Tuesday, 28 June 2011

ரீ சேர்ட் நகைச்சுவைகள்

சுதந்திரமாக(இலவசமாக) பிறந்தது. இப்போது விலை உயர்ந்தது.

சமச்சீர்க் கல்வியோ? சமச்சீரில்லாக் கல்வியோ?

சந்தர்ப்பம் கிடைத்தால்????



நல்ல யோசனை.

யானைக்குத் தீனி போட்டு மாளாது.















Monday, 27 June 2011

போர்க் குற்றம்: கடாஃபியை கைது செய்ய உத்தரவிட்டது பன்னாட்டு நீதி மன்று


லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) இன்று பிறப்பித்துள்ளது.

பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்கிறார்.

லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். இரு ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளைச் பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

கடாஃபிமீது துரித நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
  • லிபியாவில் மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்படவில்லை.
  • லிபியாவில் மக்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கான விநியோகம் தடைசெய்யப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்தவர்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
  • லிபியாவில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்யாமல் வீடுகளில் இருந்தவர்கள் எவராவது தாக்கப்படவில்லை, காயப்படவில்லை, கொல்லப் படவில்லை.
  • லிபியாவில் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றை அறிவித்து விட்டு அதற்குள் மக்களை வரச் சொல்லி அங்கு கடல் தரை ஆகாய மார்க்கமாக அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு குழந்தை தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு கற்பிணிப் பெண்தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு தள்ளாத வயோதிபர் தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு மதத் தலமாவது அழிக்கப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு நாளில் மட்டும் 25,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் இறுதிப் போரில் 40,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் உயிரோடு மக்கள் புதைக்கப்படவில்லை.
  • லிபியாவில் சரணடையுங்கள் உங்களை பன்னாட்டு நியமங்களுக்கு அமைய போர்க்கைதிகள் போல் நடாத்துகிறோம் என்ற உறுதி மொழியை ஐநா மூலமாக வழங்கிவிட்டுப் பின்னர் சரணடைய வந்தவர்களைக் கொல்லவில்லை.
இவையாவும் இலங்கையில் நடந்ததாகப் பலதரப்பினரும் கூறுகிறார்கள். இலங்கையில் உக்கிரமாகப் போர் நடக்கும் போது நாளாந்தம் 5,000பேர் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஐநா இது தொடர்பான கலந்துரையாடல்களை பகிரங்கமாக நடாத்தாமல் நிலத்துக்குக் கீழ் உள்ள அறையில் மிக இரகசியமாக நடாத்தியது. இலங்கையில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்று கேட்டபோது நாம் பிணங்களை எண்ணுவதில்லை எனப் பதிலளிக்கப்பட்டது.

Sunday, 26 June 2011

விநோதமான திருமணங்கள்


2009இல் ஒரு ஜப்பானிய இளைஞர் விடியோ விளையாட்டில் (Nintendo DS game) உள்ள பெண் உருவைத் திருமணம் செய்து கொண்டார்.


2010இல் கொரிய இளைஞர் ஜின் ஜியு ஒரு தலையணையைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜெர்மனியின் பெர்லின் சுவரைத் திருமணம் செய்தார் ஒரு பெண்.

நாயைத் தான் கொன்ற சாபம் தீர 33வயது இந்திய இளைஞர் செல்வக் குமார் ஒரு நாயைத் திருமணம் செய்தார்.

2007இல் ஒரு இஸ்ரேலிய இளைஞர் ஒரு கழுதையைத் திருமணம் செய்தார்.

39 வயது சீன மாப்பிளைக்கு மணமகள் அவரது சொந்த கட்-அவுட். இது நடந்தது 2009இல்.

ஒரு பசுவுடன் நிர்வாணமாக இருந்தமைக்காக பாலியில் 2010இல் ஒரு இளைஞர் அப்பசுவைத் திருமணம் செய்யும் படி கட்டளையிடப்பட்டார்.

ஜெர்மனியில் ஒரு இளைஞர் பூனைய 2010இல் திருமணம் செய்தார். அங்கு மிருகத்தை மனிதர் திருமணம் செய்வது சட்ட விரோதம் என்பதால் அதை ஒரு நாடகம் போல் அரங்கேற்றினார். ஒரு நடிகை திருமணப்பதிவாளராகச் செயற்பட்டார்.

