் அரசமைப்பு மாற்றப் பட வேண்டும் என ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபேயும் அவரது ஆதரவாளர்களும் பெரும்பரப்புரை செய்து வருகின்றனர். அதாவது ஜப்பானும் அமெரிக்கப்படைகளுடன் இணைந்து போர் புரிய வேண்டும் என்பது அபேயின் கொள்கையாகும். ஜப்பான் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளல் அவசியம் என அபே கருதுகின்றார். அபே அரசியலில் ஈடுபடத் தொடங்கிய காலத்தில் இருந்தே ஜப்பானிய அரசமைப்பு யாப்பைத் திருத்த வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
அமெரிக்காக்காரன் அல்வா கொடுத்தால்!!!!!
உலக வரலாற்றிலேயே முதல் முதலாக அணுக்குண்டால் தாக்கப்பட்ட நாடான ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தின் படி 1947-ம் ஆண்டு மே மாதம் 3-ம் திகதி நிறைவேற்றிய அரசமைப்பு யாப்பின்படி ஜப்பான் வேறு நாடுகளுடனான பிணக்கைப் போர் மூலம் தீர்க்க முடியாது. தனது நாட்டுக் குடிமக்களைப் பாதுகாக்க வேறு நாடுகளுக்குப் படை அனுப்ப முடியாது. ஒரு தன்னைப் பாதுகாக்கும் படையை மட்டுமே வைத்திருக்கலாம். சுருங்கச் சொன்னால் ஜப்பானியப் படையினர் மீது வேறு யாராவது சுட்டால் மட்டுமே ஜப்பானியப் படைகள் திருப்பிச் சுடலாம். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜேர்மனியின் அரசியல்யாப்பில் இல்லாத ஒன்று ஏன் ஜப்பானிய யாப்பில் இருக்க வேண்டும் என்பது சில ஜப்பானியர்கள் எழுப்பும் கேள்வியாகும். ஜப்பானின் படைத்துறைச் செலவு ஆண்டுக்கு 49 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கின்றது. அது சீனாவின் 188 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஈடாக மாட்டாது. அதனால் ஆண்டுக்கு 640 பில்லியன் டொலர்கள் செலவு செய்யும் அமெரிக்காவில் ஜப்பான் தங்கியிருக்க வேண்டிய நிலை. அத்துடன் 23 படையினருக்கு ஜப்பானின் 58,000 படையினர் ஈடாகவும் முடியாது. உலகப் படைவலுப்பட்டியலில் சீனா மூன்றாம் இடத்திலும் ஜப்பான் பத்தாம் இடத்திலும் இருக்கின்றன. 2014-ம் ஆண்டு ஏப்ரம் மாதம் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சீனா ஜாப்பானிற்குச் சொந்தமான தீவுகளை அபகரிக்க முயன்றால் ஜப்பானைப் பாதுகாக்கும் அமெரிக்க ஜபானிய பாதுகாப்பு உடன்படிக்கையின் படி அமெரிக்கா ஜப்பானைப் பாதுகாக்கும் என உறுதியளித்தார். அமெரிக்கா கைவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் ஜப்பானிய மக்கள் மத்தியில் உண்டு.
வேண்டாம் இந்த சீனப் பூச்சாண்டி
சீனா ஒன்றும் சிறந்தத படைவலுவைக் கொண்ட ஒரு நாடல்ல. சீனாவின் படைக்கலன்களில் பெரும்பான்மையானவை பழுதடையும் நிலையில் உள்ளன. சீனாவிடம் இருக்கும் 7580 தாங்கிகளில் 450 மட்டுமே நவீனமானவை. சீனாவிடம் இருக்கும் 1321 போர் விமானங்களில் 502 மட்டுமே போர்க்களத்தில் பாவிக்கக் கூடியவை. எஞ்சிய பழைய சோவியத் ஒன்றியத்திடம் வாங்கிய பழைய விமானங்களாகும். சீனா முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கப்பலை வாங்கித் திருத்தி உருவாக்கிய லியோனிங் என்னும் விமானம் தாங்கிக் கப்பல் நவீன தொலை தூரப் போர் விமானங்களைத் தாங்கிச் செல்லக் கூடியவை அல்ல. அவை சீனக் கரையேரப் பாதுகாப்புக்கு மட்டுமே போதுமானவை. அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள் லியோனிங் விமானம் தாங்கிக் கப்பல் மீது 290 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே லியோனிங்கால் இனம் காண முடியாத வரையில் பறந்து கொண்டே ஏவுகணைகளால் தாக்குதல் செய்ய முடியும். இது போலவே சீனாவின் J-15 போர் விமானங்களால் இனம் காண முன்னரே அமெரிக்காவின் F-35 போர் விமானங்களால் J-15ஐத் தாக்கி அழிக்க முடியும். ஜப்பான் தனது தீவுகளை அமெரிக்காவிடம் இருந்து வாக்கிய Standard Missile-3, Patriot Advanced Capability-3 ஆகிய ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் மூலம் பாதுகாக்கின்றது.
