Thursday, 14 May 2009

உன்னோடு ஏன் வந்தது


உனை அணைத்த கைகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உன் பெயர் உரைத்த உதடுகள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனை நாடி நடந்த கால்கள்
என்னோடிருக்கின்றன
உன்னோடு வரவில்லை

உனைச் சுமந்த என் இதயம்
என்னோடில்லை
உன்னோடு ஏன் வந்தது

பிரித்தானியாவில் அவதானிக்கப் பட்ட பறக்கும் தட்டு - காணொளியுடன்.

பிரித்தானியாவில் பிரிஸ்டல் நகரில் அண்டி ஹடிங்ரன் என்பவர் வானில் தெரிந்த ஒரு நூதனமான பொருளைப் படம் பிடித்துள்ளார். அந்த நூதனமான பொருள் சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 5:30 மணியளவில் வானில் தென்பட்டதாம். இதை வேறும் பலர் அவதானித்தார்களாம். பறந்து சென்ற நூதனமான பொருளில் இருந்து சத்தம் ஏதும் வரவில்லையாம்.

ரெலிகிறாf பத்திரிகை இதன் ஒளிவடிவத்தை வெளியிட்டுள்ளது
::

ஐரோப்பாவில் இரத்தக் களரிக்கு தூபம் போடும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு



சென்ற சனிக்கிழமை (8ம்திகதி) பிற்பகல் பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் பகுதியில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி துப்பரவு செய்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அப்போது முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவர் என்னிடம் வந்து பிரதர் முன்று மற்றப் பாட்டிக்காரர் வந்து நிக்கிறாங்கள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண் பிள்ளைகளைப் பற்றி அசிங்கமாக விமர்சிக்கிறாங்கள் வாங்கோ ஒருக்கா என்று என்னைக் கூப்பிட்டார். அவர் இலங்கைத் தமிழைப் பேசுவது போலிருந்தாலும் அதன் போலித்தனம் தெளிவாகத் தெரிந்தது. அவரை ஐயர் என்று அழைப்போமே!! நானும் போனேன். மூவரச் சுட்டிக்காட்டினார். ஒருவன் சிங்களவன் ஒருவன் தமிழன் மற்றவன் முஸ்லிம் என் று முவரையும் எனக்குக் காட்டினார். அதில் சிங்களவர் ஒரு இடத்திலும் மற்ற இருவரும் வேறிடத்திலும் நின்றனர். சிங்களவர் என்று சொன்னவரை நான் நன்றாக கவனித்தேன். அவர் என்னையும் என்னுடன் நின்றவரையும் பார்த்தார். மற்றவர்கள் இருவரின் இருவருக்கும் அண்மையில் சென்று நின்றேன். என்னுடன் கதைத்த ஐயரும் அங்கு வந்தார். அவர்கள் பிரச்சனைக்கு உரியவர்கள் என்று தெரிந்த்தது. நான் ஆர்ப்பாட்ட ஏற்ப்பாட்டாளர்களிடம் சொன்னேன். அவர்கள் சொன்னார்கள் இப்படிப் பட்டவர்கள் தினம் வருவதுண்டு அவர்களை அப்படியே விட்டு விடுவோம் என்றார். ஆனால் அவர்களைப் புகைப்படங்கள் எடுக்க விடுவதில்லை என்றார்கள். நான் அதை ஐயரிடம் கூறினேன். அவர் இல்லை இல்லை இவங்களைச் சும்மா விடக் கூடாது என்று பலகதைகள் கூறி அங்கு ஒருகுழப்பம் ஏற்படுத்துவதற்கான முயற்ச்சியில் முனைப் பட்டார். இப்போது எனது தோளில் இருந்த புகைப்படக் கருவியின் பை கீழே விழுந்துவிட்டது. ஐயர் இப்போது அதை எனக்கு எடுத்துத் தருவதற்கு குனிந்தார். அவர் பூனூல் அணிந்திருப்பது தெரிந்தது.
பின்னர் எனக்கு நிலமை புரிந்துவிட்டது. ஒருவாறு அவரிடமிருந்து விலகிவிட்டேன். சில மணித்தியாலங்களின் பின் வீடு திரும்ப சுரங்க தொடரூந்து நிலையத்திற்கு சென்ற போது அந்த ஐயர் மற்ற மூவருடனும் ஒரு மூலையில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்!!!!!!

இந்தியத் தூதுவரகத்தின் மீது கல் வீச்சு - சதி வேலையே
இலண்டனில் உள்ள இந்தியத் தூதுவரகத்தின் முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது தூதுவரகத்தின் மீது கல்வீசியவர்கள் வெளியில் இருந்துவந்த உள்வாளிகளே என்று தமிழர்கள் கூறுகிறார்கள். தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தில் அப்படி ஏதும் இருந்திருக்கவில்லை. இச் சம்பவம் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.
.
வடக்கு இலண்டன் விஹாரை மீது தாக்குதல்
வடக்கு இலண்டன் விஹாரை மீது இரு முறை தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதுவும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.

பிரான்சில் தாக்குதல்கள்
பிரான்சில் பெளத்த விஹாரை மீதும் அதைத் தொடர்ந்து சைவக் கோயிலின்மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிங்கள இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்ககும் போது ஐரோப்பாவில் முனைப்புப் பெற்றுவரும் தமிழ்தேசிய வாதத்தை அசிங்கப் படுத்த ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகள் ஒரு நாசகார வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது புலனாகிறது.

