அம்பர் காசன் என்ற பெண் ஒரு உணவகத்தில் வழுக்கி விழுந்து தன் இடுப்பு எலுமபை முறித்தமைக்கு இழப்பீடாக $113,500 அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நீதிமன்றம் உத்தரவிட்டது. அம்பர் காசன் வழுக்கி விழுந்தது நிலத்தில் சிந்திக் கிடந்த பானத்தில். அவள் வழுக்கி விழுவதற்குச் சற்று முன்னர் அவளுக்கும் அவள் காதலனுக்கும் இடையில் நடந்த சண்டையின் போது அவள் தனது காதலின் முகத்தில் வீசிய பானமே நிலத்தில் சிந்திக் கிடந்தது அதிலேயே அவள் வழுக்கி விழுந்தாள்.
டெரென்ஸ் டிக்சன் என்னும் திருடன் ஒரு வீட்டுக்குள் புகுந்து திருடிய பின்னர் அவனால் வெளியில் வர முடியாதபடி அவன் கடைசியாக கைவரிசையக் காட்டிய வண்டிக் கொட்டகை (garage) மூடிக் கொண்டுவிட்டது. அதனால் விடுமுறையில் வெளியூர் சென்றிருந்த வீட்டு உரிமையாளர்கள் திரும்பி வரும்வரை ஒரு வாரம் அவன் அந்தக் கொட்டகைக்குள் இருந்த பெப்சியிலும் நாய் பிஸ்கட்டுக்களுடனும் வாழ வேண்டி இருந்தது. வீட்டு உரிமையாளர்மேல் அவன் வழக்குத் தொடுத்து அவனுக்கு ஏற்பட்ட மனப்பாதிப்பிற்காக $500,000 இழப்பீடாகப் பெற்றுக் கொண்டான்.
A German court ruled on that people have the right to claim compensation from service providers if their Internet access is disrupted, because the Internet is an “essential” part of life.
காப்பீடு கோரும் விண்ணப்பப் பத்திரங்களில் எழுதப்பட்ட விநோதமான காரணங்கள்:
1. எனது வீட்டிலிருந்து எனது வண்டியை வெளியே செலுத்திக் கொண்டு வந்த போது ஒரு பேருந்தில் மோதினேன். அந்தப் பேருந்து வழமையிலும் பார்க்க ஐந்து நிமிடம் முந்தி வந்ததால் விபத்து ஏற்பட்டது.
2. நான் காரைத் திரும்பும் போது எனது ஒரு கண் முன்னால் நின்ற லொறிமீதும், மற்றக் கண் தெருவைக் கடக்க முயன்ற பாதசாரி மீதும் இன்னொருகண் என்பின்னால் வந்த வண்டியின் மீதும் இருந்தபடியால் விபத்து நிகழ்ந்தது.
3. 100 கிமீ வேகத்தில் நான் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த என் காதலி ...............இல் தடவினாள் இதனால் நான் வண்டிமீதான கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது.
4. ஒரு பாதசாரி வந்து எனது வண்டியில் மோதி விழுந்தான்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment