Saturday 20 April 2013

இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் போன பெண்களும் விலை போன பெண்களும்

தமிழீழ மக்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல பெண்கள் இலங்கைக்குச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், தமிழின உணர்வாளர்கள் எனப் பலதரப்பட்ட பெண்களும் அங்கு சென்றுள்ளனர். சிலர் தமிழர்களின் துயர்களை தாமும் அனுபவித்து அம்பலப்படுத்தினர். சிலர் அரச "விருந்துகளை" அனுபவித்து பரிசில்களும் பெற்றுள்ளனர். சிலர் உயிரைப் பணயம் வைத்துச் சென்று அங்கு நடக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.

அனிதா பிரதாப் என்ற ஊடகவியலாளர் முதலில் தன் உயிரைப் பணயம் வைத்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அவர்களுடன் தங்கியிருந்து அவர்களின் நற்பண்புகளை வெளிக்கொணர்ந்தார்.  கவிஞர் தாமரை உட்பட வேறு சில தமிழைன உணர்வாளர்களும் இரகசியமாக தமிழீழம் சென்று வந்துள்ளனர்.

நிருபாம ராவ்
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வந்த பெண்களில் இவர் முக்கியமான இந்திய அத்காரியாவார். இவர் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்தவர். அப்போது தமிழர்களுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டவர். பின்னர் பதவி உயர்வு பெற்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளரான பின்னர் இவர் இலங்கைக்குச் செய்த பயணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுபற்றிக் காண இங்கு சொடுக்கவும்: இலங்கையில் நிருபாமா ராவோடை ராவுகள்

 கருணாநிதியின் மகள் கனிமொழி
கருணாநிதியின் மகள் கனிமொழி இலங்கை சென்று ராஜ்பக்சவின் முன் பல்லிளித்துக் கொண்டு நின்றதைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அதுபற்றி நிறையப்பேர் எழுதிவிட்டார்கள். ஆனால் கனிமொழியும் ராஜபக்சவும் ஒன்றாக நிற்கும் படத்தைப்பார்த்தால் எனக்கு நினைவிற்கு வருபவர் முன்னாள் தமிழக முதல்வர் ராஜகோபாலாச்சாரியார்தான். இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்று குவித்ததில்லை.

சுஸ்மா சுவராஜ்
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த முதலாவது தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆத்திரமடைந்த இலங்கையை சமாதானப்படுத்த இந்தியா தனது எதிர்க்கட்சிப்பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை சுஸ்மா சுவராஜ் தலைமையில் அனுப்பியது. அதை இந்தியக் கைக்கூலி ஊடகங்கள் தமிழர் துயர்பற்றி அறிய அனுப்பிய குழு எனப் பரப்புரை செய்தன. முடிவில் சுஸ்மா மஹிந்தவிடம் இருந்து ஒரு வைரமாலையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார் எனக் கூறப்படுகிறது. இதுபற்றிய முந்தைய பதிவைக் பார்க்க இங்கு சொடுக்கவும். சுஸ்மாவைச் செல்லாக் காசாக்கிய ஜெயலலிதா

2009இல் போர் முடிந்த பின்னர் ஒரு தமிழ் இளம் பெண் ஊடகவியலாளர் தன் உயிரைப் பணயம் வைத்து இலங்கை சென்று பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார்.  அவரது பெயர் நினைவில் இல்லை.

இப்போது வட இந்தியப் பெரு முதலாளிகள் தாம் இலங்கையில் செய்த முதலீடுகளிற்கான பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மூடி மறைக்கப் பல சதி செய்கிறார்கள். வரும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வாக்கு வேட்டையை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கு சாதகமாக நடந்தால் அது இலங்கை இந்திய உறவைப் பாதித்து தமது முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இலங்கையில் முதலீடு செய்த இந்திய முதலாளிகள் அஞ்சுகிறார்கள். இதன் பிரதிபலிப்பை வட இந்திய ஊடகங்களில் இப்போது பார்க்கலாம். தமிழக மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது, தமிழக சட்டசபையில் ஈழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது, ஜெனிவாவில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டிப்பது, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் விளையாடுவதைத் தடுத்தைக் கண்டிப்பது என பல வட இந்திய ஊடகங்கள் சதி செய்யும் வேளையில் டெஹெல்க்கா(Tehelka) இணையத்தளத்தில் ரேவதி லால்(Laul) என்ற ஊடகர் இலங்கைக்கு ஓர் உல்லாசப் பிரயாணியைப்போல் சென்று தமிழர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

