டிசம்பர் 24-ம் திகதி சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையினதும் அரபு நாடுகளின் சபையிந்தும் சிறப்புத் தூதுவர சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைச் சந்தித்தார். டிசம்பர் 26-ம் திகதி சிரியப் படையினரின் காவற்துறையின் அதிபர் ஏ ஏ ஜே அல் ஸல்லால் சிரியாவை விட்டு தப்பினார். டிசம்பர் 28-ம் திகதி அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் அலெப்போ நகரில் உள்ள Mannagh உழங்கு வானூர்தித் தளத்திலும் பன்னாட்டு விமான நிலையத்திலும் கடும் தாக்குதலைத் தொடுத்தனர். சிரியாவில் நாளுக்கு நாள் அசாத்தின் ஆட்சி ஆட்டம் காண்கிறது.
21 மாதங்களுக்கு மேலாகத்தொடரும் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியில் சிரிய விமானப் படையினரால் கடும் இழப்புக்களைச் சந்தித்து வரும் கிளர்ச்சிக்காரர்கள் சிரிய விமானப் படையை அழிக்கும் முயற்ச்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அலேப்போ நகரில் நாலு விமானப் படைத் தளங்களை தாம் முற்றுகையிட்டதாக கிளர்ச்சிக்காரர்கள் தெரிவித்துள்ளனர். சிரிய உள்நாட்டுப் போரில் விமானப் படை அண்மைக்காலங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களுக்கு எதிரான விமானத் தாக்குதலைப் பொறுத்த வரை ஒரு கையறுநிலையிலேயே இருக்கின்றனர்.
அசாத்தின் ஆட்சியை ஆதரிக்கும் இரசியா
இரசியாவின் மத்திய கிழக்குத் தந்திரோபாயத்திற்கு சிரியா முக்கியமானதாகும். சிரியாவில் இரசிய படைத் தளம் ஒன்றும் இருக்கிறது. இரசியாவின் நீண்ட கால நட்பு நாடாக சிரியா இருந்து வருகிறது. சிரியாவில் மேற்கு நாடுகள் விமானத் தாக்குதலை லிபியாவில் செய்தது போல் செய்யலாம் என் எதிர்பார்த்து இரசிய படைத்துறை ஆலோசகர்கள் சிரியாவிற்கு அனுப்பப்பட்டு அவர்கள் நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவது பற்றி பயிற்ச்சி அளித்து வருகின்றனர். சிரியாவிற்கு எதிராக விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இவர்கள் நேரடியாகவும் செயற்படலாம். இரசியாவுடனான ஒரு நேரடி மோதலை மேற்கு நாடுகள் விரும்பவில்லை.
கிளர்ச்சிக்காரர்களுக்கு கரம் நீட்டிய இரசியா
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இருக்கும் தொடர்பைக் கடுமையாகக் கண்டித்து வந்த இரசியா திடீரென டிசம்பர் 28-ம் திகதி சிரியக் கிளர்ச்சிக்காரர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மாஸ்க்கோவிற்கு அழைத்தது. ஆனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் இந்த அழைப்பை ஏற்கவில்லை. இதுவரை காலமும் வெளியார் தலையீடு சிரியாவில் இருக்கக் கூடாது என்று கூறிவந்த இரசியா இப்போது தான் தலையீடு செய்வது ஏன் என்ற கேள்வியையும் முன்வைத்தனர். அத்துடன் இரசியா தனது செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இரசியாவுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதாயின் அது ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரபு நாடு ஒன்றில் நடைபெற வேண்டும் என கிளர்ச்சிக்காரர்கள் இரசியாவிற்கு அடித்துச் சொல்லி விட்டனர். 2012இன் நடுப்பகுதியில் இருந்து பெரும் வெற்றிகளை ஈட்டி வரும் கிளர்ச்சிக்காரர்கள் இரசியாவை அதனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றி விட்டதா?
Saturday, 29 December 2012
Friday, 28 December 2012
சிந்திக்கவைக்கும் நகைச்சுவைகள்
புது டில்லி பேரூந்தில் எழுதி வைக்கப் படவேண்டிய திருக்குறள்:
ஒடும் பஸ் ஓட ஒரு கம்பி முனையில்
பறிபோவதாம் கற்பு
கனவு என்பது தூக்கத்தில் காண்பதல்ல. உன்னைத் தூங்கவிடாமல் சிந்திக்க வைப்பது.
