சிறுபான்மை ஆட்சி
சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே. கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். அலவைற் இனக்க்குழுமம் கிரித்தவர்களும் மோதாமல் அவர்களையும் அணைத்து நடக்கிறது. சிரிய அதிபர் பஷார் அல் அசாத பதிவியில் இருந்து விலக அனுமதிதால் அது அலவைற் இனக்குழுமத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும். அதனால் அலவைற் இனப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைக் கொல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்ற நிலையில் உறுதியாகப் போராடுகின்றனர். பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கான ஆதரவு மன்னராட்சி நிலவும் சவுதி அரேபியாவிலிருந்தும் கட்டாரிலிருந்தும் கிடைக்கின்றன. இதனால் பஷார் அல் அசாத்திற்குப் பிறகு ஒரு நல்ல மக்களாட்சி சிரியாவில் நிறுவப்படுமா என்ற சந்தேகம் எழும்பிஉள்ளது.
பலமடையும் கிளர்ச்சிக்காரர்கள்
பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடையே ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பல கூறுகள் உள்ளன. மதவாதக் குழுக்களுக்கும் சிரிய சுந்தந்திரப்படையினருக்கும் இடையில் முரண்பாடுகள் நிறைய உண்டு. தொடக்கதில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவத் தயங்கி வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தற்போது சில உதவிகளைச் செய்து வருகின்றன. 13-11-2012இலன்று பிரான்ஸ் அரசு சிரியக் சிரியப் புரட்சியாளர்களின் கூட்டமைப்பு எனப்படும் கிளர்ச்சிக்காரர்களின் கூட்டமைப்பை பிரான்ஸ் அங்கீகரித்தது. பிரான்ஸின் அறிவிப்பு அண்மைக்காலங்களாக சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அமைப்பு ரீதியாகவும் படைவலிமை ரீதியாகவும் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து செய்யப்பட்டது. கிளர்ச்சிக்காரர்கள் அடித்து விட்டு ஓடும் நிலையில் இருந்து முன்னேறி சிரியப்படைகளிடமிருந்து தமது ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிரதேசங்களை நேரடி மோதல் மூலம் பாதுகாக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளனர்.
தேவை விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
18-11-2012இலன்று அலேப்பேயில் இருந்த சிரியப் படையில் 46வது படையணியை கிளர்ச்சிக்காரர்கள் தாக்கி அழித்தமை அவர்கள் மீது மேற்கு நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இத்தாக்குதலைப் பற்றி படைத்துறை நிபுணர் எலியல் ஹன்னா "tactical turning point that may lead to a strategic shift". கேந்திரோபாய மாற்றத்திற்கு வழிவகுக்கும் உத்திரீதியான திருப்பு முனை என்றார். இதில் பெருமளவு கனரகப் படைக்கலனகளையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து மார்ஜ் அல் சுல்த்தான் விமனத் தளத்தையும் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றினர். கிளர்ச்சிக்காரர்களின் அவசிய தேவை விமான எதிர்ப்பு ஏவுகணைகளாகும். ஆனால் இவை இசுலாமியத் தீவிரவாதிகளின் கைகளில் போய்ச் சேரும் என்ற அச்சத்தில் மேற்கு நாடுகள் இருக்கின்றன.
பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்கள்
சிரியப்படையினர் இணையத்தள தொடர்பாடல் மற்றும் பல தொடர்பாடல்களை மூடிவிட்டு கண்மூடித்தனமான தாக்குதல்களை பொது மக்களின் உயிரிழப்புக்களைப்பற்றிக் கரிசனை ஏதும் இல்லாமல் செய்வது வழக்கம் என மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன. சிரியப்படைகள் வசம் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் குண்டுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் சிரியா இணையத் தளத் தொடர்பாடல்களை மூடியததைத் தொடர்ந்து பல சிரிய அரச இணையத் தளங்கள் இனம் தெரியாதோரால் ஊடுருவப்பட்டு மூடக்கப்பட்டுவிட்டன. இதனால் சிரியாவின் பல வெளிநாட்டுத் தூதுவரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
உதவிக்கு டுவிட்டரும் கூகிளும்
சிரியர்கள் தாம் தெரிவிக்க விரும்பியவற்றை தொலை பேசிமூலம் கூகிளிற்கு அல்லது டுவிட்டருக்கு சொன்னால் அவை இணையத்தளங்களிலும் டுவிட்டரிலும் பதியக்கூடிய வசதிகளைச் கூகிளும் டுவிட்டரும் செய்துள்ளன. Speak2Tweet என்னும் இந்த முறைமையை கூகிள் ஆரம்பித்துள்ளது. எகிப்தில் ஹஸ்னி முபராக்கிற்கு எதிரான கிளர்ச்சியின் போது இணையத் தொடர்பாடல்கள் முடக்கப்பட்டமையைத் தொடர்ந்து கிளர்ச்சி மேலும் தீவிரமடைந்தது. வீடுகளில் இருந்து இணையத்தில் பலான படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆத்திரமடைந்து தெருவில் இறங்கினர் என நகச்சுவையாக சொன்னார்கள்.
அமெரிக்கா உருவாக்கிய கிளர்ச்சிக்காரர்களுக்கான இணையம் |
ஏற்கனவே தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் போது ஆட்சியாளர்கள் இணையத் தொடர்பாடல்களைத் துண்டித்தால் மாற்று முறைமையை அமெரிக்க உளவுத் துறை உருவாக்கியுள்ளது. கைப்பேசிகளையும் மடிக்கணனிகளையும் கொண்ட முறைமை இது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு பல தொடர்பாடல் கருவிகளை ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே வழங்கியுள்ளன. இணையத் தளத் தொடர்பாடல்கள் மூடப்பட்டுவிடும் என்று ஏற்கனவே அறிந்திருந்த அமெரிக்கா இரண்டாயிரம் செய்மதித் தொடர்பு முறைமைகளை ஏற்கனவே சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கியிருந்தது. இது ஒரு மடிக்கணனியையும் சிறு செய்மதித் தொடர்புக்கருவியும் ஐம்பது மீட்டர் நீள இணைப்பையும் கொண்டது. ஆனால் இவற்றின் மூலம் நீண்ட நேரம் ஸ்கைப்பில் உரையாட முடியவில்லை என சிரியக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவரான பெண் கூறியுள்ளார். (பெண்களுக்குப் போதாது தானே). இவை மூலம் கிளர்ச்சிக்காரர்கள் தங்களுக்குள் தொடர்பாடல்களை ஏற்படுத்தலாம். சிரியப் படைக்களின் நகர்வுகள் தொடர்ப்பாக பொது மக்களை எச்சரிக்கலாம் என அமெரிக்கா கருதிகிறது. ஆனால் 100MB அளவு போதாமல் இருக்கிறதாம்.
No comments:
Post a Comment