அமெரிக்க நீதி மன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரங்கள் எல்லாவற்றிலும் விசித்திரமான வழக்கு.
ரிச்சட் என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். அவரது உடல் அவர் வாழ்ந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை ஒட்டி கட்டப்பட்டிருந்த ஒரு வலையில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது. அவரது இறப்பை விசாரித்த உளவுத்துறையினர் அவரது அறையில் தான் ஏமாற்றத்தால் தனது பத்தாவது மாடியில் இருக்கும் தனது இருப்பிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்யப் போவதாக கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதை அறிந்து கொண்டனர். அப்படியானால் ரிச்சட்டின் உடலில் எப்படி துப்பாக்கிச் சூடு விழுந்தது என்று விசாரித்த போது எதிர் மாடியடுக்கு வீடுகளில் குடியிருக்கும் சிலர் ரிச்சட் தனது வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்த போது எட்டாவது மாடியில் இருந்து அவர் உடலில் துப்பாக்கிச் சூடு விழுந்ததாக சொன்னார்கள். விழுந்த ரிச்சட் உடல் ஆறாவது மாடியில் கட்டியிருந்த ஒரு வலையின் மீது விழுந்தது. அந்தத் துப்பாக்கிச் சூடு விழாவிடில் ரிச்சட் அந்த வலையில் உயிருடன் இருந்திருப்பார் என முடிவு செய்த உளவுத் துறையினர் ரிச்சட்டின் இறப்பு ஒரு கொலை என்று முடிவு செய்து அதைச் செய்தவர்கள் எட்டாவது மாடியில் இருப்பவர்கள் என நினைத்தனர். எட்டாவது மாடியில் உள்ளவர்களைக் கைது செய்து விசாரித்தனர். எட்டாவது மாடியில் குடியிருந்தவர்கள் ஒரு வயோதிப தம்பதியினர் அவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். மனைவியை கணவன் அடிக்கடி துப்பாக்கியால் சுடுவது போல் மிரட்டுவாராம் ஆனால் ஒருநாளும் சுடுவதில்லையாம். அதனால் அந்த வயோதிபக் கணவன் தான் கொலைகாரன் என முடிவு செய்து அவரைத் துருவித் துருவி விசாரித்தனர். அதன் போது அவர் தனது துப்பாக்கியில் ஒரு நாளும் குண்டு போட்டு வைத்திருப்பதில்லை. சும்மா வெற்றுத் துப்பாக்கியால் மனைவியை மிரட்டுவார் என அறிந்து கொண்டனர். யாரோ அந்த வயோதிப மனைவியைக் கொலை செய்யும் நோக்குடன் துப்பக்கிக்குள் குண்டை வைத்திருக்கின்றனர் என உளவுத்துறை முடிவு செய்தது. விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. மனைவிக்கு எதிரி யார் என மனைவியிடமே கேட்டனர். சுட்டவரின் மனைவி தனது மகனுக்கு தனது ஓய்வூதியத்தில் இருந்து மாதா மாதம் பணம் கொடுத்து வருவாராம். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக தாய் மகனுக்குப் பணம் கொடுப்பதை ஆறு மாதத்திற்கு முன்னர் நிறுத்தி விட்டார். ஆத்திரமடைந்த அவரது மகன் உன்னைக் கொல்லுவேன் என்று அடிக்கடி மிரட்டுவாராம். அந்த மகனே தாயைக் கொல்லும் நோக்குடன் தந்தையின் துப்பாக்கியில் குண்டை வைத்திருக்கிறார் தந்தை வெற்றுத் துப்பாக்கி என நினைத்து தாயை மிரட்டும் போது தாய் சுடுபட்டு இறக்கட்டும் என்று. வீட்டில் அதற்கான தடயங்கள் கையடையாளங்களும் இருந்தன. பாவம் தந்தை! மனைவியை மிரட்டும் போது கை நடுக்கத்தால் குறிதவறி அது ஜன்னலூடாகச் சென்று விழுந்து கொண்டிருந்த ரிச்சட் மீது பட்டு அவரைக் கொன்று விட்டது. அந்தத் துப்பாக்கி குண்டடி பட்டிருக்காவிடில் தற்கொலை செய்ய முயன்ற ரிச்சட் கீழிருந்த வலையில் விழுந்து தப்பியிருந்திருப்பான். இதனால் ரிச்சட்டின் கொலைக்கு குண்டைத் துப்பாக்கிக்குள் வைத்த தம்பதிகளின் மகன்தான் காரணம் என்பதால் உளவுத்துறையினர் மகனைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அவர்களின் மகன்தான் தன் தாயைக் கொல்ல தான் வைத்த குண்டு நீண்ட நாட்களாக வேலை செய்யவில்லை என்ற விரக்தியாலும் தாயின் சொத்துக்களும் தனக்கு வரவில்லை என்ற விரக்தியாலும் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற ரிச்சட் எனத் தெரிய வந்தது. தாயைக் கொல்ல ரிச்சட் வைத்த குண்டால் அவனே கொல்லப்பட்டான். இப்போது சொல்லுங்கள் ரிச்சட்டின் இறப்பு கொலையா தற்கொலையா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
1 comment:
keduvan kedu nenaipan enparkal athupola richard viritha valaiyil avane sikkikondan
Post a Comment