Thursday, 12 April 2012

ஆழிப்பேரலை(சுனாமி) ஏன் உருவாகவில்லை?

நேற்று (11-04-2012) நடந்த பூமி அதிர்வு ஏன் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைய உருவாக்கவில்லை என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு 9.1 ரிச்சர் அளவு கோலில் நிகழ்ந்த பூமி அதிர்வு 230,000 மக்களைப் பலி கொண்டது. அதில் இந்தோனெசியாவின் ஆசே மாகாணத்தில் மட்டும் 170,000 கொல்லப்பட்டனர்.

 2004இல் நடந்த அதிர்வு கடலடியின் கீழ் 14 மைல் ஆழத்தில் நிகழ்ந்தது. 2012 இல் 10 மைல் ஆழத்தில் நடந்தது. 2012 அதிர்வில் எவரும் கொல்லப்பட்டதாகத் தகவல் இதுவரை இல்லை. ஆனால் 2012 அதிர்வு பல நாடுகளில் உணரப்பட்டது.

நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.38 இற்கு இந்தோனொசியாவில் நிகழ்ந்த பூமி அதிர்வு 2004இல் நிகழ்ந்த பூமி அதிர்விலும் வித்தியாசமானது.

நிகழ்ந்த இடம் வித்தியாசமானது
2004-ம் ஆண்டு நிகந்த பூமி அதிர்வு subduction zoneஇல் நிகழ்ந்தது. subduction zone என்பது ஒரு பூமித் தகட்டின்(tectonic plate) ஓரம் இன்னொரு பூமித் தகட்டின் ஓரத்தின் கீழ் இருந்து அழுத்தம் கொடுக்கும் பிராந்தியம் ஆகும். 2004 அதிர்வு நடந்தஹ் subduction zoneஇன் பரப்பளவு அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்திற்கு ஈடானது. கடல் நீருக்கு அடியில் கீழ்த் தகடு மேலுள்ள தகட்டை மேல் நோக்கித் தட்டும் போது ஏற்படும் அதிர்வில் கடல் நீர் பெரும் அளவில் மேல் நோக்கித் தள்ளப்படும். இப்படி மேல் நோக்கித் தள்ளப்படும் நீர் கடல் மேற்பரப்பில் பாரிய அலையை உருவாக்கும். இவ் அலை சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையாகும். இது கரையில் மோதும் போது பெரும் அழிவு ஏற்படும். நேற்று நிகழ்ந்த அதிர்வு subduction zoneஇல் இருந்து 100 மைல்(160கி.மீ) தொலைவில் நிகழ்ந்தது. இதனால் இது ஒரு பூமித் தகட்டுக்குள்(intraplate) நிகழ்ந்த அதிர்வாகும். இரு தடுகள் மோதுப்படுகையில் ஏற்படும் அதிர்விலும் பார்க்க ஒரு தகடு தனக்குள் ஏற்படுத்தும் அதிர்வு தாக்கம் குறைந்தது.
2004 அதிர்வு இந்தியத் தகடும் ஒஸ்ரேலியத் தகடும் சந்திக்கும் இடத்தில் நடந்தது. 2012 அதிர்வு இந்தியத் தகட்டில் நடந்தது.
2004 இல் நடந்த அதிர்வு இலங்கை போன்ற நாடுகளில் உணரப்படவில்லை. அது இந்தியத் தகட்டின் ஓரத்தில் நடந்தது. 2012இல் நடந்தது இந்தியத் தகட்டிலேயே நடந்ததால் அந்தத் தகட்டில் உள்ள நாடுகளில் அதிர்வு உணரப்பட்டது.

2004இல் நடந்த அதிர்வு 2012இல் நடந்த அதிர்வுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு சக்தியை வெளிவிட்டது.

பக்கவாட்டு உரசலால் வரும் அதிர்வு ( strike-slip event)
நேற்று நடந்த அதிர்வில் ஏற்பட்ட ஆக கூடிய அளவு அலையின் உயரம் மூன்றடி மட்டுமே. இது இந்தியத் தகட்டின் மேற்பரப்பில்(crust) உள்ள குறைபாட்டால் தகட்டில் ஒரு பக்கவாட்டு அசைவு ஏற்பட்டதால் உருவான அதிர்வே நேற்று நடந்தது. இந்த அதிர்வு 2004இல் ஏற்பட்ட அதிர்விலும் சிறியதே.
பக்கவாட்டு உரசல்
 ஒரு தகட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகள் தொடர்ச்சியாக ஒரே சீரான உறுதியுடன் இருக்காமல் அவை வேறு வேறு உறுதிப்பாட்டுடன் இருப்பதால் தகட்டின் மேற்பகுதியில் குறைபாடு ஏற்படும் இதனால் தகட்டின் இருபகுதிகள் பக்கவாட்டாக ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும். இந்த உரசல் பெருமளவு கடல் நீரை மேல் நோக்கித் தள்ளாது. இதனால் பக்கவாட்டு உரசலால் பாதிப்புக் குறைவு. இந்தப் பக்கவாட்டு உரசல் தகட்டின் மேற்பகுதியில் ஒரு அதிர்வு அலையை(நீரலை அல்ல)  இயக்கத்தை உருவாக்கும். இந்த அதிர்வு அலை நீண்டதூரம் வரைச் செல்லும். இது lateral movement எனப்படும். பக்கவாட்டு அசைவு.

சுனாமி உருவாகும் அதிர்வு :
இரு தகடுகள் தண்ணீருக்குக் கீழ் சந்திக்கின்றன.

ஒரு தகடு மற்றத் தக்கட்டை மேல் நோக்கி அழுத்துகிறது. அதனால் அதிர்வு உருவாகிறது

அதிர்வு மேல் நோக்கி கடல் நீரைத் தள்ளுகிறது

மேல் நோக்கித் தள்ளப்பட்ட நீர் ஆழிப் பேரலையாகிறது.

மேல் நோக்கித்தள்ளப்படுவது vertical movement எனப்படும்.


சுனாமி உருவாக்காத அதிர்வு
பூமித் தகடுகளின் ஓரத்தில் நடக்காமல் தகடுகளின் மத்தியில் நடந்த பூமி அதிர்வுகளில் நேற்று நடந்த அதிர்வு இது வரை அ|றியப்பட்ட அதிர்வுகளில் பாரியது எனப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான அதிர்வாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.

நேற்று நடந்த ஒரு சில நிமிடங்களுக்குள் U.S. Pacific Tsunami Warning Center சுனாமி வருவதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டது. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் சுனாமி எச்சரிக்கையை உணர்த்தின.

5 comments:

Unknown said...

thanks 4 valuable insights.

Unknown said...

Useful info...

பி.அமல்ராஜ் said...

நல்லதொரு அறிவியல் பதிவிற்கு நன்றி.

COOLS said...

veltharma oru sakalakala vallavan

Anonymous said...

GOOD

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...