Sunday, 26 June 2011
இலங்கை இந்திய 20/20 கிரிக்கெட் முறுகல்
20/20 ஓவர் துடுப்பாட்டத்திற்கு இருந்த வரவேற்பை இந்தியக் துடுப்பாட்டச் சபை நன்கு பயன்படுத்தி பெரும் வெற்றியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஐபிஎல் 20/20 போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த இலங்கை துடுப்பாட்ட வீரர்களை இலங்கை துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துப் பயணத்திற்கு தயர் செய்வதற்கான பயிற்ச்சிக்கு இலங்கை வரும்படி இலங்கைத் துடுப்பாட்டச் சபை அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து இலங்கை இந்திய துடுப்பாட்டச் சபைகளுக்கிடையே மோதல் உருவானது. இது தீவிர மடையாமல் இருக்க இலங்கை அரசு தலையிட்டது. ஆத்திரமடைந்த இலங்கைத் துடுப்பாட்டச் சபை இந்தியாவின் ஐபிஎல்இற்குப் போட்டியாக தான் எஸ்.எல்.பி.எல் என்னும் பெயரில் 20/20 துடுப்பாட்டப் போட்டிகளை ஒழுங்கு செய்வதாக அறிவித்தது.
இலங்கையின் எஸ்.எல்.பி.எல் இல் இலங்கையின் ஏழு மாகணங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஏழு அணிகள் விளையாடும். தமிழர்கள் வாழும் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இதிலும் புறக்கணிக்கப்பட்டன. ஏழு அணிகளும் Basnahira Bears, Kandurata Kites, Nagenahira Nagas, Ruhuna Rhinos, Uthura Oryxes, Uva Unicorns and Wayamba Wolves எனப் பெயரிடப்பட்டுள்ளன. போட்டிகள் ஜூலை 19-ம் திகதி ஆரம்பமாகும். எல்லாப் போட்டிகளும் பிரேமதாச அரங்கில் நடைபெறும். விளையாடும் வீரர்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படாமல் இலங்கைத் துடுப்பாட்டச் சபையே யார் எந்த அணியில் விளையாடுவர் என்பதை முடிவு செய்யும் என்றும் கருதப்படுகிறது.
இலங்கை எஸ்.எல்.பி.எல் உருவாக்கியவுடன் துள்ளிக் குதித்தவர்கள் பாக்கிஸ்த்தானிய வீரர்களே. இவர்கள் 2008இல் நடந்த மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஐபிஎல் இல் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பாக்கிஸ்தான் ஒரு 20/20 அணியை இந்தியாவிற்குப் போட்டியாக உருவாக்க அங்குள்ள தீவிரவாதிகளின் தாக்குதல் அச்சம் தடையாக இருக்கிறது.
இந்த மோதலைத் தூண்டிவிட்டவர் லலித் மோடி என்னும் இந்தியாவின் ஐபிஎல் 20/20இன் முன்னாள் தலைவர் என்றும் கூறப்பட்டது. லலித் மோடி 106மில்லியன் டாலர் மேசடி செய்தமைக்காக அவர் இந்தியாவின் ஐபிஎல் 20/20இன் தலைவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதுடன் அவர்மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கையின் எஸ்.எல்.பி.எல் போட்டிகளை சிங்கப்பூரைச் சேர்ந்த Somerset Entertainment Ventures நிறுவனம் ஒழுங்கு செய்வதாக செய்தி வந்ததைத் தொடர்ந்து இந்திய இலங்கை துடுப்பாட்டச் சபைகளுக்கிடையிலான முறுகல் அதிகரித்தது. Somerset Entertainment Ventures நிறுவனம் லலித் மோடியுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இலங்கை இந்திய முறுகல் உருவானது. இந்தியா தனது வீரர்களை இலங்கையின் எஸ்.எல்.பி.எல் இன் போட்டிகளில் பங்கு பெறுவதைத் தடை செய்தது. இது இலங்கையை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஆனாலும் இலங்கைத் துடுப்பாட்டச் சபை இலங்கை இந்திய "நல்லுறவை" கருத்தில் கொண்டு இதைச் சகித்துக் கொள்வதாக அறிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
4 comments:
North and East is not left alone... Purakkanikkap paddathu thamizhthaan...
Uthura - North
Nagenahera - East
Don't give incorrect info, that may damage ur reputation...
ஒன்பது மாகாணங்கள் இலங்கையில் உள்ளன. ஏழு அணிகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.
negara hira - East province, uthura - north ... - if u dnt knw, pls shut ur comet
negara hira - East province, uthura - north ... - if u dnt knw, pls shut ur comet
Post a Comment