Monday, 14 May 2018

மீண்டும் பல்துருவ ஆதிக்கம் உருவாகுமா?



பல வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான் நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாஇரசியாபிரசியாபிரான்ஸ்டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்ச்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இருதுருவங்கள்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தமது உலக ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்வதில் போட்டி போட்டுக் கொண்டன. அவை இரண்டின் பின்னால் பல நாடுகள் ஆதரவாக இணைந்து கொண்டன. அது இரு துருவ உலகத்தை உருவாக்கியது. இரண்டாம் உலகப் போர் முடிந்த போது அதில் பங்கு பற்றிய பல நாடுகள் தமது படை வலிமையையும் பண வலிமையையும் இழந்திருந்தனஅப்போரில் அமெரிக்கா 400,000 படையினரை மட்டும் இழந்திருதது ஆனால் சோவியத் ஒன்றியம் பதினொரு மில்லியன் படையினரைப் பலிகொடுத்ததுஇரண்டாம் உலகப் போரின் பின்னர் நடந்த கொரியப் போர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததுமுழுக்கொரியாவையும் பொதுவுடமை நாடாக்க சோவியத் ஒன்றியத்தாலும் அதனுடன் இணைந்து செயற்பட்ட சீனாவாலும் முடியவில்லைஅதே போல முழுக்கொரியாவையும் முதலாளித்துவ நாடாக்க அமெரிக்காவாலும் முடியவில்லைஅதனால் இருதுருவ உலக ஆதிக்கம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நிலை உருவானதுவியட்னாம் போரின் முடிந்த பின்னர் 1971இல் அமெரிக்காவின் முழுமையான உலக ஆதிக்கத்தைத் தொடர்ந்து பேண முடியாது என அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் எதிர்வு கூறியிருந்தார்.

காசேதான் வல்லரசடா
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவின் மொத்தத் தேசிய உற்பத்தி மொத்த உலக உற்பத்தியின் 60 விழுக்காட்டுக்கு மேலானதாக இருந்தது. 1862ம் ஆண்டே ஐக்கிய அமெரிக்கா உலகின் செல்வந்த நாடாகி விட்டதுஇரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத்திலும்படைவலுவிலும் உலகின் முதல்தர நாடாக உருவெடுத்ததுஅப்போது ஐக்கிய நாடுகள் சபைஉலக வங்கிபன்னாட்டு நாணய நிதியம் ஆகியவை அமெரிக்காவில் அமைக்கப்பட்டனசோவியத் ஒன்றியம் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு சவாலாக இருந்தது ஆனால் அதனால் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியவில்லைசோவியத் ஒன்றியத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி ஒரு போதும் அமெரிக்காவின் உற்பத்தியின் பாதியைக் கூட எட்டியதில்லைபொருளாதார வலிமை மிக்க அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் போட்டி போட்டுக் கொண்டு படைத்துறைக்குச் செலவு செய்த சோவியத் ஒன்றியம் பெரும் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்றுஆப்கானிஸ்த்தானில் இருந்த சோவியத் படையும் வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலையும் 1991இல் சோவியத் ஒன்றியத்தை வீழ்ச்சியடையச் செய்தது.

சீனத் துருவம்
சீனா அமெரிக்கா அளவு பொருளாதார உற்பத்தியைக் கொண்டிருந்தாலும் அது பகை நாடுகளால் சூழப்பட்டுள்ளதுவடக்கில் இரசியாகிழக்கில் தென் கொரியாவும் ஜப்பானும்தெற்கில் இந்தியாவும் வியட்னாமும் மேற்கில் வலுவற்ற சிறு நாடுகள்இரசியா உக்ரேன் விவகாரத்தின் பின்னர் சீனாவுடன் கை கோர்க்க முயன்றாலும் அதற்கு இரண்டு முக்கிய தடைகள் உள்ளனஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி உண்டுஇரண்டாவது இரு நாடுகளும் ஒன்று சேர்ந்தால் இந்தியா அமெரிக்காவுடன் அதிக நட்பையும் படைத்துறை ஒத்துழைப்பையும் வளர்க்கும்இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்கா ஒழித்துக் கொண்டிருக்கின்றதுதாய்வான் அமெரிக்காவின் ஒரு நிரந்தர விமானம் தாங்கிக் கப்பலாக இருக்கின்றதுஅமெரிக்காவைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம் வலுவற்ற நாடுகளேபிரச்சனைக்குரிய நாடாக இருந்த கியூபா அமெரிக்காவிற்கு எதிரான தனது செயற்பாடுகளை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் கைவிட்டதுதென் சீனக் கடலில் அமெரிக்கா பன்னாட்டுப் நீர்ப்பிராந்தியம் என வலியுறுத்திய இடத்தில் சீனா தீவுகளை நிர்மாணித்து படைத்தளங்களை அமைப்பதை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லைஅதே வேளை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொல்லும் தைவான இன்னும் சீனா செயற்பாட்டு ரீதியாக தனதாக்க முடியவில்லைதைவான் ஒரு முழுமையான சுதந்திர நாடு போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சரியாதப்பாசரியா தப்பா?
உலக அரங்கில் அமெரிக்காவின் செல்வாக்குச் சரிந்து கொண்டிருக்கின்றது எனச் சிலரும் ஏற்கனவே சரிந்து விட்டது எனச் சிலரும் வாதங்களை முன்வைக்கின்றார்கள்டொனால்ட் டிரம்ப்உம் அவரது ஆதரவாளர்களும் தமது தேர்தல் பரப்புரையின் போது அமெரிக்காவின் நிலை தாழ்ந்துவிட்டது அதை மீண்டும் உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்டிரம்பிற்கு எதிரான கருத்துடையோர் உலக அரங்கின் அமெரிக்காவின் நம்பகத்தன்மையை டிரம்ப் கெடுத்துவிட்டார் என்கின்றனர்ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு எதிராக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை ஏற்றுக் கொண்டதுஈரானுடனான யூரேனியம் பதப்படுத்தலுக்கான ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது நீண்டகாலமாக பேச்சு வார்த்தை நடத்தி நிறைவேற்றும் தறுவாயில் இருந்த பல வர்த்த உடன்படிக்கைகளை இரத்துச் செய்தது போன்றவை அமெரிக்காவின் நம்பகத்தன்மையை இழக்கச் செய்தது.

புட்டீனின் பேரரசுக் கனவு
விளடிமீர் புட்டீன் அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்தை மிகவும் வெறுக்கின்றார்மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒன்றை உருவாக்க வேண்டும் என உறுதியாக இருக்கின்றார்சீனாவை உலகின் முதற்தர நாடாக்க வேண்டும் என்பதில் அதன் அதிபர் ஜி ஜின்பிங் அதிக முனைப்புடன் செயற்படுகின்றார்இருவரும் வலிமை மிக்க தலைவர்களாக தத்தம் நாடுகளில் திகழ்கின்றனர்இருவரும் முழுமையான ஒத்துழைப்பிற்கு தயாராக இல்லைசீனாவை புட்டீன் மிகுந்த ஐயத்துடனே நோக்குகின்றார்மத்திய ஆசியாவை நோக்கிய சீனாவின் விரிவாக்கம் இரசியாவிற்கு ஆபத்தானது என புட்டீன் கருதுகின்றார்இரசியாவும் சீனாவும் வலிமையான நாடுகள்ஆனால் வலிமை மிகுந்த நாடுகள் அல்லஇரசியாவின் பொருளாதாரமும் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்தை அசைக்கப் போதியதாக இல்லை. 2020-ம் ஆண்டு இரசியா தான் படைத்துறையில் முன்னணி வகிக்க வேண்டும் எனக் கருதுகின்றதுஅதற்கு அவசியமான ஐந்தாம் தரப் போர்விமானங்களையோ பாரிய கடற்படையையோ அதனால் உருவாக்க முடியவில்லைஇரசியாவின் SU-57 போர் விமான உற்பத்தி நிறைவடைந்த வேளையில் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமாக அதை மாற்றுவதற்கான இயந்திரங்களை உருவாக்க இரசியாவால் முடியவில்லை. SU-57 போர் விமானங்களை பெருமளவில் உற்பத்தி செய்யக் கூட முடியவில்லை. 2017-ம் ஆண்டு இரசியா தனது பாதுகப்புச் செலவை 20விழுக்காட்டால் குறைத்தது.

