- அஸ்டர் குடும்பம் (The Astor Bloodline ) 2. பண்டி குடும்பம் (The Bundy Bloodline) 3. கொலின் குடும்பம் (The Collins Bloodline) 4. டியூபொண்ட் குடும்பம் (The DuPont Bloodline) 5. ஃபீரிமன் குடும்பம் (The Freeman Bloodline) 6. கெனடி குடும்பம் (The Kennedy Bloodline) 7. லீ குடும்பம் (The Li Bloodline) 8. ஒனாஸிஸ் குடும்பம் (The Onassis Bloodline) 9. ரொக்ஃபெல்லர் குடும்பம் (The Rockefeller Bloodline) 10. ரஸல் குடும்பம் (The Russell Bloodline) 11. வான் டுயான் (The Van Duyn Bloodline) 12. மெரொவிஜியன் குடும்பம் (The Merovingian Bloodline) 13. ரொத்சைல்ட் குடும்பம் (The Rothschild Bloodline)
கடன் கொடுத்துக் கலங்கடிக்கும் இலுமினாட்டிகள்
நாடுகளுக்கு நிதி தேவைப்படும் போது இலுமினாட்டிகளுக்கு சொந்தமான வங்கிகள் அவற்றிற்கு கடன் வழங்கி அதன் மூலம் அவற்றின் மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்துகின்றன. உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் அமெரிக்க அரசின் மூலமாக இலுமினாட்டிகளின் கருவிகளாகச் செயற்படுகின்றன. ஒரு நாட்டிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும்போது அந்த நாட்டின் திறைசேரி கடன் முறிகளை (bonds) விற்பனைசெய்யும் அந்த கடன் முறிகளை தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாங்கும். வாங்கிய அந்த கடன் முறிகள் அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும். மத்திய வங்கி அந்த வங்கிகளின் பெயரிலும் நிதி நிறுவனங்களின் பெயரிலும் விற்ற தொகைக்கு கணக்கு வைக்கப்படும். அந்தக் கணக்கை அடிப்படையாக வைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கொடுத்தல் முதலான பல நிதி நடவடிக்கைகளில் ஈடுபடுவர். இதற்கான நாணயத்தாள்களை மத்திய வங்கி அச்சடித்து நாட்டில் புழக்கத்திற்கு விடும். இப்படித் தொடர்ச்சியாக ஒரு நாடு கடன் முறிகளை விற்பனை செய்யும் போது அவற்றை தொடர்ந்து வாங்கிக் குவிக்கும் வங்கிகளினதும் நிதி நிறுவனங்களினதும் செயற்பாடுகள் அந்தக் கடன் முறிகளின் விலைகளைத் தீர்மானிக்கும். ஒரு நாட்டின் பெரும்பகுதியான கடன் முறிகளை ஓரிரு வங்கிகள் வாங்கும் நிலை ஏற்படும் போது அந்த ஓரிரு வங்கிகள் கடன் முறிகள் முழுவதையும் விற்பனை செய்வேன் என மிரட்ட முடியும். அப்படி விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் நாணயத்தின் பெறுமது பெருமளவில் வீழ்ச்சியடையும். அதனால் அந்த நாட்டின் மத்திய வங்கியை கடன் கொடுத்த வங்கிகளால் கட்டுப்படுத்தக் கூடிய நிலை உருவாகும்.
மத்திய வங்கிகளைக் கட்டுப்படுத்த போர்கள் நடந்தன
2000-ம் ஆண்டு ஆப்கானிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா, கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை. இவற்றில் ஆப்கனிஸ்த்தான், ஈராக், சூடான், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உருவாக்கப்பட்டு அமெரிக்கப்படைகள் தாக்குதல்கள் செய்து அவற்றின் மத்திய வங்கிகள் ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2017-ம் ஆண்டு ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத மத்திய வங்கிகளைக் கொண்ட நாடுகளாக கியூபா, வட கொரியா, ஈரான், சிரியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. இவற்றில் சிரியாவில் ஏற்கனவே போர் நடந்து கொண்டிருக்கின்றது. வட கொரியாவிற்கும் எதிராக விரைவிலும் ஈரானுக்கு எதிராக காலக்கிரமத்திலும் தாக்குதல்கள் செய்யப்பட்டு அங்கு ஆட்சி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.கியூபாவை ஓர் அமெரிக்க சார்பு நாடாக்கும் முயற்ச்சியை ஏற்கனவே பராக் ஒபாமா ஆரம்பித்து வைத்துவிட்டார். கியூபாவில் துரித மாற்றங்கள் ஏற்படாத படியால் அதன் மீது டொனால்ட் டிரம்ப் விசனமடைந்துள்ளார்.
ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வங்கிகள் பற்றிய விபரத்தை இந்த இணைப்பில் காணலாம்:
http://humansarefree.com/2013/11/complete-list-of-banks-ownedcontrolled.html
வங்கிகளைத் தமதாக்கிய வரலாறு
உலக நிதிச் சந்தை, பங்குச் சந்தை, நாணயச் சந்தை ஆகியவற்றை ரொத்ஸ்சைல்ட், ஜெபி மோஹன், ரொக்ஃபேல்லர் ஆகியோரின் குடும்பங்களே கட்டுபடுத்துகின்றன. இவற்றில் திட்டமிட்டு விலை ஏற்றங்களையும் இறக்கங்களையும் அவர்கள் செய்து அதற்கு ஏற்ப பங்குகளையும் கடன் முறிகளையும் நாணயங்களையும் அவர்கள் வாங்கியும் விற்றும் பெரும் செல்வம் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். 2007-ம் ஆண்டில் உருவான பொருளாதார நெருக்கடியில் இவர்களின் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பாதிக்கப்படவில்லை, மாறாக அவற்றின் இலாபங்கள் அதிகரித்தன. இவர்களால் திட்ட மிடப்பட்டு உருவாக்கப்பட்டதுதான் 2007-ம் ஆண்டு உருவான உலகப் பொருளாதார விழ்ச்சி என வாதிடுவோரும் உண்டு.
ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தில் நிதி வரலாறுதான் வங்கியலின் வரலாறு எனச் சொல்லலாம். ஜேர்மனியில் மற்றவர்களிடம் தங்கத்தை வாங்கிக் கொண்டு அதற்கு பற்றுச் சீட்டுக் கொடுப்பதில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தவர் 1744-ம் ஆண்டு பிறந்த யூதரான மேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட். அவரிடம் இருந்து தங்கத்துக்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டோர் அவற்றைக் கொடுத்து தமக்கு வேண்டிய பொருட்களைக் கொள்வனவு செய்வர். தேவையான நேரத்தில் அப்பற்றுச் சீட்டுக்களைக் கொடுத்து ரொத்ஸ்சைல்டிடமிருந்து தங்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்படித் தங்கத்தைப் பெறுவது குறைந்து சென்றது. அந்த அளவிற்கு பற்றுச் சீட்டுக்கள் தற்போதைய நாணயத் தாள்கள் போல் புழங்கப்பட தொடங்கின. இதனால் தங்கத்தைப் பெறாமலே ரொத்ஸ்சைல்ட் வட்டி பெற்றுக்கொண்டு தனது பற்றுச் சீட்டுக்களைக் கொடுக்கத் தொடங்கினார். இதுதான் வங்கிகள் இன்று தங்கம் இல்லாமல் நாணயத் தாள்களை அச்சடித்து அரசுகளின் திறைசேரிகளுக்கு பணம் கொடுக்கும் முறையின் உருவாக்கம். தங்கம் இல்லாமல் வட்டிக்குப் பற்றுச் சீட்டுக் கொடுக்கும் முறைமையால் ரொத்ஸ்சைல்ட் பெரும் பணம் சேர்த்தார். அவரது காலத்தில் யூதர்கள் சொத்துக்களை வாங்குவதை கிறிஸ்த்தவர்கள் ஆட்சி செய்த ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருந்தன. அதனால் யூதர்கள் தமது பணததை வட்டிக்கு கொடுக்க வேண்டிய நிலை உருவானது. அத்துடன் நாணயச் சுழற்ச்சி அவற்றின் பெறுமதி தொடர்பாக அவர்கள் சிறந்த அறிவைப் பெற்றனர்.
மேயர் அம்ஸெல் ரொத்ஸ்சைல்ட் தனது நான்கு மகன்களையும் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களான இலண்டன், பரிஸ், அம்ஸ்ரடம், ரோம் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி அங்கு நிதித்துறை வர்த்தகங்களை ஆரம்பிக்க வைத்தார். 19-ம் ஆண்டின் ஆரம்பத்தில்நெப்போலியனுக்கு எதிராக பிரித்தானியா போர் செய்த போது பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England பெருமளவு கடன் முறிகளை விற்பனை செய்தது. அதில் பெரும்பகுதியை ரொத்சைல்ட் குடும்பத்தினரே வாங்கினர். அதாவது பிரித்தானியாவிற்கு ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடன் வழங்கினர். இதைப் போலவே பிரான்சுக்கும் கடன் வழங்கினர். பிரித்தானிய அரச குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த ரொத்சைல்ட் குடும்பத்தினருக்கு போரின் இறுதிக் கட்டத்தின் போது பிரித்தானியா போரில் வெல்லும் என அறிந்திருந்தனர். பிரித்தானிய நடுவண் வங்கியான Bank of England கடன் முறிகளை வாங்கியிருந்த மற்றச் செல்வந்தர்கள் போர் எப்படி முடிவையும் என்பதைப் பற்றி அறியாதிருந்தனர். போரில் பிரித்தானியா தோல்வியடைந்தால் அவர்கள் வாங்கிய கடன் முறிகளின் விலை குறைவடைந்து அவர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்படலாம் என அவர்கள் அஞ்சியிருந்தனர். அதனால் அவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இதை உணர்ந்து கொண்ட ரொத்சைல்ட் குடும்பத்தினர் கடமாகச் செயற்பட்டு தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்பனை செய்தனர். இதனால் பிரித்தானியா போரில் தோல்வியடையப் போகிறது என ரொத்சைல்ட் எதிர்பார்க்கின்றார் அதனால் அவர் கடன் முறிகளை விற்கின்றார் என நம்பி தாமும் தம்மிடமிருந்த கடன் முறிகளை விற்றனர். பலரும் விற்பனை செய்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை பெரும் வீழ்ச்சியைக் கண்டது. உடனே ரொத்சைல்ட் குடும்பத்தினர் எல்லாப் பிரித்தானியக் கடன் முறிகளையும் வாங்கினர். அவர்கள் அறிந்து வைத்திருந்தது போல் போரில் பிரித்தானியா வெற்றியடைந்ததால் பிரித்தானியக் கடன் முறிகளின் விலை அதிகரிக்க ரொத்சைல்ட்களின் செல்வம் பெருகியது. இதனால் Bank of Englandஐ நடத்தக் கூடிய வகையில் ரொத்சைல்ட் குடுபத்தைச் சேர்ந்தவர் ஆளுநர் சபையில் இடம்பெற்றார்.
இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு
பிரித்தானியாவிலும் மற்றும் முக்கிய ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் செல்வம் திரட்டிய ரொத்ஸ்சைல்ட் குடும்பத்தினர் அமெரிக்காவில் தமது கவனத்தைச் செலுத்தினர். உலக வங்கி வரலாற்றிலும் உலகப் பாராளமன்ற வரலாற்றிலும் மிக மோசமான சதியாகக் கருதப்பட வேண்டியது அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசேர்வின் உருவாக்கமாகும். அமெரிக்காவிற்கு ஒரு மத்திய வங்கி உருவாக்க வேண்டும் என்ற கருத்து முனவைக்கப்பட்ட போது ரொத்ஸ்சைல்ட், ரொக்ஃபெல்லர், ஜெபி மோகன் குடும்பத்தினர் அவற்றைத் தமக்குச் சொந்தமாக்கச் சதி செய்தனர். Fed என சுருக்கமாக அழைக்கப்படும் Federal Reserve என்னும் அமெரிக்காவின் Central Bankஐ ஒரு தனியார் அமைப்பாக அமெரிக்காவில் அமைக்க வேண்டும் என திட்டமிட்டவர்கள் ரொத்சைல்ட் குடும்பத்தினரே. அதற்காக அவர்கள் Jacob Henry Schiff என்னும் யூதரைக் களமிறக்கினர்.
வரலாற்று காணாத சதி
1913- மார்ச் மாதம் அமெரிக்க அதிபராக வுட்றோ வில்சன் பதவி ஏற்றார். அவரை வெற்றி பெறச் செய்தவர்கள் முன்னணி வங்கிகளின் உரிமையாளர்கள். அதில் முதன்மையானவர் ரொத்சைல்ட். அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve 1913-ம் ஆண்டு ஆரம்பிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. . அதன் ஆளுநர் சபை உறுப்பினர்களை அமெரிக்காவின் தனியார் வங்கிகள் நியமிப்பதா அமெரிக்க அரசு -நியமிப்பதா என்ற வாதப் பிரதிவாதம் எழுந்தது. கிறிஸ்மஸ்ஸிற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் போது பல பாராளமன்ற உறுப்பினர்கள் விடுமுறையில் சென்றிருந்தனர். அந்த நேரம் பார்த்து இலுமினாட்டிகள் சதி செய்து 1913-ம் ஆண்டு Federal Reserve Act of 1913 என்னும் சட்டத்தை பாராளமன்றத்தில் நிறைவேற்றினர். அதிபர் வுட்றோ வில்சன் தான் இறப்பதற்கு முன்னர் தான் அச்சட்டத்தை நிறைவேற அனுமதித்திருக்கக் கூடாது என்றும் அனுமதித்த படியால் எனது மேன்மையான நாட்டின் நிதியின் கட்டுப்பாடு ஒரு சிறு குழுவின் கைகளுக்கு சென்றுவிட்டது என மனம் வருந்தி இருந்தார். 1963-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிபர் ஜோன் எஃப் கெனடி அமெரிக்க நடுவண் வங்கியான Federal Reserve அமெரிக்க அரசுக்கு வட்டிக்கு கடன் கொடுப்பதை தடை செய்தார். அவரையும் ஒரு இலுமினாட்டியாகவே சதிக் கோட்பாடு சொல்கின்றது. ஆனால் அவர் மற்ற இலுமினாட்டிகளுக்கு எதிராக செயற்ப்பட்டார் அதனால்தான் அவர் கொல்லப்பட்டாரா? ஆனால் அவருக்குப் பிறகு எந்த அதிபரும் Federal Reserveவிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற் சொல்லப்பட்ட 13 குடும்பங்களும் உலகில் தமது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றன. அவற்றின் இறுதி நோக்கம் முழு உலகையும் முதலில் தமது கைப்பொம்மைகளின் ஆட்சியின் கீழும் பின்னர் தமது ஆட்சியின் கீழும் கொண்டு வருவதே என்பது சதிக்கோட்பாடா இல்லையா என்பது இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் தெரிந்துவிடும். உலக வரலாற்றில் பத்து ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலமாகும்.
No comments:
Post a Comment