Wednesday, 13 May 2009

Love is like a gamble


I used to love a girl
With all my heart
I was thinking of none but her
She made me bright
Holding her very tight
Dancing under dim light
Walking through the night
She messed me with my heart
She never realizes how I felt
Love is like a gamble
Hard to see the outcome
I want to live without woe
With someone with me forever

இந்தியாவின் வைத்திய குழு மனித உறுப்புகள் திருடுகிறதா??

கொடூரமான படங்கள்!! நான் பார்த்துப் பதறிவிட்டேன்!!!

உங்களுக்கு மனத்தைரியம் இருந்தால் பாருங்கள்:

http://www.tamilwin.org/view.php?2aSWnBe0d1j0g0ecGG7B3b4j9EE4d3g2h2cc2DpY3d436QV3b02ZLu2e

சிங்களத்தை சுற்றி வளைக்கும் தமிழர்கள்

இராணுவ ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்தியா சிங்களத்திற்கு பக்க பலமாக நின்று செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் விஜய் நம்பியார் செய்த அடாவாடித்தனம், இரசியா பாதுகாப்புச் சபையில் கொடுக்கும் முட்டுக் கட்டை ஆகியன சர்வதேச ரீதியில் இலங்கையின் இனப் படு கொலைக்கு இந்தியா கொடுக்கும் கள்ளத்தனமான ஆதரவிற்கு நல்ல எடுத்துக் காட்டு. இந்த இந்தியாவின் கள்ளத்தனத்தை தகர்தெறிய உலகெங்கும் வாழ் தமிழர்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். அவர்கள் இரவு பகலாக செய்யும் பல போராட்டங்கள் சில அரசுகளின் கொள்கை வகுப்பாளர்களிடம் மன மாற்றம் எற்படுத்துவது உண்மை. தமிழர் பிரச்சனை பலநாடுகளில்நாடாளாவிய ரீதியில் பிரபல மடைந்து வருகிறது. நான் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை என்னுடன் வேலை செய்பவர்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டு. சுமார் 3 மாதங்களிற்கு முன் இதற்காக மிகச் சிரமம் எடுத்துக் கொண்டதுண்டு. இப்போது கலையில் அவர்களாக வந்து இலங்கையில் நேற்று அரச படைகள் மருத்துவ மனையைத் தாக்கியதாம் என்று அவர்களாகவே வந்து எனக்கு செய்தி சொல்லும் அள்விற்கு மாறிவிட்டது. வானொலி தொலைக்காட்சி பத்திரிகைகள் எல்லாவற்றிலும் அவ்வப்போது இல்ங்கைச் செய்திகள் வெளிவருகின்றன. இன்றைய ரைம்ஸ் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:
Slaughter in Sri Lanka
The world must force Colombo to halt the shelling of trapped civilians.

மேலும் வாசிக்க: http://www.timesonline.co.uk/tol/comment/leading_article/article6276147.ece

இங்கு Slaughter என்பது மிகக் கடுமையான பதம் என்பதைக் கவனிக்கவும்.
.
பிரித்தானியாவின் பாராமுகக் கொள்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர். பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழர்கள் சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு எதிராக போர்க் குற்றதிற்கான சட்ட நடவடிக்கை எடுக்க விருக்கின்றனர்.

பிரித்தனிய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டு முயற்சி, பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரதும் ஹிலரி கிளிண்டனதும் கூட்டறிக்கை எல்லாம் உலகத் தமிழர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. உலகத்தமிழர்களின் போராட்டங்கள் இப்போதைக்கு ஓய்விற்கு வருவதாகத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இஸ்ரெலிய இராச தந்திரி ஒருவர் இலங்கை அரசிடம் தெரிவித்த கருத்து:

"நீங்கள் இங்கு தமிழர்களைச் சுற்றி வளைக்கிறீர்கள், உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைச் சுற்றி வளைக்கிறார்கள்"

படிக்கட்டும் ஒரு பாடம் இத்தாலிச் சனியாள் கட்சி


படிக்கட்டும் ஒரு பாடம்

இத்தாலிச் சனியாள் கட்சி

உலகத்தில் எந்த மூலையில்

தமிழ் உறவுகளுக்கு எதிராக

ஒரு துரும்பு அசைந்தாலும்

திரண்டெழுவான் மானத் தமிழன்

கொதித்துப் பொங்கிடுவான்

கொலை வெறி கொள்வான்


படிக்கட்டும் பெரும் பாடம்
தமிழின விரோதிகள் கூட்டம்
ஓடட்டும் தமிழ் மண்ணை விட்டு
தறிகெட்டுத் தலை தெறிக்க
அடிபட்டு உதைபட்டு
அவமானப் பட்டு அல்லல் பட்டு
ஓடட்டும் தமிழ் மண்ணைவிட்டு
.
படிக்கட்டும் புதுப்பாடம்
மத்தியில் வரும் ஆட்சிகள்
மறத்தமிழனுக்கு இங்கே
இன்னல் கொடுத்தால்
அடிபடுவீர் அனைவரும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...