Wednesday, 3 October 2012

மாறும் ஆறு வித்தியாசங்கள்


ஆறில் குடும்பம் இனிக்கும்
உலகம் அச்சுறுத்தும்
பன்னிரண்டில் கல்வி கசக்கும்
விளையாட்டு இனிக்கும்
பதினெட்டில் காதல் இனிக்கும்
குடும்பம் கசக்கும்
இருபத்து நான்கில் வேலை கசக்கும்
மனைவி தேவைப்படும்
முப்பதில் குழந்தை இன்பம் தரும்
பணம் தட்டுப்பாடாகும்
நாற்பத்திரெண்டில் அறிவு முதிரும்
அனுபவம் தேவைப்படும்
நாற்பத்தெட்டில் அனுபவம் பயந்தரும்
குடும்பம் கசக்கும்
ஐம்பத்து நான்கில் பிள்ளைகள் தொல்லை
வேலை பெரும் சுமை
அறுபதில் பேரர்கள் பேரின்பம்
மனைவியின் துணை தேவை
அறுபத்தாறில் வாழ்வின் இரைமீட்டல்
நிறைவேறாக் கனவுகளின் துயர்
எழுபத்திரெண்டில் உடல் சுமையாகும்
உள்ளம் கலங்கும்
எழுபத்தெட்டில் உலகம் எமை வெறுக்கும்
உறவுகள் தேவைப்படும்
எண்பத்து நான்கில் உலகை நாம் வெறுப்போம்
பிரியப் போகும் துயர் சூழும்

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் அழகான கவிதை வரிகள்...நிஜமும் கூட...பகிர்வுக்கு மிகவும் நன்றி....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பி.அமல்ராஜ் said...

அருமையான கவிதை... வாழ்வியல் உண்மைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஒவ்வொரு பருவத்திலும்..

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...