Wednesday, 6 June 2012

தமிழர்கள் பிரச்சனைகளின் மூலம் தேடினால் அது பூனூலில் போய் முடியும்

சோழப் பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்ந்த பிரெஞ்சு வரலாற்று நிபுணர்கள் சோழர்கள் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து கிடைத்த செல்வம் பெரும் மூலதனமாகத் திரளாமல் அவற்றை பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி கோவில்கள் கட்டுதல் யாகங்கள் செய்தல் போன்றவறில் வீணாக்கினர்கள் என்கிறார்கள்.

இன்றைய தமிழர்களின் அடிமைகளாக தெலுங்கர்களாலும் மலையாளிகளாலும் கன்னடர்களாலும் ஆளப்படுவதற்குக் காரணம் அவர்கள் சாதி அடிப்படியில் பிளவு பட்டு நிற்பதே. இந்த சாதியம் எப்படித் தமிழர்களிடை வந்தது என்று பார்த்தால் அதுவும் பூனூலில்தான் முடியும்.

முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தாலும் அதிலும் பல பூனூல்களைக் காணலாம். ராஜபக்சவின் கையாளாக இந்து ராம். ராஜபக்சவிற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய சோ. ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணிய சுவாமி. ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்று எத்தனை இந்தியக் கோவில்களில் பூசைகள் யாகங்கள் நடந்தன?

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக்த்தில் உரையாற்ற வந்த ராஜபக்சவை பலத்த போராட்டத்தின் பின்னர் தமிழர்கள் விரட்டியடித்த பின்னர் ராஜபக்ச தமிழர்கள் வாழும் நாட்டில் காலடி எடுத்து வைக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு ராஜபக்ச அழைக்கப்பட்டது எப்படி? பிரித்தானிய அரசியின் கீழ் பிரித்தானிய அரசும் பொதுநலவாய நாடுகளும் இருக்கின்றன. ராஜபக்சவிற்கான அழைப்பை பிரித்தானிய அரசியும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசு மஹிந்த ராஜபக்ச அரசியின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. அவர் வருவதால் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கொதிப்படைவார்கள் என்பதை பிரித்தானிய அரசு அறிந்திருந்தது.  பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மட்டும் மஹிந்த ராஜபக்ச அரசியின் வைர விழாக் கொண்டாட்டத்தில் ராஜபக்ச வரவேண்டும் என அடம்பிடித்தது. இதனால் மஹிந்த ராஜபக்சவிற்கான அழைப்பை அனுப்புவதில் சில நாட்கள் ஒரு இழுபறி நடந்தது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் அடுத்த ஆண்டு இலங்கையில் அதன் மாநாடு நடக்கவிருப்பதால் மஹிந்தவிற்கு அழைப்பு அனுப்பாவிடில் பொதுநலவாய நாடுகளிடை பெரும் சிக்கலை அது உருவாக்கும் என்று அடம் பிடித்தது. இறுதில் பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மஹிந்தவிற்கு அழைப்பை அனுப்பியது. அத்துடன் நிற்கவில்லை அது. ஒரு பொருளாதார மாநாட்டையும் ஜூன் 6-ம் திகதி கூட்டி அதில் ராஜபக்சவைக் கலந்து உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தது.

மஹிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு ஏன் அழைக்கப்பட்டார் என்று ஆராய்ந்தால் அங்கும் ஒரு பூனூல் தான் தட்டுப்படுகிறது. பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலராக இருப்பவர் கமலேஷ் ஸர்மா.

பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு மஹிந்தவின் வருகையை பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவரின் வருகை தொடர்ப்பான தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. முதலில் பிரித்தானியப் பிரதம மந்திரியின் பணிமனை முன்பும் பின்னர் ஹீத்துரூ விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் அரசியின் வைரவிழாவைக் குழப்ப தமிழர்கள் விரும்பவில்லை. இரு ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் ஒழுங்கு செய்யவில்லை. ஜூன் 5-ம் திகதியுடன் அரசியின் வைரவிழாக் கொண்டாடங்கள் நிறைவு பெற்றன. ஜூன் 6-ம் திகதி பொது நலவாய நாடுகளின் பணிமனை ஒழுங்கு செய்த பொருளாதர மாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பெருமளவில் ஒழுங்கு செய்தனர். இலண்டனுக்கு வெளியிலும் வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் வர ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஐரோப்பாவில் இருந்தும் பெருமளவு மக்கள் இலண்டன் வர ஏற்பாடு செய்யப்பட்டது. சிலர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும் கனடாவிருந்தும் வர ஏற்பாடுகளைச் செய்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்பதை உணர்ந்த ஸ்கொட்லண்ட்யார்ட் பாதுகாப்பு நிலைகளில் உள்ள சிரமங்களை பொது நலவாய நாடுகளின் பணிமனைக்கு எடுத்துக் கூறியது. இதனால் ஜூன் மாலை 5-ம் திகதி மாலை பொது நலவாய நாடுகளின் பணிமனை மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த காலை நிகழ்ச்சிகள் யாவும் தவிர்க்க முடியாத் காரணத்தால் இரத்துச் செய்வதாக ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்தது. அதன் நிகழ்ச்சி நிரலை திருத்தி அமைத்தி வெளிவிட்டது. அதில் உள்ள பங்கு பற்றுவர்களின் பெயர்களில் மஹிந்த ராஜபக்சவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டபடி நடக்கும் என்றனர்.

1 comment:

Anonymous said...

பிணம் தின்னி நாய் இனி எந்த தமிழர் வாழும் மண்ணிலும் காலடி எடுத்து வைக்க அஞ்சவேண்டும். எம் மக்கள் ஏன் வீதியில் இறங்கி இத்தனை கடுமையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதனை உலக நாடுகள் உணர வேண்டும். கொலைவெறியருக்கு அது இந்திய கொலைவெறியருக்கும் சேர்த்து தண்டனை பெற உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும். புலம் பெயர் உறவுகளே உங்கள் போராட்டங்களில் பங்கு பெற முடியாத தூரத்திலிருப்பினும் எம் எண்ணங்கள் உங்களுடனே. நன்றி உறவுகளே. உங்களால் எம் அழுத உறவின் கண்கள் இனியாவது சிரக்கட்டும். மனம் அமைதி பெறட்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...