Friday, 7 December 2012

சாம்பல் மேட்டுப் பூக்கள்

இன்றைய அழிபாடுகள்
நாளைய கோபுரங்களின்
அடித்தளங்களாகும்

இன்றைய அவலக் குரல்கள்
நாளைய வெற்றியிசையின்
பல்லவிகளாகும்

இன்றைய எரிந்த சாம்பல்கள்
நாளைய தோட்டங்களின்
பசளைகளாகும்

இன்றைய பின்னடைவுகள்
நாளைய பாய்ச்சல்களின்
கால் தடங்களாகும்

இன்றைய உமது கொக்கரிப்புகள்
நாளைய உங்கள் அவலக் குரல்களின்
முன்னோட்டங்களாகும்

2 comments:

Anonymous said...

அருமையான கவிதை. வீழ்ந்தவர் நாளை எழுவர். நிச்சயம் எழுவர்

Anonymous said...

கவிதை மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...