Friday, 29 June 2012

முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த காளான்கள்

மூடப்பட்ட வரலாற்றுப் புத்தகத்தின்
பக்கங்களல்ல எம் போராட்டம்
வரலாறு படைக்கும் போராட்டம்
எம் போராட்டம்
ஓயாத கொலைகளுக்கும்
அஞ்சி ஓயாத அலை
எம்போராட்டம்

முள்ளி வாய்க்காலின் பின்
முளைத்திருக்கின்றன
பல காளான்கள்
எம்மை மீண்டும்
பழமைக்குள் கொண்டு செல்ல

இந்தியா பிராந்திய வல்லரசு
அதை அனுசரித்துப் போக வேண்டும்
என எம்மை மீண்டும்
87இல் புளித்துப் போன்
பழைய வட்டத்திற்குள்
எம்மை இழுக்கின்றன
சில காளான்கள்
படைக்கலனை நீ ஒப்படை
உன் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம்
என்னும் கனவான் ஒப்பந்தத்தை
காற்றிலே பறக்க விட்ட
அயோக்கிய இந்தியா
நல்லரசும் ஆகாது
வல்லரசும் ஆகாது
இந்திய  வட்டத்தை விட்டுப்
புது திட்டத்தில்  இணைவோம்



முள்ளி வாய்க்காலின் பின் முளைத்த
இன்னும் சில காளான்கள்
புதிய  திசை காட்டுகிறோம் எனக் கூறி
சிங்களத் தொழிலாளரோடு
இணைந்து  போராடுங்கள் என்கின்றன
இதுவும் பழைய வட்டம்தான்
தோழர்கள் வி பொன்னம்பலமும்
எஸ் சண்முகதாசனும்
சுற்றிச்  சென்று சறுக்கி விழுந்த வட்டம்
தோழர் விக்கிரமபாகு பின்னால்
எத்தனை  சிங்களவர்கள்
அறப் போர் செய்தவர் மேல்
கழிவுத் திரவம் பாய்ச்சியதை
எதிர்த்தது எத்தனை
சிங்களத் தொழிலாளர்கள்
பழைய வட்டம் புதிய திசைகள்
என்னும் பெயரில் வேண்டாம்
உருப்படியான திட்டத்தில்
இறங்கிடுவோம்

ஜெனிவாத் தீர்மானமும்
இலண்டனில் மஹிந்தரை விரட்டலும்
பட்டினியில் கதறும் குழந்தை முன்
ஆட்டிடும் கிலுகிலுப்பைகள்
சுதந்திரப் பட்டினியை தீர்க்க
பழைய வட்டங்களை விட்டு
புதுத் திட்டங்களில் இணைந்திடுவோம்

2 comments:

Harini Resh said...

//ஜெனிவாத் தீர்மானமும்
இலண்டனில் மஹிந்தரை விரட்டலும்
பட்டினியில் கதறும் குழந்தை முன்
ஆட்டிடும் கிலுகிலுப்பைகள்//
Absoulutly correct

Anonymous said...

முள்ளி வாய்க்காலின் பின்
முளைத்திருக்கின்றன
பல காளான்கள்
எம்மை மீண்டும்
பழமைக்குள் கொண்டு செல்ல.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...