இலங்கை கடன் நெருக்கடி இப்போது தீர்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதற்காக சில ஆலோசனைகள்:
இலங்கை
நடுவண் வங்கியின் முன்னர் ஓர் இலட்சுமி சிலையை
வைத்து அதற்கு ஆறுகாலப் பூசை செய்யவும்.
ஒவ்வொரு
நாணயக்குற்றியிலும் தாளிலும் குபேரனின் உருவத்தை சேர்க்கவும்
அட்சய திருதியையிலன்று உலகச் சந்தையில் தங்கத்தை வாங்கி வைக்கவும்.
தீபாவளி நாளில், திருப்பதி பெருமாளுக்கே கடன் அளித்த குபேரனையும்
மகாலக்ஷ்மியையும் விஷேஷமாக வழிபடுவது மிகவும் பயன் தரும். தீபாவளி அன்று மாலை
குபேர பூசை செய்யவும் 16 விளக்குகள் நெய்யினால்
ஏற்றிக்கொள்ளவும். மஹாலஷ்மிக்கு அர்ச்சனைக்கு வில்வம் இலை,இல்லையெனில்
தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம் இல்லையென்றால் லஷ்மி படம், அர்ச்சனை
செய்ய காசுகளை பயன்படுத்தவும்
சக்கரை பொங்கல், பால் தேன், சிறிது நெய் ஆகியவற்றை நெய்வேத்தியமாகப் படைத்து இந்த மந்திரத்தைச் 108 தடவை உச்சரிக்கவும்:
“ராஜாதி ராஜாய IMF ஸாஹிநே
நமோ வயம் வைஸ்ரவணாய WORLD BANK குர்மஹே!
ஸ மே காமாந் காம காமாய ADBANK மஹ்யம்
கர்மேஸ் வர வைஸ் ரவணாய PB of China ததாது!
குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம!!
வங்கிகளை வாஸ்துப்படி மாற்றி அமைக்கவும்.
அலரி
மாளிகையின் குபேர மூலையில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், சோம்பு ஆகியவற்றை ஒரு மஞ்சள்
துணியில் சிறு மூட்டையாகக் கட்டி வைக்கவும்.
இலங்கையின் சாதகத்தில் கடன் தொல்லைக்குரிய ஆறம் அதிபனாகிய சீனேஸ்வரனுக்கு சாந்தி
செய்யவும்.
இலங்கைப் பொருள்களை உலகில் உள்ள அனைவரும் வாங்க உலக கொள்வனவாளர்களை
வசியம் செய்யவும்.
இலங்கைக்கு கடன் கொடுத்த சீனாவிற்கு எதிராக பில்லி, சூனியம் செய்யவும்.
No comments:
Post a Comment