புகைவண்டி இயந்திரத்தையும் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

இலங்கை இந்திய 20/20 கிரிக்கெட் முறுகல்


20/20 ஓவர் துடுப்பாட்டத்திற்கு இருந்த வரவேற்பை இந்தியக் துடுப்பாட்டச் சபை நன்கு பயன்படுத்தி பெரும் வெற்றியைக் கண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஐபிஎல் 20/20 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களை இலங்கை துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துப் பயணத்திற்கு தயர் செய்வதற்கான பயிற்ச்சிக்கு இலங்கை வரும்படி இலங்கைத் துடுப்பாட்டச் சபை அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து இலங்கை இந்திய துடுப்பாட்டச் சபைகளுக்கிடையே மோதல் உருவானது. இது தீவிர மடையாமல் இருக்க இலங்கை அரசு தலையிட்டது. ஆத்திரமடைந்த இலங்கைத் துடுப்பாட்டச் சபை இந்தியாவின் ஐபிஎல்இற்குப் போட்டியாக தான் எஸ்.எல்.பி.எல் என்னும் பெயரில் 20/20 துடுப்பாட்டப் போட்டிகளை ஒழுங்கு செய்வதாக அறிவித்தது.

இலங்கையின் எஸ்.எல்.பி.எல் இல் இலங்கையின் ஏழு மாகணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஏழு அணிகள் விளையாடும். தமிழர்கள் வாழும் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இதிலும் புறக்கணிக்கப்பட்டன. ஏழு அணிகளும் Basnahira Bears, Kandurata Kites, Nagenahira Nagas, Ruhuna Rhinos, Uthura Oryxes, Uva Unicorns and Wayamba Wolves எனப் பெயரிடப்பட்டுள்ளன. போட்டிகள் ஜூலை 19-ம் திகதி ஆரம்பமாகும். எல்லாப் போட்டிகளும் பிரேமதாச அரங்கில் நடைபெறும். விளையாடும் வீரர்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படாமல் இலங்கைத் துடுப்பாட்டச் சபையே யார் எந்த அணியில் விளையாடுவர் என்பதை முடிவு செய்யும் என்றும் கருதப்படுகிறது.

இலங்கை எஸ்.எல்.பி.எல் உருவாக்கியவுடன் துள்ளிக் குதித்தவர்கள் பாக்கிஸ்த்தானிய வீரர்களே. இவர்கள் 2008இல் நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஐபிஎல் இல் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பாக்கிஸ்தான் ஒரு 20/20 அணியை இந்தியாவிற்குப் போட்டியாக உருவாக்க அங்குள்ள தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் தடையாக இருக்கிறது.


இந்த மோதலைத் தூண்டிவிட்டவர் லலித் மோடி என்னும் இந்தியாவின் ஐபிஎல் 20/20இன் முன்னாள் தலைவர் என்றும் கூறப்பட்டது. லலித் மோடி 106மில்லியன் டாலர் மேசடி செய்தமைக்காக அவர் இந்தியாவின் ஐபிஎல் 20/20இன் தலைவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதுடன் அவர்மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கையின் எஸ்.எல்.பி.எல் போட்டிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த Somerset Entertainment Ventures நிறுவனம் ஒழுங்கு செய்வதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து இந்திய இலங்கை துடுப்பாட்டச் சபைகளுக்கிடையிலான முறுகல் அதிகரித்தது. Somerset Entertainment Ventures நிறுவனம் லலித் மோடியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இலங்கை இந்திய முறுகல் உருவானது. இந்தியா தனது வீரர்களை இலங்கையின் எஸ்.எல்.பி.எல் இன் போட்டிகளில் பங்கு பெறுவதைத் தடை செய்தது. இது இலங்கையை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனாலும் இலங்கைத் துடுப்பாட்டச் சபை இலங்கை இந்திய "நல்லுறவை" கருத்தில் கொண்டு இதைச் சகித்துக் கொள்வதாக அறிவித்தது.

Saturday, 25 June 2011

தொலைந்தாள் என்று சிரித்திரு


கடந்த காலம் ஆசிரியன்
நிகழ் காலம் தேர்வு
நாளை முடிவுகள்

போய்விட்டாள் என்று
கலங்காதே
போய்த் தொலைந்தாள் என்று
சிரித்திரு


கண்கள் எனது
கண்ணீர் உனது
இதயம் எனது
நினைவு உனது

அன்பு எனது
கோபம் உனது
ஆசை எனது
வெறுப்பு உனது

சொத்துக்கள் எனது
சுகம் உனது
பாசம் எனது
பிரிவு உனது

Friday, 24 June 2011

ஹைக்கூ: காசோலையில்லா வங்கிக் கணக்கு


நேற்றைய கனவுகள்
இன்றைய உழைப்புக்கள்
நாளைய வெற்றிகள்

இரு உள்ளங்களின் இணைப்பு
திருமணத்தின் முன்னேற்பாடு
காதல்

கடந்தகாலம் பற்றிய கருத்து
இன்றைய கடின உழப்பு
வெற்றியின் வழி

புன்னகையில்லா உதடு
கருணையில்லா மனது
காசோலையில்லா வங்கிக் கணக்கு

Monday, 6 June 2011

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?


இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது ஒரு விடை கிடைக்காத கேள்வியா? பல ஊடகங்கள் நாற்பதினாயிரம் என்கின்றன. எழுபதினாயிரம் என்று பல ஊடகங்கள் கூறுகின்றன. இன்னும் சில இருபத்தையாயிரம் என்கின்றன. வன்னியில் வாழ்ந்தவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார் ஒரு மத போதகர்.

போரில் இறுதியில் ஒரு தினத்தில் மட்டும் 25,000பேர் கொல்லப்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. போரின் இறுதி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர். 2009இல் மட்டும் 70,000இற்கு மேல் கொல்லப்பட்டனர். என்கின்றனர் சிலர். இலங்கை அரசு அதைப்பற்றி எந்தவிதமான கணக்கெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.

போர் விதவைகள்
போர் முடிந்த பின்னர் இலங்கையின் நிதி நிலை மோசமடைந்ததால் இலங்கை அரசு தமிழர்களுக்கான நிவாரண உதவி என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பணம் கறக்க முயன்றது. அப்போது இலகுவாக பணம் கறக்க ஒரு வழி போரால் விதவையானவர்களைச் சாட்டாக வைத்து மற்ற நாடுகளிடமிருந்தும் தொண்டர் அமைப்புக்களிடமிருந்தும் பணம் கறப்பதற்காக வடக்குக் கிழக்கில் உள்ள போர் விதைவைகளைக் கணக்கெடுத்தது. அதன்படி இலங்கையின் தமிழர்களின் பிரதேசமான வடக்கிலும் கிழக்கிலும் 90,000 போர் விதவைகள் இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

இலங்கை அரசு கணக்கெடுக்கும் போது இலங்கையில் 90,000 விதவைகள் இருந்தனர். இலங்கைப் போர் 1977இல் இருந்து நடந்து வருகிறது. அதன் பிறகு கணவனை இழந்த விதவைகள் பலர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். நாட்டை விட்டு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வெளியேறிவிட்டனர். அந்த வகையில் நாலில் ஒரு பங்கு விதவைகள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்று வைத்தாலும் 22,500விதவைகள் நாட்டை விட்டு வெளியேறினர் என்று சொல்லலாம். மொத்தமாக 112,500 போர் விதவைகள். பல பெண்கள் கணவன்மாருடன் இறந்திருக்கிறார்கள். அவர்கள் தொகை 12,500ஆக இருக்கலாம். மொத்தமாக 125,000ஆண்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 125,000ஆண்கள் கொல்லப்பட்ட இடத்தில் 100,000பெண்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதை வைத்துக் கொண்டு 25 இற்கும் 75வயதிற்கும் உட்பட்ட 225,000 ஆண்பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடலாம். இலங்கையில் மக்கள் தொகையில் 25வயதிற்கு உட்பட்டவர்கள்தான் அதிகம். இதனால் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 100,000பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடலாம். முதியவர்கள் 15,000கொல்லப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் 340,000 பேர் இலங்கையில் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

இதை வேறு விதமாக உறுதி செய்ய முடியுமா?
வாஷிங்டன் மற்றும் ஹவார்ட் மருத்துவ கல்லூரிகள் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையில் 1983 இருந்து 2002ம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் குறைந்தது 2இலட்சத்து 15ஆயிரம் பேர் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்ததொகை சுமார் 3இலட்சத்து 38ஆயிரமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மீது 2002-ம் ஆண்டின் பின்புதான இலங்கைப் படையினர் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்கள். உக்கிரமான போர் 2008இல் தான் ஆரம்பித்தது.

இவற்றை வைத்துக் கொண்டு அடித்துச் சொல்லலாம் இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் இணைந்து கொன்றன என்று.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...