Friday 25 October 2013

பொதுநலவாய மாநாடு, ஜெயலலிதாவின் தீர்மானம், சிபா ஒப்பந்தம்

இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் காரணம். அதன் விளைவாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா தான் உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு தமிழர்களைக் கொல்ல உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.

கூலி கிடைக்காத சில்லறைக் கைக்கூலி.
 போரின்போதும் போருக்குப் பின்னரும் இந்தியா இலங்கையின் ஒரு ரசதந்திரக் கைக்கூலி போலவே செயற்பட்டு வருகின்றது. கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் பணத்தையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. சீனா தமிழர்களுக்கு எதிராக நேரடியாக ஒரு நாளும் செயற்பட்டதுமில்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுமல்ல. ஆனால் இவ்வளவும் செய்த சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் கிடைக்க வில்லை.

இலங்கை இந்திய சீபா ஒப்பந்தம்
சீபா ஒப்பந்தம் எனப்படும் Comprehensive Economic Partnership Agreement (CEPA) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்யப்பட வேண்டும் என கடந்த பதினொரு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா இலங்கையை வேண்டி வருகின்றது. 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சீபா பேச்சுவார்த்தை 2008-ம் ஆண்டு கடினமான பதின் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் ஒப்பந்தம் வரையப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் போராட்டத்தை ஒழித்துக் கட்டிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் படலாம் என இழுத்தடித்து வந்த இலங்கை 2012இல் அப்படி ஒரு ஒப்பந்தம் செய்யத் தங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டது. இலங்கையின் சில தொழிற்துறையினர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சீபா எனப்படும் பரந்த பொருளாதார பங்காண்மை ஒப்பந்தம் தமக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான இந்தியா தமக்குத் திறந்து விடப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். இலங்கையை சீபாவிற்கு சம்மதிக்க வைக்க தனது சலுகைகளை முக்கியமாக ஆடை உற்பத்தித் தொழிலில் அதிகரித்தது. ஏற்கனவே சுங்கவரியின்றி மூன்று மில்லியன் துண்டுகளை இலங்கை ஏற்றுமதி செய்யலாம் என்றிருந்தது. இதை இந்தியா இரட்டிப்பாக்கியதுடன் மேலும் பல மில்லியன் துண்டுகளை குறைந்த சுங்கவரியுடன் இலங்கை ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தது. ஆனால் சிங்களவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் வெறுப்பை இந்தியா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சிபாவில் இலங்கை ஒப்பமிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படுமென்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்தியா தனது நாட்டு வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்கவே இந்த ஒப்பத்தத்தை நிர்ப்பந்தித்தது என்றார். அத்துடன் அவர் நிற்கவில்லை. இலங்கைக்கு இந்தியாவிற்குமிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் 37வது மாநிலமாகும் என்பதால் இவ்வொப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டாம் என்கிறார். இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள சீபா எனப்படும் பொருளாதாரத்தை விரிவாக்கும் நோக்கிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கை தனக்குத் தானே தூக்கிட்டுக் கொள்வதற்கு சமம் என்று சிங்களத் தீவிரவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்தது.

 தமிழர்கள் முதுகில் இந்தியாவின் சவாரி
1987இல் இலங்கையில் அமெரிக்கா தனது பிடியை இறுக்கிய போது தமிழர்களின் முதுகில் சவாரி செய்து இந்தியா அதைத் தடுத்து நிறுத்தியது. இப்போதும் இலங்கையில் இந்தியா தனது பொருளாதார நலன்களை விருத்தி செய்ய தமிழர்களின் பிரச்சனையை வைத்தே இலங்கையை தன் எண்ணப்படி நடக்க வைக்க முயல்கிறது.சிபா ஒப்பந்தம் கைச்சாத்திடும்படி இலங்கையை வற்புறுத்தும் ஒரு வாய்ப்பாக இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இந்தியா திரைமறைவில் செயடுகின்றதா என்ற ஐயம் நியாயமானதே. இதற்காக இலங்கை மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு உத்தியே தமிழ்நாட்டுச் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்க்க முடியும். இதற்கான தூண்டுதல் ஜெயலலிதாவிற்குத் தெரியாமலே இந்திய உளவுத்துறையிடமிருந்து வந்திருக்கலாம். சீபா ஒப்பந்தத்தை இலங்கையை ஒப்பமிடச் செய்ய இந்தியாவிற்குக் கிடைத்த கடைசிச் சந்தர்ப்பம் பொதுநலவாய மாநாடுதான். ஏற்கனவே இதைச் சாட்டாக வைத்து சம்பூரில் தமிழர் வாழ்ந்த இடங்களை இந்தியா அபகரித்துக் கொண்டது. இந்திய தலைமை அமைச்சர் இலங்கையில் நடக்கும் மாநாட்டுக்கு போகமாட்டார் என்ற ஒரு செய்தி திட்டமிட்டு 14-10-2013-ம் திகதி திட்டமிட்டு வெளிவிடப்பட்டது. இச் செய்திய சென்னை விகடன் முதல் பிரித்தானியக் கார்டியன் வரை வெளிவிட்டது. ஆனால் இலங்கை சீபாவைப் பொறுத்தவரை எதற்கும் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.

 மானம் கெட்ட இந்தியாவி இலங்கை மீண்டும் மிரட்டுகிறது.
இந்தியத் தலைமை அமைச்சர் இதுவரை இலங்கை மாநாட்டுக்குச் செல்வதாக எந்த முடிவும் எடுக்காத நிலையில் புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசகம் மன் மோஹன் சிங் இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கு வராவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்றார். இது அப்பட்டமான மிரட்டல். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை இதை எழுதும் வரை எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. சில தமிழ் அரசியல்வாதிகள் மட்ட்டும் கருத்துத் தெரிவித்துள்ளனர். வட இந்திய அரசியல்வாதிகள் இதுபற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
 இலங்கைக்கு போவதா இல்லையா என்பது தொடர்பாக இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் இருப்பது பொதுநலவாய நாடுகளில் சிலவற்றை விசனப் படுத்தத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் தயக்கம் இலங்கைக்கு இந்தியா தேவையில்லாமல் அச்சப் படுகிறது என்பதை உறுதி செய்கிறது.

சீனாவுடன் இலங்கையின் FTA ஒப்பந்தம்.
இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை என பசில் ராஜபக்ச 2013 ஜூலை மாதம் அடித்துச் சொல்லிவிட்டார். ஆனால் இலங்கை சீனாவுடன் சீபாவை ஒத்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை சீனாவுடன் செய்து கொண்டது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...