The War May Be Over But The Idea Lives On என்னும் தலைப்பில் ரேவதி லால் அம்மையார் தனது இலங்கைப் பயண அனுபவத்தை விளக்கியிள்ளார். இலங்கையைப் பற்றி வெளிநாட்டில் யாராவது குறைசொன்னால் இலங்கை ஆட்சியாளர்கள் இங்கு வந்து பார்த்தால் தெரியும். வந்து பாருங்கள் நாம் செய்யும் நற்பணிகளையும் அபிவிருத்திகளையும் என்று சொல்வார்கள். இந்து ராம் போன்ற தட்சணைக்கு அலைபவர்கள் இலங்கைக்கு அரச விருந்தினர்களாகச் சென்று ராஜபக்ச ஆட்சியைப் புகழ்வது உண்டு. ஆனால் ரேவதி லால் இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் பலவற்றை துல்லியமாக அறிந்து அம்பலப்படுத்தியுள்ளார். இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களை யாரும் முழுமையாகவோ அல்லது சரியாகவோ கண்டறிய முடியாது. ரேவதி லால் அம்பலப்படுத்தியது ஒரு சிறு பகுதிதான்.

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் புனர்வாழ்வையும் பொருளாதாரத்தையும் பற்றி மட்டும்தான் கவலைப்படுகிறார்கள். அவர்கள் உரிமைப் போராட்டத்தைப்பற்றிக் கவலைப்படுவதில்லை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே உரிமைப் போராட்டம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல கைக்கூலிகள் கூச்சலிடும் வேளையில் ரேவதி லால் தனது கட்டுரையை "The idea of a separate Tamil nation is not dead in Sri Lanka." என்னும் வாசகத்துடன் ஆரம்பிக்கிறார். இன்னொரு பார்ப்பன நாயான சோவின் துக்ளக் பத்திரிகையின் ஊடகர் இலங்கைக்குச் சென்று அங்கு ராஜபக்சவின் அடிவருடிகளைப் பேட்டி கண்டு அவர்கள் எல்லாரும் தமிழ்நாட்டில் மாணவர்கள் செய்யும் போராட்டத்தை எதிர்ப்பதாகப் பேட்டி கண்டு எழுதினார்கள். ஆனால் ரேவதி லாலிடம் எவரும் தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

