Saturday 13 April 2013

விரைவாக அசைவனவற்றை படம் பிடிக்கும் போது கவனிக்க வேண்டியவை

கால்பந்தாட்டத்தில் கோல் அடிக்கும் போது, கிரிக்கெட்டில் விக்கெட் விழும்போது, பிரபலமானவர் வாகனத்தில் செல்லும் போது, விலங்குகள் ஓடும் போது, பறக்கும் விமானம் இவற்றை படமெடுக்கும் போது சிறப்புக் கவனங்கள் தேவை.

1. Shutter Speed - ‘the length of time that the shutter is open’
Shutter speed என்பது நீங்கள் படமெடுக்கும் போது உங்களது கமெராவின் லென்ஸ் எவ்வளவு நேரம் திறந்திருக்கிறது என்பதைக் குறிக்கும். விரைவாக அசைபவனற்றைப் படமெடுக்கும் போது Shutter Speed அதிகமாக இருக்க வேண்டும். எந்த Shutter Speed ஐ தெரிவு செய்வது என்பது அசையும் பொருளின் வேகத்தையும் உங்கள் கமெராவையும் பொறுத்தது. புதிய ரக டிஜிட்டல் கமெராக்கள் தானியங்கியாக படமெடுக்கும் போது அவை இருக்கும் ஒளியின் அளவைக் கொண்டு Shutter Speed ஐ தாமாக நிர்ணயிக்கும். ஆனால் விரைந்து அசைவனவற்றைப் படமெடுக்கும் போது தானியங்கியை நிறுத்தி விட்டு Shutter Speed ஐ நாமே தெரிவு செய்ய வேண்டும். வேறு வேறு ஒளிச் செறிவு நிலைகளில் வேறு வேறு வேகங்களில் அசைவனவற்றை நாம் ஒளிப்பதிவு செய்து பயிற்ச்சி எடுப்பதன் மூலம் எமது கமெராவிற்கு உரிய Shutter Speedஐ நாம் அறிந்து கொள்ளலாம். Shutter Speed என்பது ஒளிப்பதிவு செய்யும் நேரமாகும். இதன் மிகக் குறைந்த அளவு ஒரு நொடியை 8000ஆல் பிரிக்க வரும் நேரமாகும் (1/8000 of a second). மிககக் கூடிய அளவு 30 நொடிகள் (30 seconds). இது மிக அகன்ற நேரம் என்பதால் சரியான Shutter Speedஐ தெரிவு செய்வதற்கு சிறந்த பயிற்ச்சி தேவை.
பொதுவாக 1/60th of a secondஇற்கு கூடிய நேரத்தை குறைந்த Shutter Speed என்றும் 1/60th of a secondஇற்கு குறைந்த நேரத்தை கூடிய Shutter Speed என்றும்சொல்லலாம். குறைந்த Shutter Speedஇல் படமெடுக்கும் போது கமெராவை ஆட்டக்கூடாது. கமெராவை ஒரு முக்காலியில்(tripod) கமெராவைப் பொருத்தி எடுப்பது உகந்தது. முக்காலி இல்லாதவிடத்து கமெராவை ஒரு நிலையான பொருள் மீது வைத்து எடுக்க வேண்டும். கமெரா பட்டனைக் கமெராவை ஆட்டாமல் அழுத்த வேண்டும். அதிகரித்த Shutter Speedஇல் படமெடுக்கும் போது போதிய ஒளி இருக்க வேண்டும்.


2. முன் கூட்டியே focus செய்து வைத்திருக்க வேண்டும்
உதாரணத்திற்கு ஒரு விக்கெட் விழுவதைப் படமெடுக்க வேண்டுமென்றால் பந்து வீசப்படுமுன்னரே விக்கெட்டின் மீது கமெராவைப் focus செய்து வைத்திருக்க வேண்டும். விரைவு பந்து வீச்சானரானால் பந்து வந்து நிலத்தில் விழும்போது பட்டனை அழுத்த அது விக்கெட் விழுவதைப் படமெடுக்கும். ஆம் இதற்கும் சிறந்த பயிற்ச்சி தேவை. என்னதால் புகைப்படக் கருவிகள் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறினாலும் புகைப்படம் எடுப்பது ஒரு கலை. எந்தக் கலைக்கும் நிறைய்ப பயிற்ச்சி தேவை. டிஜிட்டல் கமெராவில் உள்ள ஒரு வசதி நாம் செல்வின்றி எத்தனை படங்களையும் எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு படமும் எடுக்கமுன்னர் அவை எந்தச் சூழலில் எந்த Shutter Speedஇல் எடுக்கப்படன என்பவறைக் குறித்து வைத்துக் கொண்டால் பின்னர் Shutter Speed தெரிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

3. ஒளிக்கு ஏற்ப உங்கள் நிலையைத் தெரிவு செய்யுங்கள்
சூரியனின் நிலை, செயற்கையாக இருக்கும் ஒளி போன்றவற்றை நன்கு கவனித்து ஒளிப்பாய்ச்சல் உங்களுக்குப் பின்னால் இருந்து வரும்படியாக உங்கள் நிலையைத் தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் அநேகமாக மப்பும் மந்தாரமாகவே இருக்கும். அப்போது செயற்கை ஒளி இல்லாத இடத்தில் உங்கள் உள்ளங்கையில் ஒரு பேனாவையோ அல்லது உங்கள் விரலையோ நிறுத்திப் பார்த்தால் எந்தப்பக்கம் பேனாவினது அல்லது விரலது நிழல் இருக்கிறது என்பதைப் பார்த்து ஒளி பாயும் திசையை அறிந்து கொள்ளலாம்.

4. Focal Length and Shutter Speed
Focal length பற்றிய அறிவு சரியான shutter speed ஐத் தெரிவு செய்ய உதவும். Focal length என்பது லென்சிற்கும் ஒளி பதியப்படும் இடத்திற்கும் இடையிலான தூரமாகும். இந்தத் தூரம் நீண்டிருக்கும் போது கமெராவை அசைக்காமல் இருப்பதில் கவனம் தேவை. பொதுவாக Focal length நீளமானால் shutter speed அதிகரிக்க வேண்டும். இல்லாவிடில் கலங்கலான படம் பதியப்படும்.

5. F-Stop
F-Stop என்பது focal length ஐ diameter of the lens ஆல் வகுக்க வரும் அளவாகும். உதாரணத்திற்கு 200mm f/4 லென்ஸ் என்பது 50mm அகல லென்ஸ் ஆகும். f/4 லென்ஸ் என்பது "focal-length over 4" ஆகும்.
 
பலர் focal length, shutter speed போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் தமது பயிற்ச்சிகளின் மூலம் சிறந்த புகைப்படங்களை எடுப்பர். கமெரா பற்றிய அறிவும் பயிற்ச்சியும் இணைந்தால் புகைப்படங்கள் மிகவும் தரமானதாக அமையும்.

3 comments:

சேக்காளி said...

சுருக்கமாக புகைப்படமெடுப்பதில் தேவையானவற்றை விளக்கியிருக்கிறீர்கள்.பயனுள்ள பதிவு.கூடுதலாய் இன்னும் சில படங்களை இணையுங்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...