ஆப்கானிஸ்த்தான் அரசுடன் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சு வார்த்தை செய்து விட்டுச் சென்று கொண்டிருந்த தலிபான் தலைவர்களுள் ஒருவரான லத்திஃப் மேஹ்சுட்டை அமெரிக்கப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இவரது கைது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருப்பதுடன். ஆப்கானிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகலையும் உருவாக்கியுள்ளது.
லத்திஃப் மேசுட் ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பின் முன்னணித் தலைவர் ஆவார். இந்த அமைப்பின் தலைவரான ஹக்கிமுல்லா மெஹ்சுட்டின் நம்பிக்கைக்குப் பாத்திரமானாவர் ஆகும். 2010 அமெரிக்க ரைம்ஸ் சதுக்கத்தில் நடந்த குண்டுத்தாக்குதல் முயற்ச்சிக்கு இவர்களே சூத்திர தாரிகள் எனப்படுகிறது.
ஆப்கானிஸ்த்தான் படையினரின் பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாகஒரு தகவல் தெரிவிக்கிறது. இன்னொரு தகவல் ஆப்கான் படையினர் கைது செய்து கொண்டு செல்கையில் அவர்களிடமிருந்து அமெரிக்கப் படையினர் லத்திஃப் மேஹ்சுட்டை பிடுங்கிக் கொண்டதாகத் தெரிவிக்கின்றது. மேலும் ஒரு தகவல் அவரி அமெரிக்கப்படையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கின்றது. இவர் கைது செய்ததை ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.லத்திஃபின் கைது பற்றி அமெரிக்கா விபரமாக எதையும் கூறவில்லை ஆனால் அவரைப் பிடித்து வைத்திருந்து விசாரிப்பதை உறுதி செய்துள்ளது. இவர் எப்போது கைது செய்யப்பட்டார் என்பது கூடத் தெரியவில்லை.
ஆப்கானிஸ்த்தானில் பக்ரம் என்னும் இடத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதே இடத்தில் லத்திஃப்பையும் அமெரிக்க தடுத்து வைத்திருக்கலாம் என நம்பப் படுகிறது.
முப்பதிற்கு மேற்பட்ட படைக்கலன் ஏந்திய குழுக்களைத் தன் கீழ் வைத்திருக்கும் ரெஹ்றிக் இ-தலிபான் அமைப்பின் தலைவரான ஹக்கிமுல்லா மெஹ்சுட்டின் வண்டி செலுத்துனராக தனது பணியை ஆரம்பித்த லத்திஃப் மெஹ்சுட் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் அமைப்பின் பேச்சாளராகவும் பேரம் பேசுபவராகவும் உயர்ந்தவர். தலிபானுக்கும் ஆப்கானிஸ்த்தான் அரசுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் லத்திஃப்பின் தலைமையிலே நடந்தது.
2014-ம் ஆண்டு ஆப்கானில் இருந்து வெளியேற எண்ணியுள்ள நேட்டோப் படையினர் ஒரு தொகைப் படையினரை ஆப்கானிஸ்த்தானில் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றனர். அந்தப் படையினரை எந்த அடிப்படையில் வைத்திருப்பது என்பது தொடர்பாக ஆப்கானிஸ்த்தான் அரசுடன் இன்னும் ஒரு உடன்படிக்கைக்கு வரமுடியாமல் பெரும் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment