கதுவி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பம்
போர் முனையில் எதிரி விமானங்களை கதுவி(Radar) மூலம் கண்டறிவர். கதுவிகளைத் தவிர்ப்பதற்கு (Stealth) தொழில் நுட்பம் உதவிகிறது. இதன்படி விமானம் தட்டையாக வடிவமைக்கப்படும். அத்துடன் கதுவியில் இருந்து வரும் வானொலி அலைகளை உறிஞ்சும் வேதியியல் பதார்த்தம் விமானத்தில் பூசப்பட்டிருக்கும்.
ஆளில்லாப் போர் விமானங்கள்
உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
நியுரோன் விமானங்கள்
நியுரோன் விமானங்கள் ஆளில்லாத் தொழில் நுட்பத்தையும் கதுவி தவிர்ப்பு(Stealth) தொழில் நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்படுகின்றன.
எதிர்கால விமானப் போர் ஆளில்லா விமானங்களினுடாக நடக்கவிருக்கிறது. உலகின் சிறிய நாடுகள் கூட ஆளில்லா விமானங்களில் அக்கறை காட்டி வருகின்றன.
இந்திய ஆளில்லாப் போர் விமானங்கள்
Aura |
பாக்கிஸ்த்தான் - ஆப்கானிஸ்த்தான் எல்லைகளில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவும் ஆளில்லாப் போர் விமானங்களில் அதிக அக்கறை காட்டி வருகின்றது.
AURA எனப் பெயரிடப்பட்ட ஏவுகணைகள் தாங்கிச் சென்று தாக்கக்கூடிய ஆளில்லா விமானங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.
அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலில் ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானங்களில் அதிக முன்னேற்றம் அடைந்த அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலில் முதல் முறையாக ஆளில்லா விமானங்களைச் சோதித்துப் பார்த்துள்ளது:
No comments:
Post a Comment