இப்போது இலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன:
- பொருளாதார நெருக்கடி: உலகெங்கும் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சனைகள் இலங்கையிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இப்போது தனது வெளிநாட்டுச் செலவாணிக்கு மத்திய கிழக்கில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிபுரியும் அப்பாவிகளின் உழைப்பிலேயே தங்கியுள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் இந்த வருமானம் பாதிக்கப்படவும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் வீழ்ச்சியடையவும் இலங்கையின் அந்நியச் செலவாணி இருப்பு விழ்ச்சி கண்டது. இதனால் இலங்கையின் நாணய மதிப்பு விழ்ச்சியடைந்தது. அதைத் தடுக்க இலங்கை மத்திய வங்கி தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பை விற்றது. அது மேலும் அந்நியச் செலவாணிக் கையிருப்பைக் குறைத்தது. இந்தப் பிரச்சனைச் சுற்று இலங்கையின் நாணய மதிப்பில் மேலும் தாக்கம் ஏற்பட அதைத் தடுக்க முடியாத நிலையில் இலங்கை மத்திய வங்கி இருக்கிறது. இதனால் பாரிய விலைவாசி அதிகரிப்பு இலங்கையில் ஏற்படத் தொடங்கிவிட்டது. அத்துடன் விவசாயிகளின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தப் போகிறது.
- தொழிற்சங்கப் பிரச்சனை: பல தொழிற்சங்கங்கள் இப்போது ஆட்சியாளர்களுக்கு எதிராக மாறியுள்ளன. தொடர் வேலை நிறுத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
- மாணவர்கள் பிரச்சனை: பல மாணவர் அமைப்புக்கள் ஆட்சியாளரகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் அவர்களது ஆர்ப்பாட்டங்களை அரசு கையாண்ட விதங்கள் அவர்களின் ஆத்திரத்தை கிளறி விட்டுள்ளன.
- உட் கட்சிப் பிரச்சனை: ஆளும் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் ஆட்சியாளர்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளையும் மக்கள் எதிர்ப்புக்களையும் கையாண்ட விதங்களை இட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். சிலர் தாம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் மிரட்டுகின்றனர்.
- பன்னாட்டு அரங்கில் பெரும்பாடு: இப்போது மஹிந்த ராஜபக்சவை தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் பிரச்சனை மனித உரிமை மற்றும் போர்க்குற்றப் பிரச்சனை. இது தற்போது நடக்கும் ஜெனிவா மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடருடன் முடியப்போவதில்லை. இப்பிரச்சனை இன்னும் அதிகரித்துச் செல்லும்.
1 comment:
உங்கள் பதிவுகளை www.hotlinksin.com இணையதளத்தில் இணைத்திடுங்கள்.
Post a Comment