Friday 10 May 2013

வன்னி மண் வீரம் பாடிப் பாடிக் கும்மியடி

தமக்கெனத் தலைக்கொரு பிடி அரிசியடி - ஆங்கு
இரந்து வருவோர்க்கு ஒரு படிஅரிசியடி
தேடிவருவோர்க்கு மேலும் ஒரு படி அரிசியடி
வேகுமடி வன்னிமண் உலைகளிலடி
அவ்விருந்தோம்பல் புகழ் பாடிக் கும்மியடி
நல்லோர் என்றும் கெட்டதில்லை எனச் சொல்லியடி

அணையாதடி வன்னிமண்ணின் அடுப்படி நெருப்படி
குறையாதடி அவர்தம் அன்புதானடி குன்றாதடி அவர் வளமடி
வந்தோர் பசி தீர்ப்பாரடி வருவார் யாரெனப் பார்ப்பாரடி
ஈழத்து அட்சய பாத்திரமடி அந்த வன்னி வள நிலமடி
குன்றாத அவரன்பை பாடிக் கும்மியடி
நன்றாய் மீண்டும் அவர்  வாழ வேண்டியடி

முகிலடிதொடு மலையிலா ஊரடி - ஆனலும்
வற்றாத நீர் வளமடி சளையாத நெஞ்சத்து உரமடி -எதிரிக்கு
வளையா வீர மனமடி கயவர்க்கு வணங்கா மண்ணடி - அது
வன்னிமறவர் தம் மண்ணடி எம் ஈழத்தாயின் இதயமடி - அந்த
வன்னிமண் வீரம் பாடிப் பாடிக் கும்மியடி - அது
மீண்டும் வீறு கொண்டு எழும் எனச் சொல்லியடி

சிதறிய சிறுவர்தம் உடல்களடி கதறிய கன்னியர்தம் குரல்களடி
கருவிலே கருகிய உயிர்களடி
பதறிய தமிழினத்து கண்ணீரடி - யாவும்
முளைக்கும் விதைகளாகுமடி வீரம் மீண்டும் தளைக்குமடி
அடங்காப்பற்று நிலமடி அந்த வன்னிமண் வினை தீர்க்குமடி
நாளை வீறு கொண்டு எழுமெனச் சொல்லியடி
வன்னி வீரர் காலைப் போற்றிக் கும்மியடி

2 comments:

கும்மாச்சி said...

கும்மியடி பாட்டு அருமை.

பி.அமல்ராஜ் said...

ஆஹா... அருமை அருமை... வன்னி - எப்பொழுதும் இனிக்கும் நினைவுகள்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...