காலமும் பெண்ணும்: கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
சிறந்த மருந்து: தினசரி மூன்று வேளை சாப்பாட்டுக்குப் பின்னர் சிரிப்பு
Language of love: body language
உழைப்பென்னும் திருமணத்தில் காசும் காசும் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்யும்
துன்பத்தில் சிரித்திரு. அல்லாவிடில் உலகமே உன்னைப் பார்த்துச் சிரிக்கும்.
எல்லோரும் உன்னைவிட்டுப் போன பின்பும் ஒருவன் இருப்பான் அவனை நம்பு: உன்னை
சிலரைப்பற்றிய உண்மைகளை அவர்களிடம் சொன்னால் அவர்கள் உன்னை வெறுப்பார்கள்
மறக்க வேண்டியது இறந்த காலம்
மதிக்க வேண்டியது நிகழ் காலம்
நம்ப வேண்டியது எதிர் காலம்
மறக்க முடியாதவனை நினைத்திருப்பாள் பெண்
கிடைக்க முடியாதவளை மறக்க முடியாமல் தவிப்பான் ஆண்
டூ விட வேண்டியது கவலை
டாவடிக்க வேண்டியது நம்பிக்கை
காதலிப்பதை ஏன் காதலில் "விழுவது" என்று சொல்கிறார்கள் என்பது காதலித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
காதலின் அளவு கோல்: காத்திருக்கும் போது ஏற்படும் தவிப்பு
இரவில் சிந்தித்தவன் காலையில் உற்சாகத்துடன் எழுவான்.
எல்லாம் முடிந்ததாக மற்றவர்கள் நினைக்கும் இடத்தை தொடக்கப் புள்ளியாக நினைப்பவன் வெற்றி பெறுவான்.
உன் இன்றைய நிலைக்கு காரணம் உனது கடந்த காலம். உன் வருங்கால நிலைக்குக் காரணம் உன் நிகழ்காலம்.

Thursday, 27 December 2012
அரபு வசந்தத்தில் அமெரிக்கா - தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.
வறுமை, அரசுகளின் ஊழல், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம், காவற்துறையினரின் முறைகேடுகள், தனிமனித சுதந்திரமின்மை ஆகியவை அரபு வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. அமெரிக்க அரசும் இசுலாமியத் தீவிரவாதிகளும் வேறு முனையில் அரபு மக்களின் உண்மையான பிரச்சனையை அறியாமல் மோதிக்கொண்டிருந்தன. அமெரிக்க உளவுத் துறையோ இசுலாமியத் தீவிரவாதத் தலைமைகளோ அரபு வசந்தத்தை எதிர்பார்க்கவில்லை.
உலகில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் தனது பெருவிரலில் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ நிறுவனத்திற்கு அரபு வசந்தம் அதிலும் முக்கியமாக எகிப்தியப் புரட்சி பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஆட்சியாளர்களுக்கு எதிராக மனம் கொதித்துக் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துனிசியாவில் காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காறி உமிழப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட மொஹமட் பௌஜிஜி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்தமை பெரும் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. துனிசிய தனித்தன்னாட்சியாளர் பென் அலி பதிவியில் இருந்து விரட்டப்பட்டார்.
மனித உரிமைப் பிரச்சனை கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
கடாஃபிக்கு எதிரான லிபிய மக்களின் கிளர்ச்சியின் போது லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:
பன்னாட்டு நீதி கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?
பாஹ்ரெய்னைப் பாருங்கள் தமிழர்களே.
அரபு வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள் கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்படுகின்றனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது. அது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப் பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். இலங்கை அரசிற்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் யாவற்றிக்கும் இரு நோக்கங்கள் மட்டுமே! ஒன்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது சீனாவிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

- "I believe the evidence points the commission of crimes against humanity." She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.
பன்னாட்டு நீதி கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு
லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?
பாஹ்ரெய்னைப் பாருங்கள் தமிழர்களே.
அரபு வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள் கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்படுகின்றனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது. அது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப் பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். இலங்கை அரசிற்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் யாவற்றிக்கும் இரு நோக்கங்கள் மட்டுமே! ஒன்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது சீனாவிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை.
Wednesday, 26 December 2012
வேற்றுலகவாசிகளை விரைவில் சந்திப்போமா?
Patrick Moore என்னும் பிரித்தானிய வானவியலாளர் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் நாம் வேற்றுலக வாசிகளைச் சந்திப்போம் என்று கூறியுள்ளார். வேற்றுலகவாசிகள் பூமிக்கு வருவது பற்றி பல ஹாலிவூட் திரைப்படங்கள் மட்டுமல்ல மதங்களும் சொல்லியுள்ளன. எல்லா மதங்களும் பூமி, நரக லோகம், சொர்க்கம் என்ற மூன்று உலகங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.
இந்து மதத்தின் படி நாரத மூன்று உலகங்களிற்கும் நினைத்த மாத்திரதிலேயே செல்லக்கூடியவர். தேவலோகம், சத்தியலோகம் எனப் பல உலகங்கள் இருப்பதாக இந்து மதம் கூறுகிறது. சூரன் ஆயிரத்தெட்டு உலகங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆட்சி செய்தான் என கந்த புராணம் சொல்கிறது. ஆனால் எமக்குத் தெரிந்த கடந்த கால நிகழ்வுகள் எதிலும் நாரதர் பூமிக்கு வந்தமைக்குரிய ஆதாரங்கள் இல்லை. குரானிலும் வேறு உலகத்தில் அல் பராக் என்பவர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதாம். கிருத்துவத்தில் தேவதைகள் வேற்று உலகில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.
வேற்று உலகங்களில் உயிரிங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்கின்றனர விஞ்ஞானிகள். எமது பூமியில் நாம் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள்:
1. பூமிக்குத் தேவையான வலுவை சூரியன் வழங்குகிறது.
2. நாம் ஒரு சூரியனுக்கு போதிய அளவு அண்மையில் இருக்கிறோம். சூரியனுக்கு பூமியிலும் பார்க்க அண்மையில் இருக்கும் புதன், வெள்ளி போன்ற கிரகங்களில் வெப்ப நிலை அதிகம். சூரியனுக்கு பூமியிலும் பார்க்கத் தூரமாக இருக்கும் கிரகங்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கிரகங்களில் மிகவும் குளிரான கால நிலை இருக்கிறது.
3. பூமியில் போதிய அளவு நீர் இருக்கிறது. புதனிலும் வெள்ளியிலும் நீர் இருக்க முடியாத அளவிற்கு வெப்ப நிலை அதிகம். செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றில் நீர் இருந்தாலும் அது பனிக்கட்டியாகவே இருக்கும்.
4. பூமியை வியாழன் பாதுகாக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசையால் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய ஆகாயக் கற்கள் போன்றவற்றை எமது கிரகங்களுக்குள் பெரிய கிரகமும் அதிக ஈர்ப்பு விசை கொண்ட கிரகமுமான வியாழன் தன் வசம் இழுத்து விடும். இதனால் பூமியில் பெரிய அழிவுகள் ஏற்படாமல் பாது காக்கப்படுகிறது.
எமது சூரியனைப் போலப் பல பில்லியன் சூரியன்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவற்றை பல கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பலவற்றில் பூமியைப் போன்று நல்ல வெப்பநிலையும் நீரும் உள்ள கிரகங்கள் பல இருக்கின்றன. அவற்றில் உயிரிங்கள் வாழும் சாத்தியம் உள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள். நாசாவின் கெப்லர் திட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளும் இந்த சாத்தியங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றன. நாசாவின் ஆய்வின்படி "கெப்லர்-20இ", "கெப்லர்-20F" ஆகிய இரு கிரகங்கள் முக்கியமானவை. "கெப்லர்-20இ" கிரகம் பூமியின் அளவுடன் பார்கையில் அது 0.87 மடங்கானது. "கெப்லர்-20F" கிரகம் பூமியிலும் பார்க்க 1.03 பெரியது. ஆனால் இவற்றின் வெப்ப நிலைகள் பூமியின் வெப்ப நிலையுடன் பார்க்கையில் அதிகமானது.
பூமியில் இருந்து 600 ஒளிஆண்டுகள் தொலைவிலிருக்கும் "கெப்லர்-22B" கிரகம் தனது சூரியனிலிருந்து உகந்த தொலைவில் இருக்கிறது. ஒளி ஆண்டு என்பது வான்வியலில் மிக நீண்ட தூரத்தை அளக்க பாவிக்கப்படும் அலகு. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 4ஒளி நிமிடம் எனப்படும். அதாவது ஒளி சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்க 4 நிமிடங்கள் எடுக்கும். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி செல்லும் தூரம். ஒளியானது ஒரு விநாடியில் 299,792,458 கிலோ மீற்றர்கள் பயனிக்கும்."கெப்லர்-22B" கிரகத்தின் வெப்ப நிலை பூமியின் வெப்ப நிலையை ஒத்தது. இது தனது சூரியனைச் சுற்றிவர 290 நாட்கள் எடுக்கின்றது. இதில் உயிரனங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது. "HD40307g" என்னும் கிரகம் எமது பூமியில் இருந்து 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியிலும் பார்க்க ஏழு மடங்கு பெரியது. இது தனது சூரியனைச் சுற்றிவர 200நாட்கள் எடுக்கின்றன. "HD40307g"கிரகத்தில் உகந்த வெப்ப நிலையும் நீரும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஒளியும் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளி முக்கியமானது. ஆனால் அண்டார்டிக்காவில் பனிப்பாறைகளுக்குக் கீழ் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளியும் இன்றி உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்ட பின்னர் வேறு உலகங்களில் இப்படி நடக்கும் சாத்தியம் உண்டென நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.
வேற்று உலகுகளில் வாழும் உயிரனங்கள் அல்லது மக்கள் அல்லது தேவர்கள் வேறு பட்ட அறிவுநிலை அல்லது திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். தமயந்தியை திருமணம் செய்ய நளனின் உருவம் எடுத்து வந்த தேவர்களை தமயந்தி அவர்களில் கால்கள் நிலத்தில் படாமல் நடப்பதை வைத்துக் கொண்டும் அவர்களின் கண் இமைக்காமல் இருப்பதை வைத்துக் கொண்டும் உண்மையான நளனைக் கண்டறிந்தாள் என நளன் சரிதம் சொல்கிறது.
நாம் இப்போது இருக்கும் அறிவு நிலையில் எம்மால் எந்த ஒரு வேற்று உலக வாசிகளை சென்று சந்திக்க முடியாது. ஆனால் எம்மால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைமையை உருவாக்கலாம். வேற்று உலக வாசிகளில் எம்மிலும் பார்க்க திறைமையில் அதிகம் முன்னேறிவர்கள் எம்மை வந்து சந்திக்கும் சாத்தியம் உண்டு. இதைச் சொன்ன Stephen Hawking என்னும் பிரித்தானிய விஞ்ஞானி வேற்று உலகத்தில் இருந்து எமது பூமிக்கு வருவது கொலம்பஸ் அமெரிக்காவிற்குப் போனது போல் முடியலாம். கொலம்பஸ் அமெரிக்காவிற்குப் போனது அங்கு ஏற்கனவே இருந்த உள்ளூர் வாசிகளுக்கு பெரும் பாதகமாக முடிவடைந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார் Stephen Hawking.

Monday, 24 December 2012
நகைச்சுவை: யேசுநாதர் ஏன் மீண்டும் வரவில்லை?
நாம் எல்லோரும் யேசு நாதரையும் புனித மேரியையும் வெள்ளையர்களாக மனதில் உருவகப் படுத்தியுள்ளோம். நாம் பார்த்த படங்கள் உருருவச் சிலைகள் யாவும் அவர்க்ளை ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களாகச் சித்தரிக்கின்றன. ஜேசுநாதர் பிறந்த இடமான பெத்தேலெகம் நகர் மத்திய கிழக்கில் இருக்கிறது. அது வட ஆபிரிக்க அல்லது மேற்கசியப் பிரதேசமாகும். யேசுவோ புனித மேரியோ நிச்சயமாக ஐரோப்பியர்கள் அல்லர்.
கடவுள் தமது தூதுவரும் ஒரே ஒரு குமாரனுமான யேசுவை மீண்டும் பூமிக்கு அனுப்புவார் என பலரும் நம்புகிறார்கள். கிபி 1000இல் யேசு மீண்டும் வருவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. கிபி 2000இல் மீண்டும் வருவார் என எதிர்பர்த்தார்கள் ஆனால் வரவில்லை. பாவிகள் உலகில் பெருகிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை இரட்சிக்க யேசு வரவில்லை.
யேசு ஏன் வரவில்லை? யேசு ஏற்கனவே ஐரோப்பியராகச் சித்தரிக்கபட்டு விட்டார். அவர் உண்மையில் ஆசியர் அல்லது ஆபிரிக்கர். போன தடவை போல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கச் செய்யாமல் ஒரு நல்ல வசதியா மருத்துவ மனையில் பிறக்கச் செய்வது கடவுளின் எண்ணமாகவும் இருந்தது. அதனால் கடவுள் அடுத்ததாக தனது குமாரனை அமெரிக்காவில் பிறக்கச் செய்ய நினைத்தார். கடவுள் தனது பரிசுத்த ஆவியை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அந்த ஆவி அமெரிக்கா முழுதவும் ஒரு கன்னியைத் தேடி அலையோ அலை என்று அலைந்தது. ஒருத்தி கூடக் கிடைக்கவில்லை. அதனால் பரிசுத்த ஆவி ஏமாற்றமடைந்து பரலோகம் திரும்பிவிட்டது. அதானால் யேசு மீண்டும் வரவில்லை.

இன மோதலாகும் சிரியக் கிளர்ச்சியும் ஐநாவின் கையாலாகத்தனமும்
அரபு வசந்தம் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஒரு பெரும் விடுதலைப் போராக உருவெடுத்தது. 2011இன் ஆரம்பத்தில் துனிசியாவில் ஏற்பட்ட எழுச்சியின் முக்கிய அம்சம் அது ஒரு மத சார்பற்ற
எழுச்சி. அங்குள்ள கற்றவர்களாலும் தொழிற் சங்களாலும் இப்புரட்சி
முன்னெடுக்கப்பட்டது. ஒரு இசுலாமிய நாட்டில் மதசார்பற்ற எழுச்சி ஏற்பட்டது
பலரையும் வியக்க வைத்தது. லிபியப் புரட்சி மேற்குலக ஆதரவுடன் அரங்கேறியது. எகிப்தியப் புரட்சி திசை மாறி மதவாதிகளின் கைகளிற்குப் போய் விட்டது.
துனிசியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மரக்கறிக் கடை வைத்து தன் குடும்பத்தைப் பாதுகாத்து வந்த இளைஞர் பெண் காவல் துறை அதிகாரியால் தாக்கப்பட்டு முகத்தில் காறி உமிழப்பட்டதால் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சி துனிசிய ஆட்சியக் கலைத்துப் பின்னர் அப்புரட்சி எகிப்திற்குப் பரவி ஹஸ்னி முபாராக்கைப் பதவியில் இருந்து விரட்டி கடாஃபியை ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலையும் செய்தது. 2011 மார்ச் மாதத்தில் இருந்தே சிரியாவில் மக்கள் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.
சிரியாவில் சிறுபான்மையினரின் ஆட்சி
சிரியாவில் அடக்குமுறை மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த பஷார் அல் அசாதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக 2011இன் ஆரம்பப்பகுதியில் உருவானது. துனிசியாவிலோ, லிபியாவிலோ அல்லது எகிப்தில் இல்லாத ஒரு நிலை சிரியாவில் இருக்கிறது. எண்ணிக்கையளவில் சிறுபான்மையிரான அலவைற் இனக் குழுமத்தினர் அங்கு ஆட்சியில் இருக்கின்றனர். சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனத்தைச் சேர்ந்தவர்கள் பல அரச உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிரியப் படைத்துறையும் அலவைற் இனக் குழுமத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.
பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள்
சிரியாவில் அதிபர் பஷார் எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர்.
பல இனக் குழுமங்கள்
ஆளும் அலவைற், பெரும்பான்மையினரான. சுனி முசுலிம்கள், சியா முசுலிம்கள், கிருத்தவர்கள், குர்திஷ்கள், துருக்கியர்கள், துருசுக்கள் எனப் பலதரப்பட்ட இனக்குழுமங்கள் சிரியாவில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகால அடக்கு முறை ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கையில் இந்த இனக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியா தொடர்ப்பாக 2012 டிசம்பர் 20ம் திகதி வெளியிட்ட இடைக்கால 10 பக்க அறிக்கையில் சிரியாவில் பல வேறுபட்ட இனக்குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றாக அழியும் நிலையில் அல்லது நாட்டை விட்டு முற்றாக வெளியேறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
கோஃபி அனன்
ஐநா இலங்கையின் தமிழர்கள் அழியும் போது பாராமுகமாக இருந்தது போல் இல்லாமல் குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டுள்ளது. சிரியா தொடர்பாக ஐநா ஒரு சிறப்பு சமாதானத் தூதுவராக முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனனை நியமித்ததூதுவராக நியமித்தது. அவர் சிரியாவில் பட்டபாடு பெரும் பாடு. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டினார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்றது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்றது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்றது. ஆனால் கோஃபி தனது கோரிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை செவிசாய்க்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இன்னும் ஒரு சமாதானத் தூதுவர்.
கோஃபி அனனைத் தொடர்ந்து சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக அல்ஜீரிய அரசதந்திரி அல் அக்தர் பிராமி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டார். அவர் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டும் பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து கொண்டும் இருக்கிறார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர் 24,000இற்கும் அதிகமான மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டனர். எந்த ஒரு சமாதான முன்னெடுப்பையும் செய்ய முடியாத நிலையில் அல் அக்தர் பிராமி இருக்கிறார்.
அழிவைத் தடுக்காத ஐநா
சிரியாவில் அல் அசாத்தின் வீழ்ச்சியை மத்திய கிழக்கில் தமது பிடிக்கு விழும் அடியாக சீனாவும் இரசியாவும் நம்புகின்றன. ஈரானின் ஆட்சியாளர்கள் அசாத்தின் விழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு தம்மீதானதாக இருக்கும் என நம்புகின்றனர். சிரிய உள்நாட்டுப் போர் ஒரு பன்னாட்டுப் போட்டிக் களமாகக் கருதப்படுகிறது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 44,000பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். ஐநாவின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகளால் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் கூட்டாக இரத்துச் செய்தன. இப்போது ஐநாவே சிரியாவில் இனக்குழுமங்களிடை பெரும் மோதல் வெடிக்கப்போகிறது என்று சொல்கிறவேளையில் பேரழிவை யார் தடுப்பார்?

Sunday, 23 December 2012
நகைச்சுவை: வாழ்வின் உன்னதமான கணங்கள்
வாழ்கையில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் பல் இருக்கின்றன. அவற்றில் சில:
- விடுமுறை நாளில் பழைய நண்பர்களைச் சந்தித்தல்
- முதற் பிள்ளையை கையில் தூக்குதல்.
- தலைவர் ஒருவர் இறந்ததற்காக திடீரென்று விடுமுறை அறிவித்தல்.
- அவளை/அவனை கண்டதும் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி படபடத்தல்
.
- கடலை போட்ட ஃபிகர் கரெக்ட் பண்ணுப்படுதல்.
- காலை எழுந்தவுடன் அரியேர்ஸ் முடிந்து விட்டது என்ற நினைப்பு மனதில் வருதல்.
- மாலைப் பொழுதில் அமைதியான தெருவில் இனிய இசை கேட்டபடி நடத்தல்.
- காலை கண் விழித்தவுடன் இன்னும் சில நேரம் படுக்கையில் படுத்திருக்க நேர அவகாசம் இருத்தல்
- சலவை செய்ய எடுத்த ஆடைப்பைக்குள் பணம் இருத்தல்.
-

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...