ஈரான் தான் தயாரித்ததாக சொல்லிய Qaher-313 என்னும் stealth fighter போர் விமானங்கள் போலியானது என பதிவர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். கதுவி(ராடார்)களால் அடையாளம் காண முடியாத தொழில்
நுட்பம் கொண்ட போர் விமானங்களை Stealth Fighter எனப்படும். உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் விமானம் என
ஈரான் தெரிவித்திருந்தது.
ஈரானின் Qaher F313 இன் தன்மைகள்:
ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய விமானம்.
புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
தாக்குதலும் வேவும் செய்யக்கூடியது.
விமானத்தில் இருந்து விமானத்திற்கும் விமானத்திலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
தற்கால போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit பெரியதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது. இதில் ரடார் பொருத்த முடியாது.
பல போர் விமான வல்லுனர்கள் ஈரானின் Qaher-313 விமானம் சந்தேகத்துக்கு உரிய வகையில் மிகச் சிறியதாக இருக்கிறது என்று உடன் தெரிவித்திருந்தனர். ஐக்கிய அமெரிக்காவின் F-22, F-35 ஆகிய போர்விமாங்களின் தன்மைகளை ஈரானின் Qaher-313 விமானம் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் ஈரான் வெளிவிட்ட படம் ஒன்றை அவதானித்த பதிவர்கள் சிலர் அப்படம் PickyWallpapers.com என்னும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஈரானிய Mount Damavandஇன் படத்தின் மேல் போட்டோஷோப்பில் ஈரானிய விமானத்தின் படம் மேற்பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
David Cenciotti என்னும் பதிவர் The plane appeared to be “nothing more than a large mock-up model made out of plastic”, lacking “the characteristic rivets (and) bolts all aircraft, including stealthy ones, feature.” என்கிறார்.
ஈரான் வெளியிட்ட காணொளி ஒரு ரிமோட் கொன்ரூளில் இயக்கிய விமானத்தின் ஒளிப்பதிவே என்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment