Monday 27 June 2011

போர்க் குற்றம்: கடாஃபியை கைது செய்ய உத்தரவிட்டது பன்னாட்டு நீதி மன்று


லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) இன்று பிறப்பித்துள்ளது.

பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்கிறார்.

லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். இரு ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளைச் பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

கடாஃபிமீது துரித நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
  • லிபியாவில் மருத்துவ மனைகள் மீது குண்டுகள் வீசப்படவில்லை.
  • லிபியாவில் மக்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளுக்கான விநியோகம் தடைசெய்யப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்தவர்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
  • லிபியாவில் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் பாவிக்கப்படவில்லை.
  • லிபியாவில் கலவரம் செய்யாமல் வீடுகளில் இருந்தவர்கள் எவராவது தாக்கப்படவில்லை, காயப்படவில்லை, கொல்லப் படவில்லை.
  • லிபியாவில் பாதுகாப்பு வலயம் என்று ஒன்றை அறிவித்து விட்டு அதற்குள் மக்களை வரச் சொல்லி அங்கு கடல் தரை ஆகாய மார்க்கமாக அப்பாவிகள் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு குழந்தை தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு கற்பிணிப் பெண்தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு தள்ளாத வயோதிபர் தன்னும் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு மதத் தலமாவது அழிக்கப்படவில்லை.
  • லிபியாவில் ஒரு நாளில் மட்டும் 25,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் இறுதிப் போரில் 40,000பேர் கொல்லப்படவில்லை.
  • லிபியாவில் உயிரோடு மக்கள் புதைக்கப்படவில்லை.
  • லிபியாவில் சரணடையுங்கள் உங்களை பன்னாட்டு நியமங்களுக்கு அமைய போர்க்கைதிகள் போல் நடாத்துகிறோம் என்ற உறுதி மொழியை ஐநா மூலமாக வழங்கிவிட்டுப் பின்னர் சரணடைய வந்தவர்களைக் கொல்லவில்லை.
இவையாவும் இலங்கையில் நடந்ததாகப் பலதரப்பினரும் கூறுகிறார்கள். இலங்கையில் உக்கிரமாகப் போர் நடக்கும் போது நாளாந்தம் 5,000பேர் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஐநா இது தொடர்பான கலந்துரையாடல்களை பகிரங்கமாக நடாத்தாமல் நிலத்துக்குக் கீழ் உள்ள அறையில் மிக இரகசியமாக நடாத்தியது. இலங்கையில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்று கேட்டபோது நாம் பிணங்களை எண்ணுவதில்லை எனப் பதிலளிக்கப்பட்டது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...