ரேவதி லால் அம்பலப்படுத்துபவை (http://tehelka.com/the-war-may-be-over-but-the-idea-lives-on-2/?singlepage=1):
  • போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் வன்னிமண் ஒரு காயப்பட்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.
  • தமிழர் நிலங்களில் படையினரின் இருப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
  • போர் நடந்த இடத்தில் தமிழர்களின் மௌனம் காதை அடைக்கிறது. அவர்களுடன் கதைக்க முடியாமல் இருக்கிறது. - The silence of the Tamils is deafening as you reach the last mile of the war. It is impossible to speak with them. As we step out of our van, we are ordered out of the area by two men in military uniform. They follow us on their bike for some distance.
  • தமிழர்பகுதிகளில் ஊடகவியலாளர்கள் வரவேற்கப்படுவதில்லை.
  •  1950களில் இருந்து செய்துவரும் தமிழர்களை அவர்களது வளமிக்க நிலங்களில் இருந்தும் மீன்வளமிக்க கடல்களில் இருந்தும் வெளியேற்றுவது இப்போது தொடங்கியுள்ளது. a return to State policies from the 1950s that systematically and deliberately excluded them from cultivable farmland and prime fishing waters. The exclusion that sparked the Tamil resistance and war in the first place is back with a bang.
  • தமிழர்களை மீன்பிடிப்பததைத் தடைசெய்துவிட்டு சிங்களவர்களை மீன்பிடிக்கச் செய்துள்ளனர். இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
  • தமிழர்களின் விவசாய நிலங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி விவசாயம் செய்ய வைக்கப்பட்டுள்ளனர். 
  • ஆப்கானிஸ்த்தனிலும் பார்க்க தமிழர் பூமியில் படையினர்களின் இருப்பு விகிதம் 4 மடங்கு அதிகமாக உள்ளது.  A report in the Economic and Political Weekly on 14 July 2012 claimed the ratio of army to civilians in these parts is as high as 1:5. If that’s true, it’s at least four times more than the troops on ground in Afghanistan where a war is still on.
  • போரின் பின்னர் விவசாயிகளின் வருமானம் பெரிதளவு குறைந்துள்ளது. A farming community that, at the time of fleeing their land in 1984, made the equivalent of LKR 50,000 a month now earns not more than LKR 2,000, which for a war-inflated economy is barely subsistence level.
  • தமிழர்கள் மீண்டும் எழுச்சி பெறாமல் இருப்பதைக் கருத்தில் கொண்டுதான் மீள் குடியேற்றம் நடைபெறுகிறது. an NGO working with displaced people explains what “resettled” really means. Farmers who once had one-acre plots are “resettled” on pint-sized slices of land measuring 0.125 acres. “It’s part of a State sponsored design to resettle Tamils at below subsistence levels so they can never regroup and fight,” the NGO explains.
  • முன்னாள் போராளிகளும் அவர்களிற்கு உதவி செய்தவர்களும் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். 
  • தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்களைப் பற்றிப் பார்க்கும் போது ஒரு பெரிய படத்தை தவறவிடுகிறோம். அது இனக்கொலை. கே குருபரன் என்ற சட்டவியலாளர் இலங்கையில் நடக்கு இனக்கொலை பற்றி விளக்கியுள்ளார். Looking at these stories of torture as merely a humanitarian crisis, however, is to miss the big picture. It makes activist lawyer K Guruparan very angry. “A simple human rights discourse doesn’t help,” he explains. It merely forces people to weigh one set of atrocities against another — those by the Sri Lankan Army in 2009 against those carried out over the past 30 years by the LTTE, which had one of the deadliest guerrilla armies and suicide squads in contemporary history. “Without the history of Tamil oppression and the ongoing structural genocide, the story of the Tamils has almost no meaning,” says Guruparan. “You have to look at the longstanding process of disenfranchisement from which the LTTE emerged.” (பிற்குறிப்பு: குருபரன் இப்போதும் உயிருடன் இருக்கிறாரா?)
  • ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநா நிபுணர் குழு அறிக்கையை மறந்துவிட்டது. (பிற்குறிப்பு: இல்லையம்மா அவர்கள் மறைக்கிறார்கள்)  however, on 19 March this year, when the UNHRC drafted a resolution on Sri Lanka, it seemed to have developed amnesia about this report. The resolution was gentle in its censure of the government for what happened in 2009 and even praised it for the work done since — “welcoming and acknowledging the progress made by the government of Sri Lanka in rebuilding infrastructure, demining, and resettling the majority of internally displaced persons”.
  • காணாமற்போனோரின் உறவினர்களின் துயர் எல்லாவற்றிலும் பெரிதாகவும் முகம்கொடுக்க முடியாததாகவும் இருக்கிறது. 
  • தமிழர்களுக்கு உதவும் கத்தோலிக்கக் குருமார்கள் மிரட்டப்படுகிறார்கள். (பிற்குறிப்பு - இலங்கையில் இந்துக் குருமார்கள் இருக்கிறார்களா?)
  • போரின்போது காயப்பட்ட சிறுவர்களை மிதிவண்டியில் பலமைல் தூரம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்ல வேண்டிய நிலைமை இருந்தது. In one such attack in August 2007, 13 schoolchildren were killed and many others injured. There were no vehicles to take them to hospitals. Indrakumar remembers lifting two bleeding kids onto his bike to take them to the nearest hospital 16 km away. He was riding as fast as he could when he saw the head of one of the kids roll off. Neither survived.
  • என்ன நடக்கப் போகிறதோ என்று கஜேந்திரன் பொன்னம்பலம் பயப்படுகிறார். தாமெல்லாம் சிங்கள பௌத்தர்களாக மாற்றப்பட்டு விடுமோ என அவர் அஞ்சுகிறார். 
ரேவதி லாலின் கட்டுரையைப் பார்த்தவுடன் தெரிகிறது இலங்கை சென்ற பல ஊடகர்கள் எப்படி விலை போயிருக்கிறார்கள் என்று.

ரேவதி லாலின் கட்டுரையில் இலங்கையில் தமிழர்களுக்கு பிரித்தானியா தனது குடியேற்ற ஆட்சியின் போது அதிக சலுகைகள் வழங்கியது எனக் குறிப்பிட்டதை தமிழ்நெற் இணையத்தளம் மறுத்துள்ளது.  பிரித்தானியா ஆட்சியில் இருந்து சுதந்திரம் வேண்டும் என சிங்களவர்களுக்கு முதல் தமிழர்கள்தான் போராடினர். யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு அமைப்பு மகாத்மா காந்தியை இலங்கைக்கு அழைத்து தமிழர்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை பரப்பியது. எமது சுய நிர்ணய உரிமையைப் பறித்து சிங்களவர்களைடம் கொடுத்தது பிரித்தானிய அரசுதான். இது போன்ற கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து தமிழ்நெற் பிரித்தானியக் குடியேற்ற அரசு தமிழர்களுக்குச் சாதகமாக நடந்து என்பதை மறுக்கிறது.
அதை வாசிக்க: http://tamilnet.com/art.html?catid=79&artid=36240

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...