Saturday, 25 August 2012

சீபா சீபா என்னும் இந்தியாவும் சீ போ சீ போ என்னும் இலங்கையும்.

வேட்டியணிந்த ஹிட்லரின் போருக்கு சேலையணிந்த முசோலினி உதவினாரா அல்லது சேலையணிந்த முசோலினியின் போரை வேட்டியணிந்த ஹிடலர் முடித்தாரா என்ற கேள்வி ஒரு பட்டி மன்ற விவாதத்துக்குரியது.

கூலி கிடைக்காத சில்லறைக் கைக்கூலி.
கூலியை எதிர்பார்த்து வேலை செய்தவனுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இன ஒழிப்புப் போரில் இலங்கைக்கு உதவி செய்த நாடுகள் இருபதுக்கு மேல். இதில் முக்கிய பங்கு வகித்தவை இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும். இதில் சீனா படைக்கலன்களையும் பணத்தையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. போரின் போது இலங்கைப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை நிவர்தி செய்ய தனது இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட படையினரை சீனா பின்கதவால் இலங்கைக்கு அனுப்பவில்லை. சீனா விடுதலைப் புலிகளின் கப்பல்களை செய்மதி மூலம் கண்டறியவோ அல்லது தாக்கியழிக்கவோ இல்லை. சீனா தமிழர்களுக்கு எதிராக நேரடியாக ஒரு நாளும் செயற்பட்டதுமில்லை. தமிழர்கள் என்பவர்கள் சூத்திரர்கள் அவர்கள் ஒரு நாளும் ஆளக்கூடாது என்பது சீனக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுமல்ல. ஆனால் இவ்வளவும் செய்த சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலிக்கு உரிய கூலி இன்னும் கிடைக்க வில்லை.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் தடுக்க முடியாது.
2012-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிப் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் "இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கான சவால்கள்" என்னும் தலைப்பில் உரையாற்றும் போது இலங்கை போருக்குப் பின்னர் போதிய அளவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சமாதானத்தை இழப்பார்கள் என்றார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணத்தை விளக்குகையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் இந்தியா கூட்டணி அரசின் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் இந்தியாவின் வாக்கு ஒரு பெறுமதி அடிப்படையிலான கணக்கிடப்பட்டு அளிக்கப்பட்ட வாக்கு என்றார்.
இலங்கையில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டதா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் பிரகாஷ் மேனன் "அதற்குக் காலம்தான் பதில் கூறும்" என்றார். இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும் விதம் அமெரிக்காவிற்குத் திருப்தி அளிக்காததால் அமெரிக்கா தனது கையில் இலங்கை விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு இந்தியா இலங்கையில் சீன ஆதிக்கத்தை ஒழிக்கும் தன் தந்திரோபாய நடவைக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்க நிர்பந்தித்தது. ஆனாலும் இலங்கையின் சில்லறைக் கூலிகள் போற் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்தனர்.
pictur courtesey HCI Colombo
 இந்தியாவின் அயோக்கியத் தனம்
இந்தியாவின் நேர்மையற்ற ஆட்சியாளர்களும் குடும்ப ஆதிக்கமும் சாதி வெறிபிடித்த தென்மண்டலப் பார்ப்பனர்களுமே இலங்கையில் இந்தியா விட்ட தவறுகளுக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கும் காரணம். அவர்கள் இந்தியா உதவாவிட்டால் சீனா இலங்கைக்கு உதவும் என்ற பொய்யையும் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்றால் அது இந்தியாவில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற பொய்யையும் சொல்லி சிங்களவர்களுக்கு உதவி செய்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தனர்.
Courtesey: HCI India

ச்

சீபா வேண்டாம் சீ போ என்ற பின்னர் இந்தியா மாறுமா?
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை சிபா வேண்டாம் என இலங்கை சொன்ன பின்னர் மாறுமா? 2008இல் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது போர் முடிந்த பின்னர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவோம் எனக் கூறிய இந்தியாவை வைத்துக் காரியத்தைச் சாதித்த பின்னர் ஏமாற்றியது இந்தியாவை ஆத்திரம் கொள்ளச் செய்யுமா?  இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்ளும் தடசணை இனியும் வேலை செய்யுமா? இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களுக்கு நாம் உதவாவிடில் சினா உதவிவிடும் என்னும் பொய்ப்பூச்சாண்டி காட்டி தமிழர்களைக் கொன்று குவிக்க இவர்கள் உதவினார்கள். இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையாக பன்னாட்டு அரங்கில் செயற்பட்டால் அது சீனா பக்கம் சார்ந்து விடும் என்று இன்னொரு பொய்ப்பூச்சாண்டியைக் காட்டி அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டைக் குறைக்கிறார்கள். போதாக் குறைக்கு ஒரு தமிழின விரோதியான நிருபாமா ராவ் வாஷிங்கடனில் இந்தியத் தூதுவராக இருக்கிறார். இலங்கையின் சில்லறைக் கைக்கூலிகள் போல் செயற்படுபவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் வரை இலங்கை தொடர்பாக இந்தியாவின் கொள்கை மாறாது. எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.

2 comments:

Robert said...

சிங்களர்களுக்கு எதிராக செயல் பட கொஞ்சம் மானம், சூடு, சொரணை எல்லாம் வேண்டும். இங்கதான் எல்லாத்தையும் கொண்டு போய் இத்தாலி சனியிடம் அடகு வைத்தாயிற்றே!! மேனன்,நாயர், ராவ் இவர்களை வைத்து கொண்டு என்ன செய்வது?
இயலாமையினால் கோபப்படுவதை தவிர???

Robert said...
This comment has been removed by the author.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...