இனிவரும் காலங்களில் போர்க்களங்களிலும் உளவுத் துறையிலும் வேவுபார்த்தலிலும் ஆளில்லாப் போர் விமானங்கள் அதிக பங்கு வகிக்க இருப்பதால் பிரான்ஸ் ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்குகின்றன. இதற்கென அவை ஒரு ஆளில்லாப் போர்விமானக் கூடலகம் (drone club) ஒன்றை உருவாக்கியுள்ளன.
சில மேற்கு ஐரோப்பிய படைத்துறை வல்லுனர்கள் முக்கியமான ஆளில்லாப் போர்விமான உற்பத்தித் துறையில் ஐரோப்பா பின் தங்கி விட்டதாகக் கருதுகின்றனர். ஆளில்லாப் போர்விமானக் கூடலகத்தில் (drone club) பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, போலாந்து ஆகிய நாடுகள் இதில் இணைந்துள்ளன.
பிரித்தானியா ஏற்கனவே முன்னணியில்
ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் பிரித்தானியா ஏற்கனவே முன்னணியில் இருக்கிறது. பிரித்தானிய
ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை
உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance
(புலங்காணல்), நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat)
தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல்
(precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப்
புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி
மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு
திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா
விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது. Drone என்று பொதுவாக
அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS)
என்று பெயர் சூட்ட விரும்புகிறது. பிரித்தானியாவில்
பிஸ்கட் என்றால் அமெரிக்காவில் குக்கீஸ் என்பார்கள். பிரித்தானியாவில்
சுவீட்ஸ் என்றால் அமெரிக்காவில் கண்டி என்பார்கள். இப்படிப் பல
நூற்றுக்கணக்கான சொற்பேதம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில்
இருக்கின்றன. பிரித்தானியாவின் ஒலியிலும் வேகமாகச் செல்லக்கூடிய ரடார்களுக்குள் அகப்படாத (supersonic stealth) ஆளில்லாப் போர்விமானங்களையும் உருவாக்கிவிட்டது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வந்த செய்தி இது:
மாலி நாட்டில் அல் கெய்தாவினருக்கு எதிரான போரில் பிரேஞ்சுப் படையினர் அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானங்களினதும் விண்ணில் வைத்து எரி பொருள் நிரப்பும் விமானங்களிலும்தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஜேர்மனி தனக்குத் தேவையான வேவு பார்க்கும் ஆளில்லாப் போர் விமானங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்குகிறது. இப்படி மற்ற நாடுகளில் தங்கி இருக்காமல் தாமே உற்பத்தி செய்ய வேண்டும் என பிரான்ஸும் ஜேர்மனியும் கருதுகின்றன.
அமெரிக்கா ஆளில்லாப் போர் விமான உற்பத்தியில் முன்னணியில் திகழ்கின்றது. அது கடைசியாக உருவாக்கிய ஆளில்லாப் போர்விமானம் வானில் பறக்கும், கடலில் கப்பல் போல் மிதக்கும், கடலின் அடியில் நீர் மூழ்கிக் கப்பல் போல் செல்லும், தரையில் ஒரு வண்டி போல் ஓடும், தவளை போல் பாயும்:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment