நரேந்திர தமோதரதாஸ் மோடி 13 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு 17 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்யப்பட்டது. மனைவியின் பெயர் ஜசோதா பென். மூன்று ஆண்டுகளின் பின்னர் மனைவியைப் பிரிந்து இமயமலைக்குச் சென்ற மோடி பின்னர் மனைவியிடம் திரும்பிவரவில்லை.
மோடி தாய்மீது மிகுந்த பற்றுள்ளவர்.
மோடி பிறந்த திகதி 17-09-1950. அவரது நட்சத்திரம் அனுசம். அவருக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கின்றது. ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மோடி மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். பிறந்த இடம் மேஷானா மாவட்டத்தில் வத்நகர் என்னும் இடத்தில். அப்போது இந்த மாவட்டம் மஹாராஸ்ட்ரா மாநிலத்துடன் இணைந்திருந்த குஜாராத்தில் இருந்தது.
இளவயதில் மோடிக்கு சந்நியாசிகளையும் சந்நியாசத்தையும் பிடிக்கும்.வயதில் தொடரூந்து நிலையத்தில் தேநீர் விற்றவர் மோடி. இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அஹமதாபாத்தில் அரச பேரூந்துப் பணிமனையில் ஒரு தேநீர் கடை நடாத்தினார் மோடி.
மோடி மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. புகைப்பிடிப்பதில்லை. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் மோடி விரதம் இருப்பார். அப்போது ஒருநாளில் ஒரு பழம் மட்டுமே சாப்பிடுவார்.
1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது 15வயதாக இருந்த மோடி தன்னை இந்தியப் படையின் தொண்டராகப் பதிவு செய்து கொண்டார்.
இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஜெயப்பிரகாஸ் நாராயணனுடன் இணைந்து செயற்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தார்.
2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வேட்பாளர் மனுப்பத்திரத்தில் தன்னை திருமணமாகாதவர் எனக் குறிப்பிட்ட மோடி 2014-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்தில் தன்னை திருமணமானவர் எனக் குறிப்பிட்டார். மனைவியின் சொத்துப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் எழுதவில்லை.
மோடியின் சாதி OBC(other backward class) மற்றத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகின்றது.
மோடிக்கு சுவாமி விவேகாநந்தரை மிகவும் பிடிக்கும்.
மோடி ஒரு கவிஞர். சிறந்த பேச்சாளர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ளவர். மோடி ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு புகைப்படக் கண்காட்சி கூட மோடி நடாத்தியுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக முதுமானிப் பட்டம் பெற்றவர் மோடி, அவர் கடின உழைப்பாளி. நாளொன்றிற்கு நான்கு மணித்தியாலம் மட்டுமே அவர் தூங்குவார்.
2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார். இன்றுவரை அப்பதவியிலேயே இருக்கின்றார்.
மோடியை பாரதிய ஜனதாக் கட்சியின் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஸத் அமைப்பினருக்கு பிடிக்காது.
2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கொலை குஜராத்தில் நடந்தது. மம்தா பனர்ஜீயின் கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்றனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கொலையைத் தொடர்ந்து மோடி பதவி விலகவேண்டும் என்றார் கருணாநிதி.
தனது உருவத்திலும் தோற்றத்திலும் மோடி அதிக கவனம் செலுத்துவார். இதன் இரகசியம் மோடி அமெரிக்காவில் மூன்று மாதம் Public relations and Image management என்னும் கற்கை நெறி பயின்றவர்.மோடியின் தோற்றத்தில் பல நடுத்தர பெண்களுக்கு விருப்பம் உண்டு எனப்படுகின்றது.
மோடி தனது தேர்தல் பரப்புரையை மிகவும் நவீனமயபப்டுத்தியுள்ளார். அவரது கட்சியினர் பல்லாயிரம் பேர் கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் மோடி பற்றி சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் பர்ப்புரைப் பொறு உறங்குவதில்லை. இவர்கள் பல பொய்ப்பரப்புரைகளும் செய்வதுண்டு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. உத்தரகாந்த் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட 15000குஜராத்தியர்களை மோடி சென்று மீட்டு வந்ததாகப் பொய்ப்பரப்புரை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment