பக்சராஜவின் நிறைவேறாத ஒரு கனவு இலண்டனில் ஒரு நிகழ்வில் தான் ஒரு முக்கிய ஆளாக பங்குபற்றி உரையாற்ற வேண்டும் என்பதே. இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்து குந்தியா நாட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இத்தாலிச் சனியாளிடம் தனது ஆசையை நிறைவேற்றும் படி பணித்தார். காமன் கூத்து நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கு என்னை செங்கம்பளம் விரித்து வரவேற்றதைப் போல் ஒலிம்பிக் போட்டியிலும் எனக்கு செய்ய உடன் ஏற்பாடு செய் அல்லது எனது போர்க்குற்றங்களில் உனக்கு இருக்கும் பங்கை அம்பலப் படுத்துவேன் என்று மிரட்டினார் பக்சராஜ.
பக்சராஜவின் மிரட்டலுக்குப் பயந்த சனியாள் மோகன் மன்ஷிட்டை(Mohan Manshit) அழைத்து இந்தப் பக்சராஜவுடன் ஒரே ரோதனையாக இருக்கிறது. தொட்டதுக்கெல்லாம போர்க்குற்றத்தில் எனக்கு இருக்கும் பங்கை அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டுகிறான் அவன் ஒலிம்பிக் போட்டிக்குப் போகவேண்டும் அங்கு தனக்கு செங்கம்பள வரவேற்று வேண்டும் என்று மிரட்டுகிறான் என்றாள் தலையில் அடித்துக் கொண்டு. அதற்கு மோகன் மன்ஷிட் ஐய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்யோ ஒலிம்பிக் என்ன புதுகில்லியிலா நடக்குது. நாங்கள் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்ய. அது செய்ய முடியாது, இலண்டனில் ஒலிம்பிக் நடக்கும் இடத்துக்கு அண்மையாக ஓரிடத்தில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டுத் தொடர்பாக ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து அதை பக்சராஜ தொடக்கி வைத்து உரை நிகழ்த்தவும் செங்கம்பள வரவேற்புச் செய்யவும் ஏற்பாடு செய்யலாம் என்றார். அந்த ஏற்பாடு பற்றி பக்சராஜவிற்கு அறிவிக்க அவர் மிகவும் மகிழ்ந்தார்.
தான் இலண்டனில் சிங்களம், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜேர்மன், லத்தின், இந்தி, குஜராத்தி, மலையாளம், உருது, சீனம் ஆகிய மொழிகளில் காமன் கூத்து நாடுகள் சபையின் விளையாட்டு மாநாட்டில் உரையாற்ற வேண்டும். அது மிகச் சிறப்பாக அமைய வேண்டும். நல்ல பயந்தரக்கூடிய வகையில் ஒத்திகை முதல் செய்து பார்க்க வேண்டும். அந்த ஒத்திகைக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கடா என்று தனது உதவியாளர்களிடம் பணித்தார். இலண்டன் மாநாட்டு மண்டபம் போல் ஒன்றை உருவாக்கி பக்சராஜவை அழைத்து அவரை மேடையில் ஏற்றி மேடைக்கு முன்னர் அவர் பேச வேண்டிய எழுத்துக்கள் இருக்கும் அதைப்பார்த்து நீங்கள் வாசிக்க வேண்டியதுதான் என்றனர். பக்சராஜ மேடையில் ஏறு தனது வாசிப்பைத் தொடங்கினார். ஓ.....ஓ....ஓ......ஓ.....ஓ,,,,,என்றார். அப்போது அவரது உதவியாளர் ஓடிவந்து என்ன வாசிக்கிறீர்கள் மாத்தையா என்றார். அவர் தன் முன் உள்ள ஐந்து வட்டங்களைக் காட்டினார். அதற்கு உதவியாளர் அது நீங்கள் வாசிக்க வேண்டிய உரை அல்ல. அது ஐந்து வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் சின்னம். அதற்குக் கீழ் ஓடிக் கொண்டிருப்பதுதான் நீங்கள் வாசிக்க வேண்டிய வசனம் என்றார். அப்போது அங்கு வந்த தம்பி ஓட்டைவாய அண்ணே நீங்கள் இலண்டனுக்குப் போவது அங்குள்ள தமிழர்களுக்குத் தெரிந்து விட்டது பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்றாங்கள் என்றார். அதற்கு பக்சராஜ ஆர்ப்பாட்டம் தானே செய்து விட்டுப் போகட்டும் அவங்களால் எனக்குக் கிட்டவும் வர முடியாது. அவங்கள் எப்பவும் ஆர்ப்பாட்டம்தான் செய்வாங்க வன்முறையாக எதுவும் செய்ய மாட்டாங்கள் என்றார். அதற்கு தம்பி ஓட்டைவாய அதுமட்டுமல்ல நீங்கள் பேசவிருக்கும் மாநாட்டில் பங்கு பற்ற ஐம்பது தமிழர்கள் அனுமதிச் சீட்டும் வாங்கிவிட்டாங்கள். நீங்கள் உரையாற்றும் போது தண்ணீர் குடிக்க வைத்திருக்கும் பாத்திரங்களுக்குள் சிறிநீர் கழித்து வைத்திருந்து உங்கள் மேல் வீசப் போகிறாங்களாம். போதாக்குறைக்கு நீங்க பேசவேண்டிய வசனத்துக்கும் ஒலிம்பிக் சின்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகிறீர்கள் இலண்டன் போய் உங்கள் மானத்தை கப்பல் ஏற்ற வேண்டாம். இலண்டன் பயணத்தை இரத்துச் செய்யவும் என்றார். பக்சராஜவும் தன் இலண்டன் பயணத்தைக் கைவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment