சும்மா இருந்த ஆப்கானிஸ்த்தானிற்கு 1979இல்ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் அமைத்துக் கொடுத்தது அமெரிக்கா. அதில் இருந்து அமெரிக்காவால் சோவியத் யூனியனை உளவு பார்க்க முடியும் என்பதால் ஆப்கானிஸ்த்தானில் இருந்த அமெரிக்க சார்பு அரசைக் கவிழ்க்க சோவியத் யூனியன் ஆப்கானிஸ்த்தான் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஆப்கான் மக்கள் மோசமான துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
ஆப்கானில் நிலை கொண்ட சோவியத் படைகளுக்கு எதிராக இசுலாமியத் தீவிரவாதிகளை அமெரிக்கா உருவாக்கியது. அமெரிக்கா உருவாக்கியவர்களில் முக்கியமானவர் பின் லாடன். சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அமெரிக்க கைக்கூலிகளுக்கும் சோவியத்
ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் மக்கள்
அகப்பட்டுத் தவித்தனர். பின்னர் இசுலாமியத் தீவிரவாதிகளின் பிடியில்
தவித்தனர். 2001இல் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இசுலாமியத்
தீவிரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் ஆப்கானிஸ்த்தானிய மக்கள்
அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
2014-ம் ஆண்டுடன் நேட்டோப் படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னர் ஆப்கானில் போராடும் இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக நேட்டோப் படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. தமது கைக்கூலி ஊடுருவிகள் மூலம் உளவுத் தகவல்களைத் திரட்டி தலிபான், அல் கெய்தா போன்ற அமைப்புக்களின் போராளிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதலக்ளை மேற்கொள்கின்றன.
2012-02-12-ம் திகதி ஆப்கானின் குனர் மகாண ஆளுனர் ஃபஜ்லுல்லா வாஹிதி தங்களுக்கு அறிவிக்காமல் அந்நியப் படைகள் நடாத்திய தாக்குதலில் ஐந்து சிறுவர்கள் உடபட பத்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிவித்துள்ளார். மேலும் இத்தாக்குதலில் ஐந்து தலிபான் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதிரியான தாக்குதல்கள் பல இனி அடிக்கடி ஆப்கானில் நடக்கும் என எதிர்பார்க்கலாம். தவிக்கும் ஆப்கான் மக்களின் துயரங்களைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களுக்குள் இந்திய உளவாளிகள் வேறு நுழைந்து ஆப்கானிற்கு அள்ளி வைப்பது போல் படம் தயாரித்து பணம் சம்பாதிக்கிறார்கள் சிலர். தமிழ்ப்படக் கதாநாயகர்கள் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளைக் கொல்வதைப் பார்த்து தமிழ்ப்பட ரசிகர்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால் இப்போது தமிழ்ப்பட கதாநாயகர்கள் ஆப்கானிற்கும் சென்று தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்காவிற்கு உளவாளிகளாகிறார்கள். 1979இல் இருந்து பெரும் அவலத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஆப்கான் மக்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. Hasan பெயரிற்கே அமெரிக்க விமான நிலையத்தில் கிடைத்த தொந்தரவைக் கூட மறந்துவிட்டார்கள். ஒரு சில போராளிகள் மும்பாய் நகரைத் தாக்க வருவதைத் தடுக்க முடியாத ரோ உளவாளி 64 மணித்தியாலங்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு சிலர் ஒரு நகரத் தம்து கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைத் தடுக்க முடியாத ரோ உளவாளி நியூரோர்க் நகரத்தை அணுக்குண்டுத் தாக்குதலில் இருந்து தாக்குகிறார்.
ஆப்கானில் கொல்லப்பட்ட தலிபான் போராளிகள் மீது ஒன்றுக்கிருந்து அசிங்கப்படுத்திய அமெரிக்கப் படையினரை அசிங்கமாகச் சித்தரிக்காமல் பெண்களையும் சிறுவர்களையும் கொல்லாதவர்களாகச் சித்தரிக்கின்றனர். உலக நாயகன் அமெரிக்க உளவு நாயகனாக எப்போது மாறினார்?
பின் லாடனைக் கொன்றவரின் பேட்டி
2011 மேமாதம் 3-ம் திகதி அமெரிக்க சிறப்புபக் கடற் படையணியின் சீல் பிரிவினர் பின் லாடனை அவரது பாக்கிஸ்த்தான் மாளிகையின் மூன்றாம் மாடியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். பில் லாடனைக் சுட்டுக் கொன்ற அமெரிக்கர் Esquire என்னும் சஞ்சிகைக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் தான் பின் லாடன் முன் நின்றபோது அவர் குழப்பமடைந்திருந்தார் எனவும் பின் லாடன் தான் எதிர்பார்த்ததிலும் பார்க்க உயரமாக இருந்தார் எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் பின் லாடனுக்கு அண்மையில் அவரது ஏகே-47 துப்பாக்கி இருந்தது. அவர் தனது இளைய மனைவியின் தோள்களைப் பிடித்தபடி நின்றிருந்தார். மனைவி தற்கொலைக் குண்டுகள் பொருத்திய உள்ளாடையை அணிந்திருக்கலாம் என்ற அச்சம் எம்மிடமிருந்தது. பின் லாடன் தனது துப்பாக்கியை எடுக்காமல் இருக்க அவரது தலையில் சுட்டேன். இரண்டு சூடுகளுடன் அவர் இறந்து நாக்குத் தொங்கையபடி விழுந்தார். அவரது இளைய மனைவியை ஒரு படைவீரன் அப்புறப்படுத்தினான். பயந்து அழுது கொண்டு நின்ற பின் லாடனின் மகனைத் தூக்கி அவரது தாயாருடன் சேர்த்தேன். பேட்டியளித்த அமெரிக்க படை வீரர் தான் ஓய்வு பெற்ற பின்னர் மன் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தன்னை அமெரிக்க அரசு கவனிக்கவில்லை எனவும் தெரிவித்திருப்பது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment