Thursday, 6 September 2012

கீழ் சாதி மீனவன் இந்தியனல்ல: ஊளையிடுகிறதா ஆர் எஸ் வாசன் என்னும் நரி.?

1980களின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் சிங்களப்பகுதியில் உள்ள கதிர்காமத்தை தனது குடும்பத்துடன் தரிசிக்கச் சென்ற ஒரு தமிழர் முகச் சவரம் செய்வதற்காக சலூன் சென்றபோது அங்கு அவர் சிங்களவர்களால் துடிதுடிக்கக் கத்தியால் குத்தப்பட்டுக் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும்எந்தப் பார்ப்பன ஊடகமும் அதைக் கண்டிக்கவும் இல்லை. இந்திய அரசும் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆர் எஸ் வாசன்

ஊளையிடும் நரிக்கூட்டம்
அன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க இலங்கையில் இருந்து வந்த பக்தர்களை திருச்சியில் வைத்துத் தாக்கியதைத் தொடர்ந்து சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிகள் ஊளையிடத் தொடங்கி விட்டன. சிங்கள இனக் கொலையாளிகளினதும் அவர்களது பங்காளிகளான ஆரியப் பேரினவாதிகளினதும் பேச்சாளர்களாக சோ, ராம், சுப்பிரமணிய சுவாமி போன்றோருடன் கேர்ணல் ஹரிஹரன் என்னும் இந்தியப் படைத்துறையின் முன்னாள் உளவாளியும் இணைந்து கொண்டு ஆங்கிலத்தில் அவ்வப்போது ஊளையிட்டு வருகிறார். இவர்கள் போதாது என்று ஆர் எஸ் வாசன் என்றொரு நரியும் இவர்களோடு இணைந்து ஊளையிடத் தொடங்கியுள்ளது. இவர் அன்னை வேளாங்கன்னியைத் தரிசிக்க வந்தவர்களைத் தாக்கியதால் இந்தியாவிற்கு பெரும் கேடு விளையப்போவதாக ஊதிப் பெரிது படுத்துகிறார். இந்த வாசன் அமைதிப்படை என்ற பெயரில் வந்த கொலைவெறி நாய்ப்படைகளின் ரோந்துக் கடற்படப் பிரிவிற்குப் பொறுப்பாய் இருந்தவர். இவர் தமிழ்த்தேசியத்தை வெறுப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல.

அதிதி தேவோ பவ....தமிழன் அழிந்து போகட்டும் பவ
ஆர் எஸ் வாசன் "இலங்கை இந்திய உறவும் தமிழ் நாட்டுக் காரணியும்: மரத்திற்காகக் காட்டைத் தொலைத்தல்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களாக் நடப்பவை ஒரு நல்லவற்றிற்கான அறிகுறி அல்ல என்கிரார் ஆர் எஸ் வாசன். இலங்கைப் படை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்ச்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தமிழ்நாடு ஒரு நல்ல ஒளியில் இல்லை என்பதைக் காட்டுகிறது என்கிறார். ஆர் எஸ் வாசன் "அதிதி தேவோ பவ" என்னும் சமஸ்கிருத வாசகத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்தியா தனது விருந்தாளி கடவுளுக்குச் சமன் என்ற விருந்தோம்பும் பண்பைக் கைவிடக்கூடாதாம். இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி பல நாடுகளுக்கு ஓடினர். சில நாடுகளின் அவர்கள் மாநகர சபை முதல்வராகக் கூட ஆகி இருகின்றனர். ஆனால் இந்தியாவிற்கு போன இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன? இந்தியாவின் பண்புகள் தமிழனுக்குச் செல்லு படியாகாதா?

விருந்தோம்பும் பண்பு சிங்களவனுக்கு மட்டும்தானா?
ஒரு வயோதிபப் பெண் மருத்துவச் சேவை பெற முறைப்படி இந்தியாவிற்குள் நுழையும் அனுமதி பெற்று வந்த போது அவரைப் பல மணி நேரம் வேண்டுமென்று காக்க வைத்துப் பின்னர் திருப்பி அனுப்பிய போது இந்தியாவின் "அதிதி தேவோ பவ" என்னும் தத்துவம் என்கே போயிருந்தது? இந்த வாசன் என்னும் நரிதான் எங்கே இருந்தது?

 இது பரந்தாமனின் நியாயம்
பாரதப் போரில் அபிமன்யூவை சக்கர வியூகத்துக்குள் வைத்து அநியாயமாகக் கொன்ற பின்னர் பரமாத்மா கண்ணன் இனி எமது தரப்பில் இருந்து போர்தர்மத்தை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லவில்லையா? முள்ளிவாய்க்காலில் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் தடைசெய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளால் கொல்லப்பட்ட பின்னர் தமிழர்களிடம் இருந்து மட்டும் நியாயத்தை எதிர்ப்பார்க்கலாமா?

மீனவன் கீழ் சாதிக்காரன். அவன் இந்தியன் அல்ல
ஆர் எஸ் வாசன் இந்திய மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் செல்வதால் கொல்லப்படுகிறார்களாம். தாக்கப்படுகிறார்களாம். அவர் இலங்கையை இந்தியாவின் நட்புறவு நாடு என்கிறார். ஒரு நட்புறவு நாட்டுக் குடிமகன் தனது நாட்டு எல்லைக்குள் வந்தால் எந்த ஒரு நாடும் அவன் மீது தாக்குதல் நடாத்த மாட்டாது. கொல்ல மாட்டாது. ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்தாது.  தமிழனை சிங்களவன் மட்டுமா தாக்குகிறான்? மலையாளி தாக்குகிறான். கன்னடத்தான் தாக்குகிறான். மும்பாய்க்காரன் தக்குகிறான்.  மீனவர்கள் தாழ்ந்த சாதிக் காரர்கள் என்பதால் தான் இப்படி இவர் ஊளையிடுகிறார். ஒரு பார்ப்பனனை சிங்களவன் தாக்கினால் இப்படிச் சொல்வார்களா? ஆர் எஸ் வாசன் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தாக்கப்படுகிறார்கள் என்று எழுதிய சில மணித்தியாலங்களுக்குள் தமிழக மீனவர்கள் கடுமையாக சிங்களப்படையினரால் தாக்க்ப்பட்டுள்ளனர்.  எல்லை தாண்டியிருந்தால் கைது செய்து நீதியின் முன்னர் நிறுத்த வேண்டும். தாக்கப்படுவதோ அல்லது அவர்களது உபகரணங்களை நிர்மூலமாக்குவதோ நியாயம் அல்ல. ஆர் எஸ் வாசன் எழுதிய சிலமணித்தியாலங்களுக்குள் இத்தாக்குதல் நடந்த படியால் ஆர் எஸ் வாசன் கும்பல் தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கிறதா?

மரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது யார்?
தமிழ்நாட்டினர் மஹிந்த என்ற கொடுங்கோலனுக்காக சிங்களவரக்ளைப் பகைப்பது ஒரு மரத்திற்காகக் காட்டைத் தொலைப்பது போன்றது என்கிறார் ஆர் எஸ் வாசன். ஒரு கோடி சிங்களவர்களின் உறவிற்காக இந்திய அரசுதான் ஏழு கோடி தமிழர்களைப் பகைக்கிறது. சிங்களவர்கள் என்ற நச்சு மரத்திற்காக தமிழர்கள் என்னும் சந்தனக்காட்டை இந்தியா இழக்கப்போகிறது.

4 comments:

Anonymous said...

தலைவரே
நம்ம தாத்தா கிழ கருணாவும் தான் அப்படி சொன்னாரு. மேலும் மீனவர்கள் பேராசை படக்கூடாதுன்னு வேற சொன்னாரு

selvaraj said...

this guy
mental

Unknown said...

நினைக்கவே மனசு கொதிக்குது ..... சின்னதா ... ஒரு தட்டு தட்டுனதற்கே ..... எத்தனைபேர் குதிக்கிறானுங்க .... அங்க லட்சக்கணக்குல செத்து விழுந்தப்ப ... இவங்க எங்க போனாங்க ... கேட்டா அவங்க உள்நாட்டு பிரச்சினை .... தீவிரவாத பிரச்சினை அப்படி இப்படிபாங்க ... இப்ப நம்ம இந்திய மீனவர்களையே தாக்கும் போது ... எல்லை கடந்து போககூடாது ன்னு சொல்லறானுங்க .... இப்படி சொல்லற எல்லா பன்னாடைகளும் எங்கிருந்தோ இந்தியா அதுவும் தமிழ் நாட்டிற்குள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிழைக்க வந்ததுகள்... முதல்ல அதுங்கள துரத்தனும்

Anonymous said...

எம் நேசத்தலைவர் இல்லாத குறை இப்போது ஒவ்வோரு தமிழனும் அனுபவிக்கின்றான். அவர்கள் ஆரியர்கள் என்னவேணாலும் பண்ணலாம் ஆனால் நாம் கேடு கெட்ட தமிழர் அல்லவா. எது நடந்தாலும் வாய் பொத்தி மெளனமாயிருக்க வேண்டும் என்று எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். நடந்தது ஒரு முன்னோட்டம் என்பதனை மட்டும் சிங்களம் புரிந்து கொள்ளட்டும். எதிர்ப்பவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...