முத்துருவ சாத்தியம்
மேற்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சனைகளையும் தேசியவாதப் பிரச்சனைகளையும் சமாளித்து எழுச்சியுறும் போது அவை அமெரிக்கா தலைமையில் ஒரு குழுவாக உலக அரங்கில் செயற்படும் போது அவற்றுக்கு சவால் விடக் கூடிய வகையில் இரசியாவோ அல்லது சீனாவோ உருவாகுவதற்கு இன்னும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது செல்லும்.. இன்னும் பத்து ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளான ஐக்கிய அமெரிக்காவும் கனடாவும் படைத்துறை ரீதியிலும் பொருளாதார ரிதியிலும் தமக்கு இடையிலேயான ஒத்துழைப்பை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தை இரசியாவினதும் சீனாவினதும் படைத்துறை வளர்ச்சி  நிச்சயம் கொடுக்கும். இரசியாவினது படைத்துறை வளர்ச்சியும் சீனாவினுடைய பொருளாதார வளர்ச்சியும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக வரும்போது நேட்டோ மேலும் தனது வலிமையை வளர்ப்பதுடன் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும். இந்த முத்தரப்பில் இந்தியாவும் ஜப்பானும் ஏதாவது ஒன்றுடன் சேரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தற்போது ஆசியாவில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் இந்தியா இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் உலகப் படைத்துறைச் சமநிலையை தீர்மானிக்கக் கூடிய நாடாக இருக்கும்.

பிரேசில்
பிரேசிலின் மக்கள் தொகையும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியும் அது எதிர்காலத்தில் ஒரு வலிமை மிக்க நாடாக மாறும் எனச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் படைத்துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அது இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது. ஊழலற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும். மக்கள் நாட்டின் பெருளாதார சுபீட்சத்திலும் பார்க்க காற்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். மோசமான கால நிலை அங்கு நிலவுவதில்லை. இயற்கை அனர்த்தங்கள் அங்கு இல்லை. 21-ம் நூற்றாண்டில் மற்ற நாடுகள் எதிர் கொள்ளும் நீர்த்தட்டுப்பாடு அங்கு இல்லை. உலகில் பிரேசில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற வசதிகள் உண்டு, வாய்ப்புக்கள் உண்டு. சிறந்த தலைமை வேண்டும்
செயற்கை விவேகம் சாதிக்கும்
வல்லரசு நாடுகளின் உலக ஆதிக்கத்தை தீர்மானிப்பவையாக இணையவெளிப் போர்முறைமையும் செயற்கை விவேகமும் அடுத்து இருபது ஆண்டுகளுக்கு இருக்கும். செலுத்துனர் இன்றி செயற்கை விவேகத்துடன் செயற்படும் தாங்கிகள் எதிரி நாட்டின் எல்லையை கடந்து சென்று அங்கு உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தாமே முடிவெடுத்துச் செயற்படும். அவற்றின் மீது ஆளில்லாப் போர்விமானங்கள் தாக்குதல் நடத்தும்.
மீண்டும் ஓரு பல்துருவ உலக ஆதிக்கம் உருவாகவிடினும் இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகளில் உலகம் ஒரு முத்துருவ ஆதிக்கத்திற்கு உள்ளாகும். இந்தியா நான்காவது துருவமாக உருவாக முடியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்தியா நான்காவது துருவமாக உருவெடுக்கும் எனக் காட்டுனாலும் அதன் தேசி ஒற்றுமையை மதவாதிகள் சிதைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்திய ஒன்றியத்திற்கு மதம் சாதி போன்றவை பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன இந்துத்துவாவின் மதவாதமும் இந்திப் பேரினவாதமும் இந்திய ஒன்றியத்தை உடைக்காமல் இருக்க வேண்டும்.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...