ஜப்பான் வாங்கிக் குவிக்கவிருக்கும் படைக்கலன்கள்
...2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4.98 ரில்லியன் யென்கள் (41பில்லியன் டொலர்கள்) பெறுமதியான படைக்கலன்களை வாங்குவதாக முடிவு செய்துள்ளது. அதில் முப்பது AAV-7 Amphibious vehicle என்னும் நிலத்திலும் நீரிலும் பயணிக்கக் கூடிய ஊர்திகள், இருபது P-1 கண்காணிப்புக் கடற்கலன்க்கள், ஆறு F-35Aபோர் விமானங்கள், ஐந்து Bell Boing V-22 போர் விமானங்கள், மூன்று Global Hawks ஆளில்லாப் போர் விமானங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் முறைமை போன்றவையும் உள்ளடக்கபட்டிருக்கின்றன.
சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ஜப்பான் - அமெரிக்கக் கூட்டு
ஜப்பானும் அமெரிக்காவும் இணைந்து SM-3-Block-IIA என்னும் எறியங்களைக் (porjectiles) கொண்ட ஒரு ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்குகின்றன. 21 அங்குல பரிமாணமுள்ள இந்த எறியங்கள் மற்ற எறியங்களுடன் ஒப்பிடுகையில் பெரியவையும் வேகமாகப் பாயக் கூடியவையுமாகும். அத்துடன் தாழவரும் ஏவுகணைகளையும் அழிக்கக் கூடியவை. ஜப்பான் ஏற்கனவே நான்கு உளவுச் செய்மதிகளை விண்வெளியில் விட்டுள்ளது. இனி அமெரிக்காவுடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட GPS எனச் சுருக்கமாக அழைக்கபப்டும் Global Positioning System உருவாக்கவிருக்கின்றது. இதன் மூலம் வானிலும் கடலிலும் நிலத்திலும் நடப்பவற்றைத் தடயமறிய முடியும். மேலும் இரு தகவற்பரிமாற்றச் செய்மதிகளையும் ஜப்பான் விண்வெளியில் சேவையில் ஈடுபடுத்தவிருக்கின்றது.
சீனாவின் பலவீனப் புள்ளியை மையப்படுத்தும் ஜப்பான்
சீனா என்னதான் தனது படைவலுவைப் பெரிதாக்கினாலும் அதன் படைகளுக்கு போர் முனை அனுபவம் என்பது கிடையாது எனச் சொல்லலாம். இதுவே சீனாவின் பலவீனமாகும். நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும், சிரியாவிலும் தமது நேரடிப் போன் முனை அனுபவங்களைப் பெற்றுள்ளன. ஜப்பான் மற்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புப் போர் புரியலாம் என தனது அரசியலமைப்பு யாப்பை மாற்றி உலகின் பல பாகங்களுக்கும் தனது படையினரை அனுப்பி நேரடிப் போர் முனை அனுபவங்களைப் பெற்றால் ஜப்பானியப் படையினரை எதிர் கொள்வது சீனாவிற்கு முடியாத காரியம் ஆகிவிடும். பன்னாட்டு அரங்கில் செய்யும் இந்த போர் முனைச் செயற்பாட்டை சமாதானத்திற்கான பங்களிப்பின் முனைப்பு (proactive contribution to peace) என்னும் பெயரிட்டுக் காட்ட ஜப்பான் விரும்புகிறது. ஜப்பானை வெறுப்பவர்கள் சீனர்கள் மட்டுமல்ல. கொரியர்களும் ஜப்பானை அதிகம் வெறுக்கின்ற்னர். ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை சீனர்களைப் போலவே கொரியர்களும் மறக்கவில்லை. வட கொரியா தனது அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை வளர்த்து வருகின்றது. தென் கொரியா பொருளாதார ரீதியில் மட்டுமல்ல படைத்துறை ரீதியிலும் ஜப்பானுக்குச் சவாலாக அமையக் கூடிய ஒரு நாடு.
ஜப்பானிற்கும் வல்லரசுக் கனவு உண்டு
இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைப் போல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தற்போது உள்ள வல்லரசு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது தாமும் ஒரு வல்லரசாக வேண்டும் என ஜப்பான் நினைக்கின்றது. ஜப்பானின் மக்கள் தொகை, பொருளாதார வலு, படை வலு ஆகியவை மற்ற நாடுகளுக்கு சளைத்தவை அல்ல சவால் விடக்கூடியவை.
அமெரிக்காவின் பங்காளியா பணியாளியா
அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் படைவலுவில் 60 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிலை கொள்ளவிருக்கின்றது. அத்துடன் ஆசிய பசுபிக் நாடுகளை இணைத்து அமெரிக்கா அமைக்கும் பொருளாதாரக் கூட்டமைப்பில் ஜப்பானும் இணையவிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ஜப்பானும் தனது படைவலுவைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவின் பங்காளியாக ஜப்பான் செயற்படமுடியும் அல்லாவிடில் அமெரிக்காவின் பணியாளி நிலைதான் ஜப்பானுக்கு ஏற்படும். அத்துடன் தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப ஜப்பானின் படை வலுவும் இருக்க வேண்டும். தொடர்ந்தும் அமெரிக்காவில் அது தங்கியிருக்க முடியாது.

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...