சரியும் உலகப் பொருளாதாரம் பெருகும், சீன படை வலிமை, எரியும் சிரியா, கொதிக்கும் ஈரான், போர் ஓயாத ஆப்கானிஸ்த்தான், நலிவடையும் உள்ளூர் பொருளாதார்ம், ஆகியவற்றின் மத்தியில் தன்னை உலகில் சிறந்த மக்களாட்சி நாடென்று சொல்லிக் கொள்ளுவதும், தன்னை உலகின் காவற்துறை அதிகாரியென கருதிக் கொள்வதுமான அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பராக் ஒபாமா வெற்றியீட்டியுள்ளார். என்றும் இல்லாத அளவு பெரும் பணச்செலவை வேட்பாளர்கள் செய்துள்ளனர்.
இனப்பிரச்சனை மையமாகக் கொண்ட வெற்றி
பராக் ஒபாமா ஆபிரிக்கர்களையும் ஹிஸ்பனிக்கர்களையும் (ஸ்பானிய வம்சா வழியினர்) பலமாகக் களமிறக்கி தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினார். இவர்களை வாக்களிக்காமல் பண்ண எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர் தமது கட்டுப்பாடில் உள்ள மாநிலங்களில் பல நடவடிக்கைகளை எடுத்தனர். இனி ஒபாமாவின் ஆட்சியில் குடிவரவுக் கொள்கையில் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியும் மக்களவையில் பெரும்பானமையைக் கொண்ட குடியரசுக் கட்சிக்கும் இடையில் பெரும் மோதல் இடம்பெறும்.குடியரசுக் கட்சியினர் அமெரிக்காவின் குடிமக்களின் இன வீதாசாரத்தைச் சரியாக எடை போடாமை அவர்களின் தோல்விக்குக் காரணம் எனப்படுகிறது.
அரச நிதிப் படுகுழி - Fiscal Cliff
ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரித்து தனது பாதிட்டின் துண்டு விழு தொகையைச் சரி செய்யப்போவதாக அறிவித்தார். இதனால் மக்களவை அரச செலவீனத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றி ஒபாமா நிர்வாகத்தை பெரும் அரச நிதி நெருக்கடிக்குள் தள்ளலாம். அமெரிக்காவில் அரச செலவீனங்களைக் குறைத்து வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்னும் கொள்கையுடைய பழமைவாதிகள் தம் கொள்கைகளை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தத் பழமைவாதிகளுக்கு அரசு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவது பிடிக்காது. ஆனால் ஒபாமா கிற்ஸ்லர், ஜெனரம் மோட்டெர்ஸ் ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுவதில் இருந்து காப்பாற்றினார். இது அவரின் தேர்தல் வெற்றிக்கும் உதவியது. குறிப்பாக தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றான ஒஹையோ மாநிலத்தில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த வெள்ளை இனத்தவர்களும் ஒபாமாவை இம்மாநிலத்தில் ஆதரித்தனர்.
அமெரிக்காவின் எதிரிகளுக்கு மகிழ்ச்சி
அமெரிக்காவின் எதிரிகளாகக் கருதப்படும் ஈரானும் சீனாவும் பராக் ஒபாமாவின் வெற்றியில் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளன. குடியரசுக் கட்சியின் ரும்னி ஆட்சிக்கு வந்திருந்தால் அவர் இவர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக அமெரிக்க-சீன நாணயப் போர் ஆரம்பித்திருக்கலாம்.
மஹிந்தவிற்கு நிம்மதியில்லை
குடியரசுக் கட்சியின் நிர்வாகம் வாஷிங்டனில் அமைந்து அங்கு புதிய-பழமைவாதிகள் (neoconservatives) ஆதிக்கம் செலுத்தினால் மஹிந்த ராஜபக்சவிற்குச் சாதகமான நிலை ஏற்பட்டிருக்கலாம். புதிய-தாராண்மைவாதிகள் ஒரு நாட்டின் அரசு உலகமயமாதலுக்கு ஒத்திசைவாக இருக்கும் வரை அவர்கள் எப்படி ஆட்சி நடாத்தினாலும் பரவாயில்லை என்று கருதுபவர்கள்.
பாவம் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ
இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹூ பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்படமாட்டார் என எதிர்பார்த்து பிழையான குதிரையில் தனது பணத்தைக் கட்டியவர் போலாகிவிட்டார். ஏற்கனவே ஒபாமாவின் ஈரான் தொடர்பான கொள்கைக்காக அவருடன் பகிரங்கமாகக் கருத்து மோதலிலும் நெத்தன்யாஹூ ஈடுபட்டிருந்தார். இதனால் அவர் எதிர்க்கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார். 2013ஜனவரியில் இஸ்ரேலின் பாராளமன்றத் தேர்தலில் அவருக்குப்பாதிப்பு ஏற்படலாம்.
சிரியாவின் அசாத்திற்கு நிம்மதியில்லை
தேர்தல் முடியும் வரை சிரியா தொடர்ப்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதை பராக் ஒபாமா தள்ளி வைத்திருந்தார். இனி சிரியாவில் அமெரிக்காவின் மோசமான தலையீட்டை எதிர்பார்க்கலாம்.
சரிந்த சந்தை
ஒபாமாவின் வெற்றியை அடுத்து அமெரிக்கப் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியக் கண்டது. ஒபாமாவின் வரி அதிகரிப்பு செல்வந்தர்களுக்குச் சாதகமானதல்ல. ஒபாமாவின் வெற்றிக்கு தொழிற் சங்க அமைப்புக்கள் வரவேற்புத் தெரிவித்தன. அரச நிதிப் படுகுழி - Fiscal Cliff ஐ எதிர்ப்பார்த்து முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் நீண்ட கால அடிப்படையில் ஒபாமாவின் பொருளாதாரக் கொள்கை வேலை வாய்ப்புக்களை அதிகரித்து பங்கு விலைகளை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாதீட்டுத் துண்டுவிழும் தொகை மிகவும் பாரியதானதாக இருப்பதால் யார் வெற்றி பெற்றாலும் முதலீட்டாளர்கள் சிரமத்தைச் சந்தித்தே ஆகவேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவின் தற்போதைய பாதீட்டுத் துண்டுவிழு தொகை ஒரு ரில்லியன் டாலர்களுக்கு மேல்.
பாவம் டாலர்! மின்னும் தங்கம்
ஒபாமாவின் வெற்றி அமெரிக்க நாணயமான டாலரைப் பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. quantitative easing எனப்படும் பணப்புழக்க அதிகரிப்பு ஒபாமாவின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசேர்வின் தலைவரான Ben Bernankeரும் இதே கொள்கை கொண்டவர். குடியரசுக் கட்சி வேட்பாளர் ரும்னி வெற்றி பெற்றிருந்தால் இவரது பதவி பறி போயிருந்திருக்கும். டாலர் பலவீனமடைய தங்கத்தின் விலை அதிகரிக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment