Tuesday, 14 April 2009

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தின் மீதான தாக்குதலின் மர்மம்.

1983 ஆம் ஆண்டின் பின் பல ஐரோப்பிய நாடுகளில் வருடந்தோறும் பல ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் அங்கு வாழும் தமிழ்ர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வன்முறைகள் அற்றனவாகவும் மிகுந்த கட்டுக் கோப்புடனும் நடாத்தப் படுகின்றன. காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாகவே கலந்து வருகின்றனர். இதனால் இதுவரை தமிழர்களினது ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி காவல் துறையினர் அனுமதிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு தை மாதத்தில் இலண்டனில் நடந்த நூறாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பேரணி காவல் துறையினர் எதிர் பார்த்ததிலும் அதிகமான மக்கள் கலந்து கொண்டபோதிலும் நிலமையை சமாளிப்பதில் நகர காவல் துறைக்கு பெரும் சிரமம் இருக்கவில்லை. போக்குவரத்துத் துறை மட்டும் தான் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறியது. இலண்டனின் போக்குவரத்துத் துறையின் பலவீனம் யாவரும் அறிந்ததே. இப்பேரணியைப் பார்த்த Sky Television நிருபர் ஒரு பேரணி எப்படி இருக்கவேண்டும் என்பதை தமிழர்களிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பாராட்டினார்.
சுவிஸில் நடந்த பேரணிகளின் போது தமிழர்களின் கட்டுக்கோப்பைப் பார்த்து வியந்த சுவிஸ் காவல் துறை மாஅதிபர் பேரணி ஏற்பாட்டாளர்களை அழைத்துப் பாராட்டினார்.

கண்டிப்பான பிரெஞ்சு அரசு
பிரான்ஸ் தேசம் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு விடயத்தில் மிகவும் கண்டிப்பாகவே நடந்து கொள்ளும். தமிழர்கள் பிரான்ஸில் எவ்வித தடையுமின்றி ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்வர்.

இலங்கைத் தூதுவரகம் ஏன் தாக்கப் பட்டது.
நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை தாண்டி தமிழர் பேரணி சென்றபோது அங்கு காவலாளிகளைத் தவிர எவரும் இருக்கவில்லை. ஆதலால் ஊர்வலத்தில் சென்றவர்களை ஆத்திரமூட்டும் செயல் ஏதுவும் நடக்க வாய்ப்பில்லை. இதில் தமிழ்தேசியப் பேராட்டத்திற்கு எதிரான சக்திகள் ஈடுபட்டதாகவும் தகவல்கள் இல்லை. தமிழ்தேசியவாதம் இப்போது சர்வதேச அங்கீகாரத்திற்காக துடித்து நிற்கிறது. உலகின் பல பாகங்களிலும் நடந்த அண்மைக்கால தமிழர் பேரணிகளில் எந்த இலங்கை அரச சொத்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. பின்வரும் சம்பவங்களின் பின்னணியில் நாம் நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரக்த்தின் மீதான் தாக்குதலின் காரணத்தைப் பார்க்க வேண்டும்:
· கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவரகம் ஏற்கனவே குண்டுத் தாக்குதலுக் குள்ளானது.
· நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவரகத்தை எப்படி இருமுறை தாக்க முடிந்தது. முதலில் தாக்குதல் நடந்போது அங்கிருந்த தூதுவரகக் காவலாளிகள் இரு தாக்குதலாளிகளளத் தடுத்து வைத்திருந்தனர். பின்னர் மேலும் பல தமிழர்கள் உட் புகுந்து அவர்களை மீட்டதுடன் மீண்டும் தாக்கினர்.
· விடுதலைப் புலிகளின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கே. பத்மநாதனை ஐக்கிய நாடுகள் சபை நோர்வே ஊடாகத் தொடர்பு கொண்டதில் இலங்கை நோர்வேமீது தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.


· தாக்குதலின் பின் இலங்கை நோர்வேயை சமாதன ஏற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து நீக்கியது.


. அதற்கு நேர்வே சமாதான ஏற்பாடு எப்போதே முடிவடைந்து விட்டது என்று பதிலடி கொடுத்தது

ஐநாவின் பாராமுகம் அம்பலம்- ஐநாவின் ஊழியர்கள் இலங்கை அரசால் தடுத்து வைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புக்களினதும் ஊழியர்கள் பலரை இலங்கை அரசு தனது வதை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. ஐநா இவர்களை விடுவிக்கும் படி பலமுறை இலங்கை அரசைக் கோரியும் இலங்கை அரசு இவர்களை விடுவிக்க மறுத்துள்ளதை ஐநா மறைத்து வைத்திருந்ததை Inner City Press அம்பலப் படுத்தியுள்ளது. இதை அடுத்து ஐநா இரட்டை வேடம் பூணுகிறதா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Inner City Press e-mailed the spokespeople for The Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) and UNICEF, repeating the question. OCHA spokeswoman Stephanie Bunker replied first:

Subj: Re: Q if there are UN system staff / family in Sri Lankan government's "IDP" camps, and if so...
From: [OCHA at] un.org
To: Inner City PressSent: 4/13/2009 3:17:39 P.M. Eastern Daylight Time

Among those tens of thousands of people who have managed to flee the No Fire Zone in northern Sri Lanka, we are aware that some UN and NGO staff and their dependents have managed to flee as well. As far as we know, they are still in the camps for displaced people set up in the area, and we have repeatedly asked the Government of Sri Lanka to allow them freedom of movement so that they can eventually resume their role as aid workers. While the Government has repeatedly assured us that this request would be met, the staff still remain in the camps.

Inner City Press' sources in Sri Lanka say that OCHA chief John Holmes was informed of these people while he was in Sri Lanka, that local staff dissatisfaction with his public silence about it has been growing.

காட்சிகள், காணொளிகள் - இலண்டன் உண்ணா விரதம் மேலும் பல மாணவர்கள் உண்ணா விரதத்தில் குதிப்பர்.























இலண்டனில் தொடர்ட்ர்ந்தும் தமிழர்கள் பாராளமன்ற சதுக்கத்தில் போராடி வருகின்றனர். நேற்று மாலை ஒரு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். சனிக்கிழமை (11-04-2009 ) நடந்த வரலாறு காணாத மாபெரும் பேரணியுடன் ஓய்ந்துவிடுமென்று பலரும் நினைத்திருந்த போதிலும் பல்கலைக் கழக மாணவர்கள் இதில் சளைக்காது ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டமும் தொடர்கிறது.


பரமேஸ்வரன் சுப்பிரமணியம்

உண்ணாவிரதமிருக்கும் மாணவன் பரமேஸ்வரன் சுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமடைவதால் நகரக் காவலர் அவரை எந்நேரமும் அவர் விருப்பத்திற்கு மாறாக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லலாம். அப்படி எடுத்துச் செல்லப் படும் பட்சத்தில் பல மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டதில் குதிக்கத் தயாராகிறார்கள்.


பாராளமன்ற சதுக்கத்தில் உள்ள புற்றரை தொடர் போராட்டத்தால் பழுதடைந்து விடுமென்று இலண்டன் நகர அதிகார சபையினர் மக்களை நடையோரத்தில் மட்டுமே அனுமதித்தனர்.





Monday, 13 April 2009

யுத்த நிறுத்தத்தை மீறயது சிங்கள-ஆரியக் கூட்டமைப்பு


48 மணி நேர யுத்த நிறுத்தத்தை அறிவித்த 12 மணித்தியாலங்களுள் அதை மீறி பாதுகாப்பு வலயத்தில் பயங்கர ஆயுதங்களை ஏவி 37 அப்பாவித் தமிழர்களைக் கொன்று 120 அப்பாவித் தமழர்களைக் காயப் படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி அப்பாவிகளைக் கொன்று குவிக்கின்றனர்.

ஆரிய சிங்களப் பேய்களின் 48 மணி நேர ஏமாற்று




போக்குவரத்து வசதியில்லாப்
போக்கிரியர் சூழ் போக்கற்ற பூமியது
முடியுமா நாற்பத்தெட்டு மணியில்
இரண்டு இலட்சம் பேர் வெளியேற
தேர்தல் கடலில் தத்தளிக்கும்
காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு துரும்பு
ஆரிய சிங்கள கூட்டுப்படைக்கு
ஒரு இளைப்பாறும் வாய்ப்பு
படையணிகளை மறுசீரமைக்க
தேவையான ஒரு இடைவெளி
கலைஞருக்கு தம்பட்டமடிக்க
நல்லதொரு சந்தர்ப்பம்
உலகெங்கும் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு
வைக்க முயல்கின்றனர் ஒரு ஆப்பு
சர்வதேசத்திற்கு காட்டுகின்றனர்
ஒரு போலிக் காட்சி
எவரும் ஏமாறலாம் போர் நிறுத்தத்தில்
தமிழ் உணர்வாளர்கள் ஏமாறார்

Sunday, 12 April 2009

காணொளியில் - இலண்டன் தமிழர் பேரணி

இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். குழந்தைகள், சிறார்கள், வயோதிபர், நிறைமாதக் கற்பிணிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் உணர்ச்சியுடன் கலந்து கொண்டனர்.









இலண்டனில் - வரலாறு படைத்த தமிழர் பேரணி







கின்னஸ் சாதனை
இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். வந்த மக்கள் தொகை தொடர்பாக் மூன்று விதமான கணிப்புக்கள் வெளிவந்துள்ளன. சிலர் ஒன்றரை இலட்சம் என்றும் சிலர் இரண்டு இலட்சம் என்றும் சிலர் இரண்டரை இலட்சம் என்றும் கூறியுள்னளர். இப்பேரணி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டியது என்றும் கூறப்படுகிறது.
திணறிய இலண்டன்
மக்கள் இலண்டனை நோக்கி நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சென்றதால் இலண்டனின் போக்கு வரத்து அமைப்புக்கள் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறின.

ஐந்து அம்சக் கோரிக்கை
இப் பேரணி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
1. உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம்.
2. தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை உடன் விடுவிக்க வேண்டும்.
3. ஐக்கிய நாட்டு அமைதிப்படை இலங்கை சென்று தமிழர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4. இந்திய அரசு தனது படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
5. சர்வ தேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்கக் கூடாது.
கட்டுக் கோப்பான பேரணி.
இலட்சக் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட போதும் இப் பேரணியில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் மக்கள் மிகக் கட்டுக் கோப்புடன் நடந்துகொண்டனர்.
மாணவர்கள் முன்னின்று செயல்பட்டனர்.
இப்பேரணியின் பெரு வெற்றிக்கு பிரித்தானியப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...