
சென்ற சனிக்கிழமை (8ம்திகதி) பிற்பகல் பிரித்தானியப் பாராளமன்ற சதுக்கத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் பகுதியில் உள்ள குப்பைகளைப் பொறுக்கி துப்பரவு செய்பவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அப்போது முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவர் என்னிடம் வந்து பிரதர் முன்று மற்றப் பாட்டிக்காரர் வந்து நிக்கிறாங்கள். ஆர்ப்பாட்டம் செய்யும் பெண் பிள்ளைகளைப் பற்றி அசிங்கமாக விமர்சிக்கிறாங்கள் வாங்கோ ஒருக்கா என்று என்னைக் கூப்பிட்டார். அவர் இலங்கைத் தமிழைப் பேசுவது போலிருந்தாலும் அதன் போலித்தனம் தெளிவாகத் தெரிந்தது. அவரை ஐயர் என்று அழைப்போமே!! நானும் போனேன். மூவரச் சுட்டிக்காட்டினார். ஒருவன் சிங்களவன் ஒருவன் தமிழன் மற்றவன் முஸ்லிம் என் று முவரையும் எனக்குக் காட்டினார். அதில் சிங்களவர் ஒரு இடத்திலும் மற்ற இருவரும் வேறிடத்திலும் நின்றனர். சிங்களவர் என்று சொன்னவரை நான் நன்றாக கவனித்தேன். அவர் என்னையும் என்னுடன் நின்றவரையும் பார்த்தார். மற்றவர்கள் இருவரின் இருவருக்கும் அண்மையில் சென்று நின்றேன். என்னுடன் கதைத்த ஐயரும் அங்கு வந்தார். அவர்கள் பிரச்சனைக்கு உரியவர்கள் என்று தெரிந்த்தது. நான் ஆர்ப்பாட்ட ஏற்ப்பாட்டாளர்களிடம் சொன்னேன். அவர்கள் சொன்னார்கள் இப்படிப் பட்டவர்கள் தினம் வருவதுண்டு அவர்களை அப்படியே விட்டு விடுவோம் என்றார். ஆனால் அவர்களைப் புகைப்படங்கள் எடுக்க விடுவதில்லை என்றார்கள். நான் அதை ஐயரிடம் கூறினேன். அவர் இல்லை இல்லை இவங்களைச் சும்மா விடக் கூடாது என்று பலகதைகள் கூறி அங்கு ஒருகுழப்பம் ஏற்படுத்துவதற்கான முயற்ச்சியில் முனைப் பட்டார். இப்போது எனது தோளில் இருந்த புகைப்படக் கருவியின் பை கீழே விழுந்துவிட்டது. ஐயர் இப்போது அதை எனக்கு எடுத்துத் தருவதற்கு குனிந்தார். அவர் பூனூல் அணிந்திருப்பது தெரிந்தது.
பின்னர் எனக்கு நிலமை புரிந்துவிட்டது. ஒருவாறு அவரிடமிருந்து விலகிவிட்டேன். சில மணித்தியாலங்களின் பின் வீடு திரும்ப சுரங்க தொடரூந்து நிலையத்திற்கு சென்ற போது அந்த ஐயர் மற்ற மூவருடனும் ஒரு மூலையில் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்!!!!!!
இந்தியத் தூதுவரகத்தின் மீது கல் வீச்சு - சதி வேலையே
இலண்டனில் உள்ள இந்தியத் தூதுவரகத்தின் முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது தூதுவரகத்தின் மீது கல்வீசியவர்கள் வெளியில் இருந்துவந்த உள்வாளிகளே என்று தமிழர்கள் கூறுகிறார்கள். தங்கள் நிகழ்ச்சித் திட்டத்தில் அப்படி ஏதும் இருந்திருக்கவில்லை. இச் சம்பவம் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.
.
வடக்கு இலண்டன் விஹாரை மீது தாக்குதல்
வடக்கு இலண்டன் விஹாரை மீது இரு முறை தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதுவும் ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகளின் வேலையே என்று தமிழர் தரப்பு கூறுகிறது.
பிரான்சில் தாக்குதல்கள்
பிரான்சில் பெளத்த விஹாரை மீதும் அதைத் தொடர்ந்து சைவக் கோயிலின்மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிங்கள இளைஞர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்ககும் போது ஐரோப்பாவில் முனைப்புப் பெற்றுவரும் தமிழ்தேசிய வாதத்தை அசிங்கப் படுத்த ஆரிய சிங்களக் கூட்டமைப்பின் உள்வாளிகள் ஒரு நாசகார வேலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது புலனாகிறது.
No comments:
Post a Comment